Monday, March 06, 2006

திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கு ஒட்டு போடுங்கள்.

ஜெயலலிதா எப்படி பட்ட தலைவராக உள்ளார்?
1. மற்றவர்களை எவ்வளவு கீழ்தரமாக வேண்டுமானாலும் நடத்துவார். அருணாசலத்தை ஒரு முறை விமானத்தில் இருந்து இறக்கி விட்டார். மணி சங்கர் அய்யரை பொது மேடையில் அவமான படுத்தினார்.

2. எவ்வளவு கீழ்தரமாக வேண்டுமானாலும் ஏசி அறிக்கை விடுவார்.சென்னா ரெட்டி பற்றி அவர் விட்ட அறிக்கை கீழ்தரத்தின் உச்சகட்டம். நாவலரை உதிர்ந்த ரோமம் என்றார்.

3.கட்சி காரர்களை அவர் நடத்துகிற விதம் சர்வாதிகாரத்தின் உச்சகட்டம். ஒட்டுமொத்த கூட்டமும் அவரை அம்மா தாயே என்று கும்பிடுகிறது. அவரோ அந்த கூட்டத்தை மனிதர்களாகவே மதிப்பதில்லை.(அந்த கூட்டம் அதை பொருட் படுத்துவதாகவே தெரிவதில்லை.)

இத்தைகைய பல மோசமான குணங்கள் இருந்தாலும் அதை மீறி அவர் வெல்வது ஒரு பெரிய ஆச்சரியமே. சென்ற முறையை விட இந்த ஆட்சி பரவாயில்லை என்பது ஒரு கேனத்தனமான ஸ்டெட்மென்ட். அவர் போன முறை செய்தது ஆட்சியே இல்லை. காட்டுமிராண்டிதனத்தின் உச்சகட்டம். ஒரு ஜனநாயக நாட்டில் அவர் 5 வருடம் ஆட்சியை மக்கள் அனுபவித்தது நமது ஜனநாயக அமைப்பில் உள்ள் குளறுபடிகள், பலவீனங்களின் எடுத்து காட்டு. எனவே அந்த முறையை விட இந்த முறை பெட்டர் என்பது (உண்மையானாலும்) கேனத்தனமே. அதை காட்டிலும் ஒரு மோசமான ஆட்சி இருக்க முடியாது.

இந்த முறையுமே அவர் மோசமான, சுயநலம் உள்ள ஆட்சியாளராகவே காட்சி அளித்தார். பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அவர் கொண்டு வந்த கட்டுபாடுகள் சீர்திருத்தங்கள் அல்ல, வேறு வழியில்லாமல் எடுக்க பட்ட முடிவுகள். தன்னை மக்கள் கண்டிப்பாக மக்கள் ஆதரிப்பார்கள் என்பது அவருடைய குருட்டுதனமான நம்பிக்கை. அதனால் தான் அவர் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தேர்தல் முடிவுகள் அவருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தன. அதற்கு அப்புறம் அவர் சலுகைகளை வாரி இறைத்தார். ஒரு பாலன்ஸ்ட் ஆன லீடராகவே அவர் காட்சி அளிக்கவில்லை.

அவர் ஆட்சியில் அவருடைய எதிரிகள் கூட குறை கூற முடியாத அம்சம் : தீவிரவாத எதிர்ப்பில் அவர் காட்டும் கண்டிப்பு. இவருடைய ஆட்சியின் ஒரே சிறப்பம்சம் இதுவே. இவர் இல்லாவிட்டால் வீரப்பன் போன்றவர்கள் இயற்கை மரணம் மட்டுமே அடைந்திருப்பார்கள்.

இவ்வளவு மத்தியிலும் இவர் இன்னமும் சக்கை போடு போட காரணம் 1. கருணாநிதி, 2. மக்களிடையே உள்ள் ஆர்வமின்மை. தமிழகத்தில் உள்ள அனைவரும் வோட்டு போட்டால் தி.மு.க , அ.தி.மு.க வை முந்தி விடும். காங்கிரஸ் மூன்றாவது இடத்தில் இருக்காது. பா.ம.க, , ம.தி.மு.க போன்றவையும் அடிவாங்கும்.

