பல்வேறு புத்திசாலிகள் காசுக்காக அதிரடி வசனங்கள் எழுதி கொடுக்க,அதை வாழ்க்கையை ஒட்டி வந்த ரஜினி இடையில் அரசியலிலும் வெளிப்படையாக 1996 இல் ஜெயலலிதா எதிர்ப்பு நிலை எடுத்தார். அது உண்மையில் பாராட்ட பட வேண்டிய விஷயம். ஆனால் ஜெயலலிதா தோற்றதே அதனால் தான் என்று நம்பும் வண்ணம் மீடியா பில்ட்-அப் செய்தது.
அவரை சீண்ட ஆளே இல்லாமல் இருந்த போது, ராமதாஸ் மிக தைரியமாக அநாகரிகமான வார்த்தைகளோடு அவரை மிக வன்மையாக கண்டித்தார். பாராளுமன்ற தேர்தலில் ஆழம் தெரியாமல் ரஜினி காலை விட , அவருடைய ஆதரவு நிலை கேலி கூத்தானது.
இப்போதும் ரஜினி ஒரு அறிக்கை விட்டுள்ளார். நீங்க எக்கேடு வேணா கெட்டு போங்க, என்னுடைய அடித்த படம் சிவாஜி நன்றாக வெளி வந்தா போதும் என்கிற ரீதியில் போகிறது அந்த ஸ்டேட்மெண்ட். முள்ளும் மலரும் படத்தில் இடம் பெற்ற ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்கிற பாடல ஞாபகத்திற்கு வருகிறது.
ரஜினி முதலில் அரசியலில் ஆர்வம் இழந்து விட்டால் தனது நிலையை தெளிவு படுத்தி இருக்கலாம். நடிகன் நாட்டுக்கு சமூகத்திற்கு கண்டிப்பாக பயன்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவது என்று முடிவை அவர் எடுத்து விட்டதாகவே தெரிகிறது. அதை அவர் இரசிகர்களுக்கு தனிப்பட்ட முறையில் ரசிகர் மன்றம் மூலமாகவே தெரிவித்து விடலாம். கமல் அரசியலில் இருந்து விலகி இருக்கவில்லையா?. தனது ரசிகர்கள் மூலம் நல்ல காரியங்கள் செய்யவில்லையா? அந்த பாதையை தேர்ந்தெடுந்தால் என்ன? திட்ட வட்டமாக ரஜினி தனது முடிவை கூறுவதனால் தன்னுடயை ரசிகர்கள் மீது தான் கொண்டிருக்கும் பிடி தளர்ந்து விடும் என்கிற நினைப்பில் இருக்கிறா? அதற்காக தான் இந்த மாதிரி சிறு துளி, சிறு துளியாக அறிக்கை விட்டு காலம் கடத்துகிறாரா?
குமுதத்தில் ஒரு முறை அரசு பதில்களில் ரஜினியிடம் கேட்க விரும்புவதாக இந்த கேள்வியினை கூறியிருந்தார்கள்: அரசியலுக்கு வரவே போவதில்லை என்கிற முடிவை எப்போது அறிவிக்க போகிறீர்கள் என்று?
ரஜினி 1996 இல் அறிக்கை விட்ட போது அவர் தைரியமான , சமூக அக்கறை உள்ள நடிகராக தெரிந்தார். அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் அவரை அனுபவமில்லாத, அரசியல் தெரியாத, குழப்பவாதியாக சித்தரிக்கின்றன. ஆனால் தற்போது அவர் பணம் மட்டுமே குறிக்கோளாக உள்ள, சுயநலம் பிடித்த நடிகராக காட்சி அளிக்கிறார்.
12 comments:
ஆமாம் பாரதி அவர்களே!!!
கமல் தெளிவாக இருக்கிறார் சினிமாவை தாண்டி போவதில்லை என்பதில். அரசியலில் அவர் ஈடுபட போவதில்லை என்பதிலும் ரசிகர்களை வைத்து ஏதெனும் உபயோகமாக செய்ய வேண்டும் என்பதிலும். ஆனால் ரஜினியிடத்தில் இரண்டிலும் தெளிவில்லை. ஆனால் தன்னுடைய படங்கள் வசூலில் பட்டையை கிளப்ப வேண்டும் என்கிற வெறி அவரிடத்தில் அப்பட்டமாக தெரிகிறது.
பாலு,
உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன். பிடியுங்கள் ஒரு + குத்து...
பாலச்சந்தர்,
இந்த பதிவு குறித்த என் கருத்துக்கள் என்னுடைய இந்த பதிவுலேயே இருக்கிறதென்று நினைக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்...
