Thursday, March 30, 2006

தி.மு.க இருக்காது.

தி.மு.க விற்கு இதுவே கடைசி தேர்தல் என்று ஜெயலலிதா கூறியிருப்பது அவருடைய ஆணவத்தின் உச்சகட்டமா அல்லது ஒரு மனரீதியான தாக்குதலா? அவர் ஆணவத்தில் கூறியிருந்தாலும் கூட அது ஒரு மனரீதியான தாக்குதலாக அமைகின்றது.
குமுதத்தின் கருத்து கணிப்புகள் அவருக்கு சாதகமாக அமைந்த்துள்ளது. முதல் 2 ரவுண்டுகளில் பெருவாரியான தொகுதிகளில் அ.தி.மு.க விற்கு சாதகமாக அமைந்துள்ளது. கூட்டணி கணக்குகளை மீறி அவர் வெற்றி பெற்றால் அது சாதனை தான். ஆனால் 1991 தி.மு.க அடைந்த படுதோல்வியின் போதும் இந்த மாதிரிதான் அனைவரும் நினைத்தார்கள். தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 1996 இல் அ.தி.மு.க அடிவாங்கிய போது அனைவரும் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை முற்றுபுள்ளி வைக்க பட்டது என்றே கருதினார்கள். அந்த அளவுக்கு அவருடைய இமேஜ் காலியாகி இருந்தது. ஆனால் அதனையும் தாண்டி 5 வருடத்தில் ஆட்சியை பிடித்தார்.
என்ன அடி வாங்கினாலும் இந்த இரண்டும் மீண்டும் மீண்டும் வந்து விடும். காரணம் அடுத்தவர்கள் செய்கின்ற தவறுகள். எனவே ஜெயித்தாலும் தோற்றாலும் இந்த கட்சிகள் மீண்டும் மீண்டும் தொடரும்.
தி.மு.க இருக்காது என்று ஜெயலலிதா விட்ட அறிக்கைக்கு சூடான பதில் எதுவும் வரவில்லையே!... தி.மு.க பயந்து விட்டதா?. ரன் படத்தில் வில்லனிடம் மாதவன் இறுதியில் சவால் விடும் காட்சியையும் அதன் பின்னர் வில்லன் காட்டும் ரியாக்ஷனையும் நினைத்து பாருங்கள். பொருத்தமாக இருக்கும்.

9 comments:

Karthik Jayanth said...

ஒரு மனரீதியான தாக்குதல் போலவே தோன்றுகிறது. இது வரை பதில் கடிதமோ, அறிக்கையோ வராதது, இதையே காட்டுகிறது.

VSK said...

//என்ன அடி வாங்கினாலும் இந்த இரண்டும் மீண்டும் மீண்டும் வந்து விடும். காரணம் அடுத்தவர்கள் செய்கின்ற தவறுகள். எனவே ஜெயித்தாலும் தோற்றாலும் இந்த கட்சிகள் மீண்டும் மீண்டும் தொடரும்.//

// //

இதெல்லாம் உங்கள் மன பாதிப்பின் உருவம் என நான் நினைக்கிறேன்.

கலைஞருக்கு வயதாகி விட்டது.
இம்முறை தோற்றால், மீண்டும் எழ நேரம் இருக்காது.

மற்ற தலைவர்களும் ஒன்றும் இளவயதுக்காரர்கள் அல்ல; ஸ்டாலினைத் தவிர.

கருணாநிதி இல்லாத தி.மு.க., ஸ்டாலினை எவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்ளும் என்பதும் சந்தேகமே.

ஜெ. திரும்பி வந்ததற்கு அவர் காரணமல்ல.
கலைஞரின் ஆணவ அரசியலே காரணம்.

இப்போது மாற்றுக் கட்சிகளும் வந்து விட்டன.
மக்கள் கேப்டனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

எனவே, 'ஜெயித்தாலும் தோற்றாலும் இவை இரண்டும் மீண்டும் மீண்டும் மலரும்' என்பது ஒரு சுகமான 'கனவு' அவ்வளவுதான்!

மக்கள் தொடர்ந்து மடையராக இருக்க மாட்டார்கள்!

இரு கழகங்களையும் தூக்கி எறிய வேண்டிய நேரம் வந்தே விட்டது!!

siva gnanamji(#18100882083107547329) said...

idhu oruvidha mana noi.avvalavudhan

பாலசந்தர் கணேசன். said...