நாடு விட்டு நாடு வந்தவர்கள், அல்லது மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் ஒட்டு போடாதது தவிர்க்க முடியாதது. ஆனால் சும்மா வீட்டில் இருந்து கொண்டே இதனை தவிர்ப்பவர்கள் தங்கள் பழக்கத்தை மாற்றி கொள்ளவேண்டும்.

எல்லோரும் வாருங்கள் . ஒட்டு போடுங்கள். இந்த முறை வாய்ப்பினை தி.மு.க விற்கு வழங்குங்கள். தொடர்ச்சியாக இரண்டு முறை வாய்ப்பு கொடுத்தால் (அ.தி.மு.க ஆனாலும் தி.மு.க ஆனாலும் சரி) அவர்கள் ஆட்டம் தாங்கமுடியாது. வெளிப்படையாக இவ்வாறு எழுதுவது எனது நம்பகத்தன்மையை,நடுநிலைமையை பற்றி சந்தேகங்களை எழுப்பலாம். ஆனால் நாட்டிற்கு இதனால் நன்மை உண்டு என்று நான் கருதும் போது அந்த எண்ணத்தை வெளி படுத்துவது தவறில்லை என்றெ நான் கருதுகிறேன்.

16 comments:

Anonymous said...

Boot out both these 'kazhagams'!
They have only swindled our money, patriotism and common man's thinking capacity!
They both are not fit to come to power.
May all the Tamils vote only for a third front, if and when it is formed or only to a desrving Independent candidate!
It may sound like a blabber but go and see Rang De basanti movie for an important message.
ONLY YOU CAN MAKE A DIFFERENCE!!

பாலசந்தர் கணேசன். said...

எஸ்கே அவர்களே,
சினிமாவை மட்டும் பார்த்து விட்டு வாழ்க்கைக்கு தேர்வு சொல்லாதீர்கள். அவை கனவு பிம்பங்கள். அத்தைகைய மாற்றங்கள் வாழ்க்கையில் உணர இயலாதவை. முதலில் மக்கள் பொறுப்புணர்வுடன் செயல் படட்டும். தங்களுடைய வாக்குரிமையை பயன்படுத்த அவர்கள் முன்வர வேண்டும். அது தான் மாற்றத்தினை
நோக்கி தமிழகத்தை கொண்டு செல்லும்.

May all the Tamils vote only for a third front, if and when it is formed or only to a desrving Independent candidate!


1. நீங்கள் கூற்கின்ற மூன்றாவது அணி கண்டிப்பாக இந்த தேர்தலில் அமையப் போவது கண்டிப்பாக இல்லை. அவ்வாறு நான்கு அல்லது 40 குட்டி பெட்டிகடை கட்சிகள் இணைந்தாலும் அவை வெற்றி பெற போவதில்லை.


Boot out both these 'kazhagams'!
They have only swindled our money, patriotism and common man's thinking capacity!

2.தி.மு.க அல்லது அ.தி.மு.க இரண்டில் ஒரு அணிதான் இந்த முறை வெற்றி பெற போகிறது. நீங்கள் விரும்பாவிட்டாலும் நான் விரும்பாவிட்டாலும். நீங்கள் ப்ராக்டிகலாக இந்த விஷயத்தை அணுகுங்கள்.


எனவே இந்த இரண்டில் மக்கள் எதனை தேர்ந்தெடுப்பது?. இரண்டு பேருமே தொடர்ச்சியாக இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தால் நாட்டை சர்வநாசம் செய்து விடுவார்கள். ஜெயலலிதாவின் கொடுங்கோல் ஆட்சியினை மறந்து விட கூடாது. ஜெயலலிதா இன்னமும் மாறவில்லை. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அவர் அத்தைகைய ஆட்சியையே மீண்டும் தருவார் கண்டிப்பாக. எனவே தான் அனைவரும் ஒட்டு போட வேண்டும். தி.மு.க விற்கு வாய்ப்பு தரட்டும் என்று கூறியுள்ளேன்.