தலைவர் வாய்ஸ்
BTW அடுத்த தேர்தலுக்கு கூட நீங்கள் இதே பதிவை மறுபதிவு செய்யலாம். நிச்சயம் இதே போன்ற ஆதரவு(!!!) பின்னூட்டங்கள் உங்களுக்கு அங்கேயும் வரும்.
--Vignesh
பாலச்சந்தர்,
இந்த பதிவு குறித்த என் கருத்துக்கள் என்னுடைய இந்த பதிவுலேயே இருக்கிறதென்று நினைக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்...
தலைவர் வாய்ஸ்
BTW அடுத்த தேர்தலுக்கு கூட நீங்கள் இதே பதிவை மறுபதிவு செய்யலாம். நிச்சயம் இதே போன்ற ஆதரவு(!!!) பின்னூட்டங்கள் உங்களுக்கு அங்கேயும் வரும்.
--Vignesh
குழப்பம் ரஜினிக்கு இல்லை; உஙளுக்குத்தான் என்று தெளிவாகத் தெரிகிறது!
அவர் அறிக்கை 'சத்யநாராயணா' மூலம், ரசிகர் மன்றங்களுக்குத்தான் அனுப்பப் பட்டதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன!
என்ன செய்வது, அவர் 'பால. கணேசன்' ஆக இல்லாமல், ரஜினியாக இருந்து தொலைத்து விட்டதால், இந்த பாழாய்ப் போன பத்திரிகைகள் அதையும் முக்கிய செய்தியாகப் போட்டு, ரஜினி தி.மு.க. வை ஆதரிக்கவில்லை என்று தெளிவாக சொல்லிவிட்டது கண்டு நீங்கள் ஆத்திரப்படுவது கண்டு, அனுதாபப்படுகிறேன்!
ஏன் இத்தனை முரண்பாடுகள்! ?
ஒரு சமயம் "நடிகன் நாட்டுக்கு சமூகத்திற்கு கண்டிப்பாக பயன்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை "என்கிறீர்கள்!
கடைசியில், 'சுயநலம் பிடித்தவர்' என்று குழம்புகிறீர்கள்1
நல்ல வேடிக்கை!
இந்த தேர்தல் வந்து எத்தனை பேரை என்னவெல்லாமாக ஆக்கப் போகிறதோ!!?
நடிகன் நாட்டுக்கு சமூகத்திற்கு கண்டிப்பாக பயன்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை
எஸ்கே அவர்களே,
நடிகன் நாட்டுக்கு பயன்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் ரஜினி இந்த தேர்தல் மட்டுமல்ல, எப்போதும் அரசியலுக்கு வர போவதில்லை என்றே தெரிகிறது. ஆனால் அதனை திட்ட வட்டமாக கூறாமல் இழுத்தடிக்கிறார். இதன் காரணம் அவ்வாறு செய்தால் ரசிகர்கள் மீது தனது பிடி தளர கூடும் என்றே கருதுகிறார். அதனால் தான் இந்த இழுத்தடிப்பு வெட்டி வேலை. இதை தான் சுயநலத்திற்காக ரசிகர்களை பயன்படுத்துவதாக கூறியுள்ளேன். எனவே முரண்பாடாக படவில்லை.
"ரஜினி தி.மு.க. வை ஆதரிக்கவில்லை என்று தெளிவாக சொல்லிவிட்டது கண்டு நீங்கள் ஆத்திரப்படுவது கண்டு, அனுதாபப்படுகிறேன்"
நான் ஆத்திரம் படுவதாக நீங்கள் கூறியுள்ளது தவறு. நீங்களாக செய்து கொண்ட தவறான யூகம் அது. கருத்து கூறியதற்கு நன்றி எஸ்கே அவர்களே. அடிக்கடி வாருங்கள். கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாம்.
அவர் சிறந்த entertainer.நல்ல மனிதர்[பாபா படத்தில் வினியோகதஸ்தர்களுக்கு ந்ஷ்டத்தை ஈடு கட்டினார்]
அவர் இரசிகர்களின் சந்தோஷத்திற்கு குறுக்க நிற்க வேண்டாம் என்று நினைத்திகலாம்[இல்லாவிடில் தியேட்டரில் வருமானம் குறைந்துவிடும் என்று தெரிந்ததே].ஏனெனில்,அவன்தான் தேர்தலில் நிற்க/வெல்ல வேண்டும் என்று துடித்துக் ண்டிருக்கிறான்.அவர் இவ்வளவு சொல்லியும்,தாங்களாகவே வேட்பாளரை நிறுத்துவோம் என்று சத்திய நாராயணாவுக்கு தீர்மானம் அனுப்பிக் கொண்டிருக்கிறான்[பார்க்க கடந்த் வார ஜு.விகடன்].ஒவ்வொரு தேர்தலின்போதும் இரசிகனுக்கு தேர்தல் ஜுரம் பற்றிக் கொள்ளும். அவனுக்கும் வேறு வேலை வேண்டுமே.
விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்திற்காக பணத்தை திருப்பி கொடுத்தது நல்ல முன்மாதிரியே.ஆனால் இந்த பதிவு அதற்காக அல்ல. அரசியலில் ஈடுபட போவது இல்லை என்று திட்ட வட்டமாக அறிவித்தால் அவர், ரசிகர்கள் மீது பிடி தளரும் , அதனால் கலெக்ஷன் அடிவாங்கும் என்று கருதுகிறார்(நீங்கள் அதை ஒத்து கொள்கிறீர்கள்.) அதனால் தான் இந்த மாதிரி அவ்வப்போது அறிக்கைகள் வெளியாகின்றன. கமல் அல்லது விஜயகாந்த் மாதிரி திட்ட வட்டமாக ரஜினி முடிவை அறிவிக்காமல் இருப்பதற்கு காரணம் கலெக்ஷன் மீது அவர் கொண்ட ஆசை. பணம் நிறைய சம்பாதித்தாகி விட்டது . இனிமேலாவது நல்ல கதை உள்ள படங்கள் பண்ணலாமே என்று கமல் ரஜினிக்கு அறிவுரை படையப்பா படத்திற்கு அப்புறம் கூறிய போது அதற்கு ரஜினி கூறிய பதில் :படையப்பா தான் எல்லாருக்கும் சோறு போடுகிறது. திரைப்பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர் பற்றி கவலை படிகிற , அக்கறை காட்டுகிற ரஜினி , ஒரு இலாபமும் இல்லாமல் தன் பின்னர் சுற்றிக் கொண்டுள்ள ரசிகர்களை பற்றி கவலை படமால் அவர்களை கலேக்ஷன் மெஷின்களாக கருதுவது அநியாயம்.
தயாரிப்பாளர்கள் , வினியோகஸ்தர்கள் மீது இவர் காட்டுகிற அக்கறையின் காரணம் : அவர்களின் நம்பிக்கை இவருக்கு அடுத்து படங்கள் பண்ண அவசியம். அதில் 10000 இல் 1 பங்கு ரசிகர்கள் மீது காட்டலாம்.
நீங்கள் கூறியது
\\ரஜினி கூறிய பதில் படையப்பா தான் எல்லாருக்கும் சோறு போடுகிறது
.........\\
எல்லோருக்கும் தெரிந்த்தே, அந்த அப்பாவி ரகசிகனைத் தவிர.வேண்டுமானால் ஒன்று செய்யலாம்.ஒரு work-around.பேசாமல் விஜயகாந்த்துடன் ஒரு கூட்டணி போட்டுக் கொள்ளலாம்.
ரசிகனுக்கு வேலைக்கு (கட்சி கொடி,தோரணம் கட்டுவது)க்கு வேலை.தேர்தலில்.
(10 லட்சம் உள்ள)ரசிகனுக்கு சீட்.ரசிகர்களையும் தக்க வைத்துக்கொள்ளலாம்.
well said..பாலசந்தர் கணேசன்
உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன். பிடியுங்கள் ஒரு + குத்து...
ரஜினி தெளிவான, நழுவுகிற (விவரம்தான்) முடிவை எடுத்துள்ளார்.
அவரை கடவுளாகிய நம்பிய, நம்புகிற அவரது வசூல் இயந்திரங்களின் பாடுதான் இனி திண்டாட்டம்.
இப்படி நழுவுகிற முடிவை எடுக்கத்தான் இமயமலை சென்று, பல நாட்கள் யோகநிலையில் இருந்து, தியானத்தில் ஆழ்ந்து, கஷ்டப்படுகிறாரோ?
அவர்(வியாபாரி) அவருக்கு தேவையானவற்றில்(பணம்) தெளிவாகத்தான் இருக்கிறார். அவர் ரசிக மகாசனங்கள்தான் தேர்தல் போட்டியில் கலந்துகொண்டேயாக வேண்டும் என்ரறு துடித்துக்கொண்டிருக்கிறார்கள்[பார்க்க இந்த வார் ஜு.விகடன்]. எல்லா தொகுதியிலும் 30,000 வாக்குகள் வாங்குவார்களாம். இதற்கு தலைவரே[ரஜினி) தேவையில்லையாம்.இப்போது சொல்லுங்கள். ரஜினி அரசியலுக்கு வர மாட்டான் என்று சொன்னால் கேட்கவா போகிறார்கள்.
Post a Comment