எஸ்கே,
அவர்கள் நீங்கள் சொல்வது கேட்பதற்கு நன்றாக இருப்பினும், நடைமுறையாக இல்லை. கழகங்கள் இரண்டும் தான் மிக பெரிய கட்சிகள். அவ்வளவு எளிதாக அவற்றின் பிடியில் இருந்து விடுபட முடியாது. எந்திரிக்கவே எந்திரிக்காது என்று கருதப்பட்ட காங்கிரஸ் கூட இன்று 48 சீட்களில் போட்டி இடுகிறது. நாம் அனைவரும் காறி உமிழ்ந்தாலும் அரசியல் என்பது மிக கடினமான ஒன்று. அதில் தாக்கு பிடிக்க மிக்க வலிமை வேண்டும். முக்கியமாக கஜானா படு வலிமையாக இருக்கவேண்டும். இது தான் இன்றைய நிலைமை. விஜயகாந்த் இப்போதே தடுமாறுவதாக கேள்வி...

VSK said...

//கழகங்கள் இரண்டும் தான் மிக பெரிய கட்சிகள். அவ்வளவு எளிதாக அவற்றின் பிடியில் இருந்து விடுபட முடியாது.
எந்திரிக்கவே எந்திரிக்காது என்று கருதப்பட்ட காங்கிரஸ் கூட இன்று 48 சீட்களில் போட்டி இடுகிறது. //

Aren't these two statements contradicting each other?!

In 1967 also, Congress was uch an unshakable party and DMK came to power then!

Anything is possible in politics.

But. YOU don't want anyone other than DMK, I think!

பாலசந்தர் கணேசன். said...

இல்லை. எஸ்கே அவர்களே, நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் அரசியலில் வெல்ல தேவை படுபவை பதவி, பணம். காங்கிரசினால் தாக்கு பிடிக்க முடிந்ததற்கு அதுவே காரணம். ஆனால் விஜயகாந்திடம் அது இரண்டும் இல்லை. பா.ம.க போன்று கூட்டணி வைத்து பதவி பிடிக்கவும் அவர் தயாராக இல்லை. பணம், பதவி இரண்டும் இருந்தால் தாக்கு பிடித்து விடலாம். ஆனால் அதையும் தாண்டி நிற்பது தனி நபர்களுக்கு சிரமமே. கழகங்களிடம் இரண்டும் உள்ளது. நான் நடைமுறையாகவே சிந்திக்கிறேன்.

சீனு said...

//மக்கள் தொடர்ந்து மடையராக இருக்க மாட்டார்கள்!
//
ஏன்? அதை விட மோசமாக இருப்பார்கள் என்கிறீர்களா? மிகச் சரி...

VSK said...

பார்த்துக்கொண்டே இருங்கள்!
இன்னும் 9 நாட்கள் இருக்கின்றன, வேட்புமனு தாக்கல் செய்ய.
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
ஃபார்வர்ட் ப்ளாக்கும், பிஜேபியும் நீங்கள் சொல்லும் பணத்தை கொண்டு வந்து கொட்டப் போகிறது!
புதிய 6 கட்சி '3-வது அணி' வந்து கலக்கப் போகிறது!
:-))))

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

\\\\\.....பா.ம.க போன்று கூட்டணி வைத்து பதவி பிடிக்கவும் அவர் தயாராக இல்லை....\
இப்போது முதல் சுற்றில் இருக்கிறார்.அவர் பலம் எவ்வளவு என்று தெரிந்தால்தானே அடுத்த தேர்தலில் பேரம் படியும்.இல்லாவிடில் திண்டிவனத்தார் கதிதான். ஜெ. - 5 சீட்கள்வரை தருவார்.திமுக பக்கமும் போக முடியாது. அங்கே இதயத்தில்தான் இடம் இருக்கிறது நிறைய. பாஜக-வுடன் சேர்ந்தால் ஓட்டு கிடைக்காது. வேறு எங்கே போவார்?
தனியாக நிற்பதுதான் நல்லது. சீட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அடுத்த தேர்தல்வரை சொந்த வேலையைப் பார்த்துவிட்டு, கூட்டணி பேரத்துடன் தேர்தலைச் சந்திக்க வேண்டியதுதான்.