படத்தை மட்டும் பார்த்து விட்டு கருத்து கூறாதிர்கள். நடைமுறையில் உள்ள சாத்தியகூறுகளை கவனியுங்கள். என்னுடைய கருத்து ஒரு நடைமுறையான கருத்து கசப்பாக இருந்தாலும். உங்கள் கருத்து வெறும் கனவு கேட்க நன்றாக இருந்தாலும்

கருத்துகு நன்றி.

ilavanji said...

//பின்னூட்டம் இட்ட வலைபதிவர் மதிப்பிற்குரிய பாலசந்தர் கணேசன். அவருக்கு ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுவின் மனமார்ந்த நன்றிகள்| Monday, March 06, 2006 //

என்ன விளையாட்டு இது?! :)

பாலசந்தர் கணேசன். said...

டெம்ப்ளேட்டில் ஸ்டாண்டர்டாக உள்ள வாசகம் நான் பின்னூட்டம் இடும் போதும் இடம் பெறுகின்றது. இதனை சரி செய்ய முயற்சி செய்கிறேன். வழி இருந்தால் கூறவும்.

தயா said...

ராமதாஸ் போன்றவர்கள் வரக்கூடாது என சொல்லிவிட்டு திமுகவிற்கு ஓட்டுப்போடுங்கள் என்றால் என்ன அர்த்தம்?

திமுகவை விட ஜெ நன்றாகத் தான் ஆட்சி செய்திருக்கிறார். அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியபோது இது தேவை தான் என்றவர்கள் அது அராஜகம் என எப்படி நினைப்பார்கள்? என்ன இழுத்தடிக்காமல் அடுத்த நாளே மன்னித்துவிட்டிருந்தால் யாரும் வருத்தப்பட்டிருக்க மாட்டார்கள்.

நெசவாளர்கள் கஷ்டப்பட்ட போது கஞ்சி தொட்டி தொடங்கி கேவலப்படுத்தியது தானே திமுக. அதிமுக செய்தது கேவலம் என்றாலும் அது ஒரு பதிலடி தான். அதற்கு முன் தன் கட்சி மாநாடுகளில் நெசவாளர்களின் துணிகள் வாங்குமாறு கடை போட்டதும் ஜெ தான்.

அடுக்கலாம் நிறையவே இருக்கிறது. வழக்கம் போல கருப்பு கண்ணாடி மாட்டிக்கொள்வதாள் எல்லாமே இருட்டாக இருக்கிறது.

போக வேண்டும் என்றால் இரண்டு கழகங்களுமே போக வேண்டியது தான்.

பாலசந்தர் கணேசன். said...

போக வேண்டும் என்றால் இரண்டு கழகங்களுமே போக வேண்டியது தான்.

இரண்டு கழகங்களும் போக வேண்டியது தான். ஆனால் அவற்றில் ஒன்று தான் வெற்றி பெற போவது உறுதியான சூழ்நிலையில் தி.மு.க விற்கு வாய்ப்பு வழங்குவது அடுத்த 5 ஆண்டுகளுக்கு நல்லது.

போக வேண்டும் என்றால் இரண்டு கழகங்களுமே போக வேண்டியது தான்.
முதலில் அ.தி.மு.க வை அனுப்பி வைக்கலாம்.

ராமதாஸ் போன்றவர்கள் வரக்கூடாது என சொல்லிவிட்டு திமுகவிற்கு ஓட்டுப்போடுங்கள் என்றால் என்ன அர்த்தம்?
வேறு வழி தற்போதைக்கு இல்லை என்று அர்த்தம்.

அடுக்கலாம் நிறையவே இருக்கிறது. வழக்கம் போல கருப்பு கண்ணாடி மாட்டிக்கொள்வதாள் எல்லாமே இருட்டாக இருக்கிறது

இல்லை. நான் கருப்பு கண்ணாடி மாட்டி விட்டு பார்க்கவில்லை.

