Wednesday, March 22, 2006

இளையராஜாவின் மீது அதிர்ச்சி தரும் குற்றசாட்டு.

http://epaper.tamilmurasu.in/2006/mar/22/disp.asp?i=3_3

இந்த குற்றசாட்டினை பற்றி கேட்ட போது என்னால் நம்ப முடியவில்லை. சிம்போனி இயற்றியதாக இளையராஜா கூறுவது பொய் என்று கூறுகிற பேராசிரியர்கள் இதுவரை எந்த ஆதாரமும் காட்டவில்லை. எளிதாகவே கண்டுபிடிக்க கூடிய ஒரு விஷயத்தை செய்ய யாரும் தயங்குவார்கள். ஏற்கனவே பெரும் புகழ் பெற்ற இளையராஜா , அது அனைத்தையும் கெடுக்க கூடிய ஒரு சாதாரண காரியத்தை செய்ய வாய்ப்புகள் இல்லை என்றே நான் கருதுகிறேன்.
அந்த சிம்போனி இசை வெளியிடபடாததே அனைத்திற்கும் மூல காரணம். எழுத்தாளர் ஞானி கூட இது பற்றி எழுதி உள்ளார்.
http://www.charuonline.com/kp153.html
இளையராஜா இந்த விமர்சனங்களுக்கு பின்னரும் அமைதியாக இருப்பது இந்த விமர்சனங்கள் வலிமை பெற உதவும்.ஏன் அந்த இசை தொகுப்பு வெளி இட படவில்லை என்ற கேள்விக்கு அவர் நேரடியாக இதுவரை பதில் கூறவில்லை.
ஆனால் இப்போது அவர் மீது வந்திருக்கும் குற்றசாட்டு மிக கடுமையானது. தனக்கு கிடைத்த அழைப்பினை தமிழக மக்களோடு பகிர்ந்து கொண்ட அவர், அது நேர்மையானது என்பதை அவர் மீது அபிமானம் கொண்டவர்களுக்காக நிருபீத்தால் அது இந்த மாதிரியான சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளியாக அமையும்.

4 comments:

சிறில் அலெக்ஸ் said...

பாரதி,
உண்மையில் இந்த வெளிநாட்டு இசைக்குழுக்கள் யார் இசையமைத்தாலும் காசுக்கு வாசிக்கக்கூடியவர்கள்தான். இளையராஜா இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டவேண்டும் என அவர் ரசிகர்கள் விரும்பினால் தப்பில்லை என நினைக்கிறேன்.

G.Ragavan said...

எனக்கும் சிறில் சொல்வதில் உடன்பாடு இருக்கிறது. கண்டிப்பாக உண்மை தெரிந்தே ஆக வேண்டும். குற்றச்சாட்டு சரியான முறையில் வைக்கப்படவில்லை என்பதாலேயே அதை நிரூபிக்கத்தேவையில்லை என்று முடிவுக்கு வர முடியாது. இளையராஜா இப்பொழுதாவது வாய் திறக்க வேண்டும். விஸ்வநாதனுக்குத் தானே நேரில் சென்று போட்டுக்காட்டினார். சுப்புடுவிற்கு மகனை அனுப்பினார். நம்மைப் போன்ற ரசிகர்களுக்கு? இளையராஜா.....இது நீங்கள் பேச வேண்டிய நேரம். தயவுசெய்து பேசுங்கள்.

VSK said...

பொறாமையினாலோ, அல்லது அறியாமையினாலோ வீசி இறைக்கப்படும் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் இசைஞானிக்கு ஒன்றும் புதிதில்லை என்றாலும், 'திருவாசகம்' CD பற்றிய ஒரு குறிப்பினை இங்கு கூற விழைகிறேன்.

'திருவாசகம் இன் சிம்பொனி' என்று முதலில் அழைக்கப்பட்டாலும், இறுதி வடிவம் பெற்றபோது, அதன் பெயர் 'திருவாசகம் பை [by]இளையராஜா'-- 'எ கிளாஸிகல் க்ராஸ்-ஓவர்' என்றே அமைந்தது. இதனை 'ஓரடோரியோ'[Oratorio] என்று அழைப்பதுதான் பொருத்தம் என, இளையராஜாவும், ஜெகத் கஸ்பாரும் தெளிவாகத் தெரிவித்த பின்னரும், இப்படி சொல்வது, அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.

முதல் 'சிம்பொனி' பற்றி யாரும் எவர்க்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையென நான் நினைக்கிறேன். அது அவரது சொந்த விஷயம். வெளிவராத ஒன்றுக்காக 'மன்னிப்பு' கேட்கவேண்டும் என அலறுவது....... பேதைமை!

பாலசந்தர் கணேசன். said...

ஞானி எழுதிய பதிவினை பாருங்கள். இளையராஜாவின் திருவாசகம் பற்றிய வித்தியாசமான பதிவு அது. ஆனால் அதே சமயம் இந்த குற்றசாட்டில் உள்நோக்கங்கள் இருக்கலாம் என்பது உண்மையே. இளையராஜா தனக்கு வந்த அழைப்பினை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ஒரு தமிழன் , மிகவும் தாழ்த்த பட்ட நிலையில் இருந்து ,இவ்வளவு தூரம் உழைப்பினாலும்,தொழில் பக்தியாலும் மேலே வந்தது தமிழக மக்களுக்க்யு மகிழ்ச்சியே அளித்தது. எனவே இப்போது இளையராஜா அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று கோருவது நியாயமே.
http://www.charuonline.com/kp153.html