குமுதம் ரிப்போர்ட்டரில் சோலை எழுதுகிற பக்கங்களை ரெகுலராக படிப்பவன் நான். இந்த வாரம் அவர் எழுதிய கட்டுரை என்னுடைய சிந்தனையை தூண்டியது. அதன் விளைவை இந்த பதிவு.
1. தலித் என்று அழைக்க படுகிற தாழ்த்த பட்ட மக்களின் நிலைமை இன்றும் மிக கொடுமையே. சமுதாயத்தின் கழிவுகளை அப்புறபடுத்துபுவர்களை சமுதாயம் அந்த கழிவை விட கேவலமாக பார்க்கிறது. அவர்களுக்கான உரிமைகள் காலம் காலமாக மறுக்க பட்டு வருகின்றன. அவர்களுக்காக ஒதுக்க பட்ட பஞ்சாயத்தில் கூட அவர்களால் போட்டியிட முடியவில்லை.
2. தலித் மக்கள் இயக்கங்கள் என்று ஒரு கூட்டமே உள்ளது. குறைந்த பட்சம் ஒரு 15 இயக்கங்களாவது பரபரப்பாக செயல்படுகின்றன. இவர்கள் ஒன்றாக செயல்படாததற்கு காரணம் தலைவர்களிடேயே உள்ள பல்வேறு கருத்து வேறுபாடுகள். ஒற்றுமையின் அவசியத்தை இந்த தாழ்ந்த சமுதாயம் என்று உணர போகிறது?
3. ஒரு ஜனநாயக நாட்டிலே ஜாதியின் பெயராலே மக்கள் இழிவு படுத்த படுவதும், அவர்கள் தங்களுடைய மிக சாதாரணமான விஷயங்களுக்காக போராடுவதும் சுதந்திரத்தை அர்த்தமற்றதாக்கி விடுகின்றன.
4. மதுரையில் எத்தனையோ கோயில்கள் ஆக்ரமிப்புகள் என்று சொல்ல பட்டு இடித்து தள்ள பட்டன.ஆனால் முத்துராமலிங்கம் என்ற தலைவரின் சிலைகள் கை வைக்க படவில்லை. இதில் ஆச்சரியம் இதனை கண்டித்து பத்திரிக்கைகள் கூட எழுதுவதில்லை. அந்த சமுதாயத்தினைரை பார்த்து அவ்வளவு பயமா? இந்த பயம் தான் அவர்களின் பலமா? தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பதினாலேயே தலித்கள் வெட்ட படுகிறார்கள். இவர்களை சமுதாயத்தினர் கூலி கார நாய்கள் என்றே அழைக்கிறார்கள். கூலி ஒன்றும் சும்மாக கொடுக்க படுவதில்லை என்பதை இவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள்.
ஒன்றாக இருப்பதை தலித்கள் கற்று கொள்ள வேண்டும். அவர்களுக்கு இழைக்க படும் கொடுமையை கண்டிக்க அவர்களிடையே இன்னமும் ஒற்றுமை தேவை. முதலில் அவர்களை அவர்களே ஏற்று கொள்ளட்டும். பின்னர் தான் சமுதாயம் அவர்களே ஏற்கும்.
5 comments:
பிராமணர்களைத் திட்டாமல் தலீத்கள் பற்றி நான் படிக்கும் முதல் பதிவு.
தலைவர்கலுக்கிடையேயான வேறுபாடுகள் எல்லாமொன்றுமில்லை தலைவர்களெல்லாம் தங்களை பார்த்துக்கொள்கிறார்கள். கொள்கை ஒன்றிருந்தால்தான் வேறுபாடு உருவாகும். பண்பாட்டுக் காவலர்கள் எப்போ தங்கள் சொந்த மக்களின் சோகட்ட்தை தீர்க்க புறப்படுவார்களோ?
தலித்துகளின் தற்போதைய பிரச்சினை உண்மையில் பிற்படுத்த பட்டவர்களின் அதிகார மனப்பான்மை. அதனால் தான் அவர்களுக்கு தேர் இழுப்பதில், கடையில் டீ குடிப்பதில், தேர்தலில் போட்டியிடுவதில் பிரச்சினை உள்ளது. இன்றைக்கு இரட்டை டம்ளர்களுக்கு காரணம் பிராமணர்கள் அல்ல. நான் பிராமணர்கள் தலித்துகளை ஏற்று கொண்டார்கள் என்று கூறவில்லை. குறைந்த பட்சம் கேடு விளைவிக்க தவர்களாக இருக்கிறார்கள். தலித்துகளின் மீது அவர்கள் வன்முறையை கையாளவில்லை. இரட்டை டம்ளர் உண்மையில் தீண்டாமையின் உச்ச கட்டம். சட்ட ரீதியான உச்ச கட்ட தண்டனை வழங்க பட்டால் மட்டுமே தலித்கள் சுதந்திரமாக நடமாட முடியும். தொண்டர்கள் இணைய வேண்டும் என்று நினைத்தால் தலைவர்கள் என்ன செய்து விட முடியும். மக்களிடையே கையாலாகாதாவர்கள் நாம் என்ற மனப்பான்மை மறைந்து நம்மால் மாற்றம் கொண்டு வர முடியும் என்ற எண்ணம் வளர்ந்தால் மாற்றங்கள் வரும். தலித்கள் வாழ்வு மலர வேண்டுமானால் அவர்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும். அவர்கள் ஒன்று பட்டால் மட்டுமே அது சாத்தியம்.
தலித்துகள் என்றால் பார்ப்பனர்களைத் திட்டுவார்கள் என்று நினைப்பது தவறு. எல்லா தலித்தும் பார்ப்பனரை திட்டுவதில்லை. அதேபோல எல்லா பார்ப்பனரும் நல்லவரில்லை. ஒரு தாழ்த்தப்பட்ட தலித்தை தன் விட்டுக்குள் அனுமதிக்கும் எந்த பார்ப்பனரையும் இதுவரையில் நான் பார்த்தது இல்லை. தலித்துகள் தாங்கள் பட்ட, பட்டுக் கொண்டிருக்கும் அவலங்களின் காரணமாக பார்ப்பனர்கள்மேல் கோபம் கொண்டிருக்க வாய்ப்புண்டு. எத்தனை பார்ப்பனர்கள் தலித்துகளின்மேல் ஆதரவு அளித்து அன்பு செலுத்துகிறார்கள்?
ஏன் தாழ்ந்த சமுதாயம் என்று அழைக்கிறீர்கள்? தலித் தாழ்த்தப்பட்ட சமுதாயம். ஒன்று சேரக் கூடாது என்பதற்காக அரசியல்வாதிகள் எது வேண்டுமானாலும் செய்வார்கள்
not only statues of muthuramalingam but also many temples of this caste people were not touched and everyone has "accepted" such a thing as 'reality' as it had been getting acceptance in keeripatti and other places.
i did mention such things in one my of my posts:http://dharumi.weblogs.us/2005/07/07/39
Post a Comment