கடந்த ஆறு மாதமாக கனடா-மான்ட்ரியாலில் வேலை செய்து கொண்டு வருகிறேன். இதற்கு முன்னர் இரண்டு முறை வெளிநாடு சென்று வந்திருக்கிறேன். நிறைய இந்திய உணவங்கள் உண்டு என்றாலும் 99% சதவிகிதம் வட இந்திய உணவகங்கள்.
மான்ட்ரியாலில் தோசை, இட்லி கிடைத்தாலும், அவை இலங்கை தமிழர்களால் நடத்தபடுகிறவை. இங்கு கூட தென் இந்திய உணவகங்களை பார்க்க முடிவதில்லை.இத்தனைக்கும் இந்த உணவங்களுக்கு தென் இந்தியர்கள் மற்றும் வெளி நாட்டினர் தான் வருகின்றனர்.ஆனாலும் வட இந்திய உணவுகளே கிடைக்கின்றன. நடத்துகிறவர்கள் வட இந்தியர்கள். ஏன் நம்மூர் காரர்கள் வெளிநாடுகளில் உணவங்கள் துவங்க கூடாது? பலத்த வரவேற்பு அதற்கு கண்டிப்பாக கிடைக்கும்.
நான் சைவம் மட்டுமே என்று சொன்னவுடன் என்னை பலர் அதிசயமாக பார்த்தனர். இந்திய உணவங்களுக்கு என்னை அழைத்து சென்றனர். ஆசை ஆசையாக போனேன். ஏமாற்றம் அடைந்தேன்.போன மாதம் எனது மனைவி வந்து சேர்ந்தவுடன் இந்த ஏமாற்றங்கள் காணாமல் போய் விட்டன.
தென் இந்தியர்கள் பொதுவாகவே தொழில் வெளி இடங்களில் துவங்க தயங்குவார்கள் என்ற கருத்து உண்டு. அது தான் தென் இந்திய உணவகங்கள் குறைவாக இருக்கவும் காரணமாக இருக்கின்றனவோ?
4 comments:
பாலசந்தர்,இது உங்கள் முந்தைய பதிவில் இட வேண்டிய பின்னூட்டம் .2 முறை முயன்றும் எனக்கே திரும்பி வந்தது.முடிந்தால் அங்கே இடவும்.
பாலசந்தர்,
உங்கள் பதிவில் பின்னூட்டம் இடுவதில்லை என்ற முடிவை மீறி இங்கே இடுகிறேன்.
உங்கள் மேல் யாருக்கும் தனிப்பட்ட வெறுப்பு இல்லை.தொடக்கத்தில் நீங்கள் வலைப்பூ ஆரம்பித்த போது ஆர்வமாக வந்தோம் .ஆனால் உப்புச்சப்பில்லாத 2 வரிகளை பதிவுகளாக போட்டு எரிச்சல் படுத்தினீர்கள் .மாற்றிக்கொள்ளுங்கள் என்று உங்களுக்காக சொன்ன போது ,செவிமடுத்தீர்களே தவிர நடைமுறைப்படுத்தவில்லை ."கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" என்ற ரீதியில் விளக்கமும் கொடுத்து ,இனிமேல் உங்களுக்கு சொல்லி பிரயோஜனம் இல்லை என்ரு உணர்த்தினீர்கள் .இப்போது என்னைப்போல ,குமரனைப் போல பலர் அவ்வப்போது நீங்கள் என்ன காமெடி பண்ணுகிறீர்கள் என்று வந்து பார்த்து விட்டு போவதோடு சரி..பின்னூட்டமிட்டு மாட்டிக் கொள்வதில்லை ..இது தான் நிலைமை..இந்த நிலைமை சிபி-க்கும் வர வேண்டாம் என்று குமரன் சொல்லியிருக்க வேண்டும் .அதற்கு ஒரு தனிப்பதுவு போட்டு வேறு குமரனை மாட்ட வைத்து விட்டதாக நினைப்பு வேறு .அவருக்கு இது தேவை தான்.
I put a lot of comments in your previous posting. Did you receive them?
I put a lot of comments in your previous posting. Did you receive them?
பாலு,
அருமை..விவசாயிகளையும் கிராமப்புறங்களையும் நாம் ஒதுக்குகிறோம் என்ற எண்ணம் எனக்கும் உள்ளது.
மற்றபடி லஞ்சம் எல்லாம் எல்லா நாட்டிலும் உள்ளது. சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். நீதித்துறை வலுப்படுத்தப்படவேண்டும்.
this comment is for pervious post..that is not taking...keep your post's title smaller always...
iam referring title only..otherwise blogger will not allow to save the records thank you
Post a Comment