தயா,
நான் நாட்டின் நலன் கருதி ஒரு சரியான யோசனை. இருக்கின்ற நிலைமையில் இரண்டில் ஒன்றுதான் வெற்றி பெர போகிறது. யார் வந்தால் ரொம்ப கெட்ட ஆட்சி நடக்கும் என்பதை மனதில் வைத்து அதனை தவிர்ப்பது தான் வழி.

தயா said...

முதலில் அதிமுகவை அனுப்பலாம் என்கிறீர்கள். ஏற்கனவே வெளியே அனுப்பிவட்ட திமுகவை ஏன் மீண்டும் வரவேற்க வேண்டும்?

எதனால் திமுக வந்தால் நன்றாயிருக்கும் என ஒரு காரணம் சொல்லுங்களேன். பாமக தான் பெரிய காட்சி என பறைசாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும் அவ்வளவு தான்.

புதியகட்சிகளுக்ககு வாய்பளிக்கலாமே. ஏன் விஜயகாந்த் வரலாமே. அவர் சொல்லும் வீடு தேடி ரேஷன் ஒரு தேர்தல் கோஷம் மட்டுமே. நடைமுறைக்கு உதவாது என அவர் பதவியில் அமர்ந்ததும் உணர்ந்து கொள்வார். மற்றபடி விஜயகாந்த் நல்ல ஆட்சி தர நிறையவே வாய்ப்பிருக்கிறது.

விஜயகாந்தை சினிமா நடிகன் என்று ஒதுக்குவது மற்றுமொரு அபத்தமே. ஒரு திட்டமிடலுடன் கட்டுகோப்பாக மாநாடு தேர்தல் பிரச்சாரம் என பயணப்படும் விஜயகாந்த் அனுபவம் இல்லாவிட்டாலும் அந்த திட்டமிடல் காரணமாகவே சிறப்பாக செயல்படமுடியும்.

உங்கள் வாக்கை யோசித்து செயல்படுத்துங்கள்.

பாலசந்தர் கணேசன். said...

தயா,
சற்றே பொறுமையாக யோசியுங்கள்.
1. இரண்டில் ஒன்று தான் வெற்றி பெறபோகிறது. இது தவிர்க்க முடியாத (நீங்கள் உணர வேண்டிய) உண்மை.
2. ஜெயலலிதா இரண்டாவது முறை வாய்ப்பு கிடைத்தால் 1991-௧996 ஆட்சியை அவர் திரும்ப வழங்குவார். அவர் அடிப்படையில் மாறவே இல்லை. சலுகைகளை காட்டி மக்களை அவர் தற்போது ஏமாற்றி வருகிறார். அரசு ஊழியர்கள் மீது அவர் கடுமையாக நடவடிக்கை எடுத்தற்கு மூல காரணம்- அவர் அடிப்படையில் ஒரு சாடிஸ்ட், சர்வாதிகாரி. ஊழியர்கள் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு அவருக்கு சாதகமாகவே இருந்தது.
3. இந்த தேர்தலில் விஜயகாந்துக்கு வாய்ப்பளிப்பது ஜெயலலிதாவிற்கு சாதகமாக முடியும்.
மேலும் விஜயகாந்த் தான் செய்ய விரும்புவதை ஒரு எதிர் கட்சியாக இருந்தே செயல் படட்டும். எம்.ஜி. ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் செய்த டேமேஜில் இருந்து நாம் பாடம் கற்று கொள்ளவில்லை என்றால் நாம் திருந்தவே மாட்டோம். விஜ்யகாந்த் பொறுத்திருந்து பார்க்க பட வேண்டியாவர். உடனடியாக கவனிக்க அல்லது தேர்ந்தெடுக்க பட வேண்டியவர் அல்ல.

மேற்கொண்ட காரணங்களினால் தி.மு.க வை நான் சிபாரிசு செய்கிறேன்.

manasu said...

அம்மாவின் 91-96,2001-2006 ஆட்சியைவிட கண்டிப்பாக 96-2001 ஆட்சி இருந்தது.

நீங்கள் சொல்வது சரியே... 100% வாக்குபதிவு நடைபெற்றால் திமுக கூட்டணியே ஜெயிக்கும்.

Anonymous said...

