Saturday, March 04, 2006

என்ன தான் சாப்பிடுகிறார் கலைஞர்?

வெள்ளை பனியாரம், கவுன் அரிசி, சாம்பார், தயிர்சாதம்: இது தான் கலைஞரின் மெனு. எப்படி தெரியும் என்கிறார்களா? எனக்கு தெரிந்தவர்கள் வீட்டில் இருந்து தான் அவருக்கு சாப்பாடு போகிறது.
எந்த நேரம் படுக்கைக்கு சென்றாலும் அதிகாலையிலேயே எழுந்து விடும் பழக்கம் கொண்ட கலைஞரின் தினசரி வாழ்க்கை படு சுறுசுறுப்பாகவே இருக்கிறது. அவருடைய வேகம் பிரமிக்க வைக்கிறது.ஒய்வு என்பது அவருக்கு அரிதாகவே கிடைக்கிறது. சில நாட்களில் அவர் படுக்கைக்கு செல்ல இரவு மணி 1 ஆகிவிடுகிறது என்று கட்சிகாரர்கள் கூறுகிறார்கள்.
ஆயிரம் குறை சொன்னாலும் , அரசியல்வாதிகளிம் ஊக்கம் பாரட்ட தக்கது. இந்த அளவு ஊக்கத்தோடு கடுமையாக உழைத்தால் எந்த துறையிலும் முன்னேறிவிடலாம்.

3 comments:

முகமூடி said...

கவுன் அரிசி என்றால் என்ன? சாதாரண அரிசிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

Radha N said...

இந்த தள்ளாத வயதிலும் அவரது சுறுசுறுப்பு பிரம்மிக்க வைக்கிறது.

arunagiri said...

அவரே சொல்லியிருக்கிறார்- அவரது சுறுசுறுப்புக்கும் ஆரோக்கியத்துக்கும் யோகாதான் முக்கிய காரணமாம். தேசிகாச்சாரி என்ற பார்ப்பனர்தான் அவருக்கு யோகா குரு.