Wednesday, March 22, 2006

தேர்தலை நோக்கி

இந்த தேர்தலின் சரியான ஐயோ பாவம்- திண்டிவனம் ராமமூர்த்தி. வைகோ, திருமா வளவன் வந்த பின்பு , அதிமுக இவரை கண்டு கொள்ளவே இல்லை. இவர் 42 சீட் அதிமுகவிடம் கேட்டதாக தெரிகிறது. கிட்டதட்ட எல்லா லெட்டர் பேடு கட்சிகளும் மாபெரும் ஆதரவு ஜெயலலிதாவிற்கு தெரிவிக்க திண்டிவணம் இப்போது வேண்டாத ஆளாகி விட்டார்.
கடைசி வரை தட்டி பார்த்தும் கதவு திறக்காததால் தனித்து போட்டியிடும் நிலைக்கு வந்துள்ளது பார்வர்ட் ப்ளாக் கட்சி.மார்க்கெட் இல்லாத நிலையில் கார்த்திக்குகாக வரும் கூட்டம் மிக அதிகம். இந்த கூட்டம் ஒட்டாகுமா? இந்த கட்சி வாங்கும் ஒவ்வொரு ஒட்டினாலும் பாதிப்பு அம்மாவுக்கே.
இந்த தேர்தலின் சஸ்பென்ஸ் ஹீரொ விஜயகாந்த். குமுதம் நடத்திய கருத்து கணிப்பு இவருக்கு ஆதரவு கணிசமாக இருப்பதாக காட்டுகிறது. இவர் வாங்குகிற ஒட்டு திமுகவின் இழப்பாக இருக்கும்.
விஜயகாந்திற்கு ஆதரவு இருப்பதாக கருத்து கணிப்பு முடிவு அமைந்திருக்க காரணம் கருத்து கணிப்பு நடத்த பட்ட விதம். பொதுவாக 3 சாய்ஸ்கள் காட்டினால் கண்டிப்பாக 3 சாய்ஸ்களுக்கும் வாக்கு விழும். நமது ஊரில் கருத்து கணிப்பு எடுக்க சரியான வழி, சாய்ஸ் இல்லாத நேரடி கேள்வி: யாருக்கு ஒட்டு போடுவீர்கள். வருகின்ற பதிலை குறித்து கொள்ளவும். 5 சாய்ஸ் கொடுக்க பட்டால் 5 பேருக்கும் வாக்கு விழும் என்பதை கருத்து கணிப்பு நடத்துபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த தேர்தல் எப்படி அமைந்தாலும், கலைஞருக்கு அப்புறம் தமிழக அரசியல் எப்படி இருக்கும் என்று ஊகிக்க எளிதாகவே உள்ளது. தற்போது தோற்றாலும் ஜெயலலிதா வலிமையாகவே தொடர்வார்.(சொத்து குவிப்பு வழக்கு அவருக்கு எதிராக அமையாத பட்சத்தில்).ஆனால் வெற்றி பெற்றாலும் தி.மு.க வலிமையோடு தொடருமா?. கலைஞருக்கு அப்புறம் மற்ற கட்சிகளின் பிடி திமுகவின் மீது இறுக்கமாகும். வாக்கு விகிதம் குறைந்து கொண்டே போக திமுகவின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை.
எல்லாரும் மறந்து போன முக்கியமான கேள்வி: மேம்பாலம் வழக்கு என்ன ஆனது? கலைஞரை கைது செய்த முகமது அலி இப்போது சிறையில் இருக்கிறாரா அல்லது வெளியே வந்து விட்டாரா?

No comments: