தமிழக அரசியலில் ஒழிக்க பட வேண்டிய தலைவராக நான் கருதுவது வைகோ அவர்களை. அவருடைய முதன்மையான குறைபாடு விடுதலை புலிகளின் ஆதரவாளராக இருப்பது. பொடோவில் சிறையில் சென்று பல மாதங்கள் வாடிய பின்னரும் நெஞ்சு வலி, குற்ற பத்திரிக்கை எனக்கு புரியாத மொழியில் எழுதபட்டுள்ளது என்றெல்லாம் நாடகம் ஆடாமல் சட்டரீதியாக போராடினார் என்ற மரியாதை பரவலாக வளர்ந்துள்ள நிலையில் அவர் அ.தி.மு.க தாவியிருப்பது அவர் மீதான தனிப்பட்ட மரியாதையை கடுமையாக குறைத்துள்ளது.
தி.மு.க தொண்டர்கள் கண்டிப்பாக ஜெயலலிதாவை வேண்டுமானாலும் ஏற்பார்கள் ஆனால் இனிமேல் வைகோவை ஏற்க மாட்டார்கள்.வைகோ இனிமேல் துரோகியாகவே கருதபடுவார். இவ்வளவு நாட்கள் நடைபெற்ற பல்வேறு மாநாடுகளில் வைகோவிற்கு கிடைத்த கைதட்டல்கள், ஆரவாரங்கள், ஸ்டாலினுக்கு கூட கிடைக்கவில்லை. அத்தகைய அளவு தொண்டர்களை வசியம் பண்ணிய வைகோ இன்று ஒரே நொடியில் அவர்களின் பரம எதிரியாக மாறிவிட்டார்.கலைஞருக்கு அப்புறம் யார் என்ற கேள்விக்கு பதில் கண்டிப்பாக வைகோ இல்லை.அவருக்கு கிடைக்கும் 35 சீட்களில் எத்தனையில் அவர் வெற்றி பெறுவார்? கண்டிப்பாக அவர் தி.மு.க வுடன் தொடர்ந்திருந்தால் 22 சீட்களில் 18 சீட்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்.ஆனால் இன்று அதிமுகவுடன் அவர் 35 தொகுதிகள் போட்டியிட்டாலும் எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும் அவருக்கு?
இவ்வளவு நாள் பொறுமையாக இருந்த வைகோ கடைசி நிமிடத்தில் அணி மாறி தன்னுடைய தனிப்பட்ட இமேஜ் எதிர்காலம் அனைத்தையும் கெடுத்து கொண்டார்.
23 comments:
வலைப்பதிவுகளிலிருந்தே ஒழிக்கப்படவேண்டியது இந்த ப்ளாக்
என்ன எம் ஐ டி ஜுனியர், ஒரேடியா உணர்ச்சிவசபடாதீர்கள். இவர்கள் அநியாயத்தின் மொத்த வியாபாரிகள். இவர்களுக்கு கொள்கைகள் இல்லை கொள்ளை மட்டுமே இவர்களின் கொள்கை.
Do not publish the following it is a personal message :
In my blog you left a message. For which I replied too. My T.No. is 33435. send me your phone number to sivasutty@yahoo.com. I will call you. Are u still in Canada?
well said. most of the people are feeling the same.
actually, vaiko has cleared the route for stalin.
this is going to be a sympathetic factor for kalaingar.
I think you are relative to Kalaigar....
//அவருடைய முதன்மையான குறைபாடு விடுதலை புலிகளின் ஆதரவாளராக இருப்பது. //
விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் குறைபாடுகள் உடையவர்களா ?
அவருடைய முதன்மையான குறைபாடு விடுதலை புலிகளின் ஆதரவாளராக இருப்பது
இதை நீங்கள் ஏன் குறைபாடாகக் கருதுகிறீர்கள் என விளக்க முடியுமா?
விடுதலைப்புலிகளை எதிர்ப்பவர்கள்தான் தமிழக அரசியலில் வெல்வார்கள் மற்றவரெல்லாம் தோற்பார்கள் என்ற டோண்டுவின் சித்தாந்தம் தானோ இவரதும்?
//அவர் அ.தி.மு.க தாவியிருப்பது அவர் மீதான தனிப்பட்ட மரியாதையை கடுமையாக குறைத்துள்ளது//
உண்மையாகவா? எனக்கு அப்படி தோன்றவில்லையே!!!!
எப்படியோ உங்களுக்கு இந்த பதிவிற்காவது இத்தனை பின்னூட்டங்கள் வந்ததே அது வரை மகிழ்ச்சி. இதுவரை உங்கள் பதிவுகளை அவ்வப்போது படித்தாலும் பின்னூட்டம் இடவேண்டும் என்று தோன்றியதில்லை. அவ்வளவு அருமையாக இருக்கும் ஒவ்வொரு பதிவும். இந்த பதிவில் தான் பின்னூட்டம் இடவேண்டும் என்று தோன்றியது. வாழ்த்துக்கள்.