ஐயோ. திமுக காரங்க வந்திட்டா அவங்க விடுதலைப்புலிகளை ஆதரிப்பாங்கன்னு பேசிக்கிறாங்க. அப்போ உங்க கொள்கைப்படி அவங்க வரக்கூடாதில்லையா?

krishjapan said...

I agree with Manasu. Pa. Chidambaaram told last time in 2001 to compare 96-01 and 91-96 and vote. Even if u compare with 01-06, still 96-01 seems to be better.

Anonymous said...

Dear Sri. BG,
I am not a guy who will be swayed by a movie but the theme of this movie impressed me very much.
"Don't just sit there and blame the country but do your part to change. Let YOU be the change."

This is what the RDB movie says and I am in total agreement with it.
Both the Kazhagams should be booted out and VK should be given a chance.
As he is fresh, we can expect him to give a decent rule!

யாத்ரீகன் said...

ஹீம்... கம்யூனிஸ்ட், மதிமுக, பாமக, விடுதலைச்சிறுத்தைகள்னு நாம ஓட்டு போட்டுடோம்னா.. இந்த தேர்தல் கூட்டணியிலிருந்து அவர்கள் விலகி, ஒரு வித்தியாசமான தமிழகத்துக்கு தேவையான மாற்றத்தை கொண்டுவருவாங்கனு தோணுது...

பாலசந்தர் கணேசன். said...

யாத்ரீகன்,எஸ்.கே அனைவரும் தங்களுடைய விருப்பங்களை, கனவுகளை சொல்கிறார்கள். எஸ்.கே என்ன சொல்கிறார். வைகோவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமாம். அவரே ஜெயலலிதாவோடு நிற்கிறார். அப்புறம் என்ன வாய்ப்பு கொடுப்பதை பற்றி பேச?

நடைமுறைக்கு வாங்கள். இரண்டில் ஒன்று தான் வெற்றி பேர போகிறது. அது தான் அடுத்த 5 வருடம் ஆட்சி செய்ய போகிறது. இது 100 சதவிகிதம் உறுதி. யார் வந்தால் நமக்கு நல்லது என்பதை பார்த்து ஒட்டை போடவேண்டும். நீங்கள் சொல்கின்ற மாற்றங்கள், கழகங்களை மூட்டை கட்டுவது இந்த தேர்தலில் நடக்க போவதில்லை. எனவே கனவுகளை மறந்து விட்டு நடைமுறைக்கு வருமாறு உங்களை அழைக்கிறேன்.

Anonymous said...

நான் குறிப்பிட்ட 'VK' விஜய்காந்த்; வைகோ அல்ல!

இது கூட புரியாதவர் என்று நான் நினைக்கவில்லை.

பிரச்சினையை திசை திருப்பும் முயற்சி என்றே கருதுகிறேன்.

நண்பர் திரு. 'யாத்திரீகன்' சொன்னது போல, கம்யூனிஸ்டுகள், திருமா, வைகோ, பா.ஜ.க, விஜய்காந்த் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டும் ஓட்டு போட்டு அனுப்பி வைத்தால் கூட நல்லதுதான்!

Anonymous said...

moral for kalaignar karunanidhi :"oorar pillaiyai ooty varlarthal ,athu mattumey valarum ".
oorar pillai : vaiko and others

oru kelvi : dmk il family aatchi nadakuthunnu solli solliye..namma makkal have successfully preventedStalin coming to the limelight .
Unfortunately Karunanidhi ..is not a family man who has done justice to his sons..like Ramadass, Moopanar or maybe Vaiko .
Kalaignar's sons are in the society without any directions (mu.ka muthu and
Stalin etc).
Karunanidhi is a bad father but he is blamed for running family politics .

hmmm all my congrats to these successful fathers
G.K.Moopanar -G.K.Vasan (within 2 years he was Chief)
Ramadoss : anbumani ..hmm we know his speed.

Paavam Kalaignar ..he should have concentrated on national politics ..now he has to stoop low to persons ..who were once waiting for his hand wave or glimpse ...
hmmm..if there was only a retirement age !
vote for DMK