Sunday, March 19, 2006

தாடியும் அரட்டை அரங்கமும்.

வேலைக்கு வந்த நாளில் இருந்து ரெகுலராக சவரம் செய்வது வழக்கமாகி விட்டது. எனது மேன்ஷனில் இருந்த மேனேஜர் ஒருவர் தினந்தோறும் முக சவரம் செய்வது கண்டவுடன், நான் உடனடியாக அதனை கடை பிடிக்க ஆரம்பித்து விட்டேன்.

ஆனால் தாடி வைத்திருப்பவர்கள் மீது தனி கவனம் செலுத்துவது உண்டு. அலுவலக நண்பர்களில் சிலர் தாடி ரெகுலராக வைத்திருப்பது உண்டு. சிலர் ப்ரென்ஞ் பியர்டு, சிலர் சாதாரண தாடி, மற்றும் சிலர் திரைபட நடிகர்கள் வைத்திருப்பது போல தாடி வைத்திருப்பது உண்டு.

எதனால் தாடி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்ட போது, சிலர் தனி அடையாளம் என்று, சிலர் அது தான் சிறப்பான தோற்றத்தை கொடுக்கிறது என்றும் , சிலர் லேட்டஸ்ட் ஃபாஷன் என்றும் கூறினார்கள்.

தாடி ஒரு சில இடங்களில் தனி அந்தஸ்தாக கருத படுகிறது. கிரியேடிவ் உலகத்தில் இன்டெலெக்சுவல் க்ரூப் ஜோல்னா பையுடன் தாடியையும் அடையாளமாக வைத்திருக்கிறார்கள். ஆன்மிக உலகத்தில் தாடி மிக பரவலாக பயன்படுத்த படுகிறது. ஜேசுதாஸ் போன்று தாடி வைத்து கொண்டு திரிந்த பாடகர்களை நான் பார்த்துள்ளேன். இவர்களுக்கு தாடி என்பது தங்களுடைய விருப்பமாக இல்லாமல் , செயற்கையாக வைத்து கொண்டு திரிவதாக எனக்கு பட்டது.

மீசையை போல அல்லாமல் தாடி தினசரி எடுத்து விட வேண்டிய ஒன்றாக எனக்கு தோன்றுகிறது. தாடி இல்லாமல் இருப்பது சுறுசுறுப்பின் அடையாளம். வேண்டுமேன்றே தாடி வைத்து கொண்டு திரிவது அரட்டை அரங்கத்தில் உணர்ச்சி வசப்படுவர்கள் போல எனக்கு பார்க்கவே சகிக்கவில்லை. .(சில பேர் வேண்டுமேன்றே கே.பி.என்னில் ஆங்கிலத்தில் பேசுவது போல)

எனக்கு பிடிக்காத, பிடிக்காத என்றால் சற்றும் பிடிக்காத, ஒரு நொடி கூட பார்க்க பிடிக்காத விஷயங்கள் இரண்டு : தாடி, அரட்டை அரங்கம்.

தாடி,அரட்டை அரங்கத்தை ரசிப்பவர்கள் இங்கே உண்டா?

2 comments:

Muthu said...

பாலு,

இந்த டெம்பிளேட் நல்லா இருக்கு..கண்ணை உறுத்தவில்லை..இனி நிறைய பேர் வருவாங்க :)))))

மற்றபடி எனக்கும் அரட்டை அரங்கம் பிடிக்காது..ஆனா தாடிகாரங்களை ஏன்யா வெறுக்கறீங்க? பாவம்யா அவங்க...

என்ன மாதிரி தாடி விட ஆசை இருந்தும் மேலிட பர்மிஷன் இல்லாம இருக்கறவங்களை என்ன சொல்வீங்க?

பாலசந்தர் கணேசன். said...

பாலு,

இந்த டெம்பிளேட் நல்லா இருக்கு..கண்ணை உறுத்தவில்லை..இனி நிறைய பேர் வருவாங்க :)))))

மற்றபடி எனக்கும் அரட்டை அரங்கம் பிடிக்காது..ஆனா தாடிகாரங்களை ஏன்யா வெறுக்கறீங்க? பாவம்யா அவங்க...

பாராட்டுக்கு நன்றி முத்து(தமிழினி) அவர்களே, தாடி காரர்களை நான் வெறுக்கவில்லை. ஆனால் ஒரு செயற்கையான தோற்றம் தருவதற்காக தாடி வளர்ப்பவர்களை காண சகிக்கவில்லை. அரட்டை அரங்கம் போல.