Saturday, March 18, 2006

கானா உலகநாதன்

கானா உலகநாதன்

சித்திரம் பேசுதடி புகழ் கானா உலகநாதன் பற்றி சில பதிவுகள் தமிழ்மணத்தில் பார்த்தேன். அதில் பலரும் ஆர்வம் காட்டியதால் இந்த லிங்குகளை தந்துள்ளேன். சித்திரம் பேசுதடி பட விழா சமீபத்தில் ஒரு சினிமா தியேட்டரில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் விடியோவை இந்தியாகிளிட்ஸில் காணலாம்.

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/9330.html


சன் டிவி நேர்காணலில் மிக சாதாரணமாக பேசிய இயக்குனர் இந்த நிகழ்ச்சியில் மிக செயற்கையாக இருந்தது. நரேனை சாகடிச்சிருவேன் என்று டயலாக் பேசி காட்ட சொல்லி ரசிகர்கள் வேடிக்கை பார்த்தது ரசிக்கும் படி இருந்தது. நிறைய பேர் சுருக்கமாக பேசினார்கள்.

இந்த விழா கூட எளிமையாக மிகவும் ரசிக்கும் வண்ணம் இருந்தது. பார்த்தால் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்.உலகநாதன் பாடினார் . கண்ணாடி இல்லாமல் அவரை பார்த்த போது வித்தியாசமாக இருந்தது. அவரை காட்டிலும் மைக் பிடிக்கும் பையன் மிக்க சந்தோஷமாக காணபட்டார். வெற்றி இந்த மாதிரி கலைஞர்களுக்கு கொடிக்கும் சந்தோஷம் நம்மை நெகிழ வைக்கிறது. ரஜினி, விஜயகாந்த், விஜய், அஜித் என்று குப்பையான நடிகர்களுக்கு பதிலாக இந்த மாதிரியான சிந்தனையை நம்புகிற இயக்குனர்கள் வந்தால் நன்றாக இருக்கும்.

2 comments:

ilavanji said...

//ரஜினி, விஜயகாந்த், விஜய், அஜித் என்று குப்பையான நடிகர்களுக்கு பதிலாக இந்த மாதிரியான சிந்தனையை நம்புகிற இயக்குனர்கள் வந்தால் நன்றாக இருக்கும்//

போற போக்குல இப்படி வார்த்தைகளை பெரும்போக்குத்தனமா இறைச்சுட்டு போறதுல என்னத்த கண்டீங்க பிரதர்??

அதிக பின்னூட்டங்களா??

பாலசந்தர் கணேசன். said...

இளவஞ்சி அவர்களே,

நான் நினைப்பதை தான் எழுதுகிறேன். இந்த மாதிரி படங்கள் வரிசையாக வர ஆரம்பித்தால் மட்டுமே, நடிகர்கள் பின்னாடி திரைப் பட தயாரிப்பாளர்கள் ஒடுவதை நிறுத்துவார்கள். ரஜினி, விஜயகாந்த், விஜய் போன்ற நடிகர்கள் பற்றி எனக்கு உயர்ந்த எண்ணம் எதுவுமில்லை. ஆனால் , பின்னூட்டங்கள் எதிர்பார்த்து எதுவும் எழுதுவதில்லை. நான் தனித்துவமானவன் உங்களை போலவே என்று நீங்கள் மற்றவர்களுக்கு சொல்வதை தான் நான் உங்களுக்கு இங்கே சொல்ல விரும்புகிறேன்.