ஹிஹி...வைகோ ஒழிக்கபடவேண்டியவர் அல்ல.
யார் ஒழிக்கபடவேண்டுமென்றால் இராம்தாஸும் மற்றும் டாக்டர் கிருஷ்னாசாமியும் நினைவுக்கு வருகிறார்கள்.
(டாடா சுமோ வண்டி டேங்கு முழுக்க டீசல் நிரப்பிவிட்ட பெட்ரோல் பங்க்காரனுக்கு பட்டாகத்தி மற்றும் இதர தமிழ் ஆயுதங்களை அவரின் தொண்டர்கள் அவரின் முன்னாலேயே எடுத்து காட்டியதை பார்த்துள்ளேன்.)
//விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் குறைபாடுகள் உடையவர்களா ? //
"விடுதலைப்புலிகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பது" என்று எழுதி இருக்கலாம்.
குமரன் அவர்களே
வாழ்த்துக்களுக்கு நன்றி. பின்னூட்டங்கள் மிக குறைந்த அளவில் வர காரணம் என்னுடைய பதிவுகளின் அளவு மற்றவர்களின் பதிவுகளின் அளவை விட மிக கம்மி.
விடுதலை புலிகள் ஜனநாயக முறைகளில் நம்பிக்கை அற்றவர்கள். அவர்கள் ஆதரவாளர்கள் தமிழக அரசியலில் வளர்வது நாட்டின் இறையாண்மைக்கு நல்லதல்ல.
குமரன்.
வைகோ அணி மாறியிருப்பது வெறும் எண்ணிக்கைகாக மட்டுமே. அவரே இந்த கூட்டணி ஒரு தேர்தல் ரீதியான கூட்டணி, கொள்கை ரீதியானது அல்ல என்று கூறியுள்ளார். வித்தியாசமானவர் என்று கருதப்பட்டவர் இன்று மிக சராசரியானவர் என்று கருதப் படுகிறார். இது எல்லா விதத்திலும் இவருக்கு பாதிப்பே.
பாலசந்தர் கணேசன்.
சமுத்திரா,
ஒழிக்க படவேண்டியவர்கள் வரிசையில் அவர்களும் வருகிறார்கள். ஆனால் முதலிடத்தில் வைகோ இருக்கிறார்.
//பின்னூட்டங்கள் மிக குறைந்த அளவில் வர காரணம் என்னுடைய பதிவுகளின் அளவு மற்றவர்களின் பதிவுகளின் அளவை விட மிக கம்மி.//
ஆகா. என்ன அருமையான கண்டுபிடிப்பு?
இனி நானும் நீளளளளளமான பதிவுகளைப் போட்டுப் பின்னூட்டங்கள் பெறுகிறேன். அதிக பின்னூட்டங்கள் பெறுவதெப்படி என்று பதிவு போட்ட குமரனுக்கே இந்த விசயம் தெரியாமற் போய்விட்டதே?
//விடுதலை புலிகள் ஜனநாயக முறைகளில் நம்பிக்கை அற்றவர்கள். //
ஜனநாயக வழிமுறைகள் என்றால் என்ன என்று ஒருமுறை சொல்ல முடியுமா?
கொழுவி,
இவ்வளவு நேரம் வைகோ தயங்க காரணம் என்ன?. ஜெயலலிதாவோடு கூட்டணி வைப்பது அவர் மனப்பூர்வமாக எடுத்த முடிவா? கருணாநிதியோடு அவர் தொடர்ந்த்திருந்தால் அவர் மீது இருந்த மரியாதை தொடர்ந்த்திருக்கும். அவருடைய எதிர்காலத்திற்கும் வசதியாக இருந்திருக்கும்.
மாற்று கருத்து என்பதையே அங்கீகாரம் செய்யாதவர்கள் அவர்கள். தன்னை தவிர மற்ற தமிழர் போராளி இயக்கங்கள் இருப்பதையே முற்றிலும் விரும்பாதவர்கள் அவர்கள்.
என் பதிவின் அளவுகள் மிக கடுமையான முறையில் விமர்சிக்க பட்டவை. ஆனால் மிக எளிமையாக எனக்கு தோன்றியதை எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளேன். பதிவர் வட்டத்தின் எதிர்பார்ப்புகளுக்கு மாறுதலாக இது அமையலாம். பின்னூட்டங்கள் குறைவாக இருக்க அது தான் முக்கிய காரணம்.
மன்னிக்கவும் பாலச்சந்தர். நீங்கள் அப்பின்னூட்டத்தை வெளிப்படுத்தியதை அறியாமல் மேற்கண்ட பின்னூட்டத்தை இட்டுவிட்டேன். ஆகவே இதையும் அதையும் சேர்த்து இரண்டு பின்னூட்டத்தையும் நிறுத்திவிடுங்கள்.
You are sitting far away from both(MK & Vaiko)of them. First, try to know what had happened between them. Then post a message with all the reason.
Post a Comment