வர வர உங்கள் பதிவுகளும் பாலசந்தர் கணேசன் பதிவுகள் அளவுக்கு சைஸ் குறைந்து கொண்டு வருவதையும் கவனித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இந்த நிலையில் போனால் அவருடைய பதிவுகளுக்கு ஏற்படும் கதி தான் உங்கள் பதிவுகளுக்கும் ஏற்படும் என்ற எச்சரிக்கையையும் கொடுக்க விரும்புகிறேன்.
இது குமரன் (http://www.blogger.com/profile/13762040) நாமக்கல் சிபி(http://www.blogger.com/profile/15516963)க்கு விட்ட செல்ல எச்சரிக்கை.
என்னுடைய பதிவுகள் அளவில் சின்னவைதான். ஆனால் அவருடைய பதிவிற்கு ஏற்பட்ட கதி தான் உங்களுக்கும் என்று குமரன் எதை கூறுகிறார்?.குமரன் விளக்குவாரா?
உண்மையில் எனது பதிவிற்கு பலர் படிக்கதான் செய்கிறார்கள். வெகு சிலர் பின்னூட்டம் இடவும் செய்கிறார்கள். ஆனால் அவர் பதிவிற்கு ஏற்பட்ட கதி என்று சொல்லும் வண்ணம் இங்கே என்ன நடந்து விட்டது? அல்லது சிபிக்கு என்ன நடக்க போகிறது.
அளவை பற்றி குமரன் கூறியதை நான் சரியான முறையில் தான் எடுத்து கொண்டேன்.ஆனால் அடுத்த சில வரிகள் தான் அவர் தெளிவாக இல்லை.
57 comments:
3000/4௪000 வார்த்தைகளில் எழுதினால் தான் பதிவு என்பது சிலரது எண்ணம். சிறிது அதிக கவனம் கிடைத்துவிட்டால், "பெரிய அண்ணன்" நினைப்பு தான்.
நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். யாருக்கும் இங்கு மற்றவரை police செய்யும் அதிகாரம் இல்லை.
அன்புள்ள அனானிமஸ்,
எழுத்து பேச்சு சுதந்திரம் உள்ள வலைபதிவு உலகில் ஒருவரை ஒருவர் கிண்டலடிப்பது சகஜம் தான்.என் பதிவுகளில் என்னை மிக மோசமாக தாக்கி வந்த பின்னூட்டங்களை(ஆபாச பின்னூடம் தவிர்த்து) அனுமதித்தே வந்திருக்கிறேன்.குமரன் பதிவில் அவரை காட்டுமிராண்டி என்று சொன்ன அனானிமஸின் பின்னூட்டத்தை கூட அவர் அனுமத்திதிருக்கிறார்.இதில் பெரிய அண்ணன் மனப்பான்மை எங்கிருந்து வந்தது?
பாலச்சந்தர் கணேசனின் ஒவ்வொரு பதிவையும் நான் படிப்பது வழக்கம்.அவர் நிறைய எழுத வேண்டும் என ஜோ உட்பட பலர் சொல்லியிருக்கின்றனர்.அவரே பல பதிவுகளில் அதை ஒத்துக்கொண்டிருக்கிறார்.
விமர்சனம் மூலம் தான் ஒருவர் வளர முடியும்.விமர்சனத்தை தவறாக எடுத்துக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லதை எடுத்துக்கொள்வதே எழுத்தாளனுக்கு அழகு
நாலு சாமி பதிவு எழுதிட்டு அப்புறம் பின்னூட்டம் அதிகம் பெறுவது எப்படி என ராமநாதன், பினாத்தல்கூட வெல்லாம் கண்டபடி பேசி உளறிக்கொட்டும் குமரன் போன்றவர்களைவிட அருமையாக சிந்திக்கத் தூண்டும் பதிவுகளாக எழுதும் நீங்கள் தேவலாம் அய்யா. கடுகு சிறுத்தாலும் காரம் போகாமல் எழுதுகிறீர்கள். அணுவைப் பிளந்து எழுகடலைப் புகுத்தி குறுகத் தரித்த பதிவுகளாய் இடுகிறீர்கள்.
வாழ்த்துகள்.
பதிவர்களுக்கிடையே கருத்துக்கள் எந்த அளவுக்கு மாறுபடுகின்றன என்பதற்கு இந்த பின்னூட்டங்களே சிறந்த உதாரணம். ஆனால் மிக முக்கியமாக குமரன் தான் என்ன சொல்ல வந்தார் என்பதனை தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.
//நாலு சாமி பதிவு எழுதிட்டு அப்புறம் பின்னூட்டம் அதிகம் பெறுவது எப்படி என ராமநாதன், பினாத்தல்கூட வெல்லாம் கண்டபடி பேசி உளறிக்கொட்டும் குமரன் போன்றவர்களைவிட அருமையாக சிந்திக்கத் தூண்டும் பதிவுகளாக எழுதும் நீங்கள் தேவலாம் அய்யா.//
if someone can write as varied as the so called sami pathivu and the most liked and read light reading such as rules on getting comments, they shld be appreciated. if that cannot be appreciated, the problem is not with the writer. my response to what vengayam has written - vengayam.
i read all of Balachander Ganesan and dont think his articles are thought provoking at all. in fact most of it is repulsive. i have seen some comments where his posts are ridiculed and i guess that is what Kumaran must have referred to.
am not having access to ekalappai and hence this english comment.
Super Gilli Anna
நம்ம பேரை தலைப்புல வச்சு ஒரு பதிவு வந்திருக்கே. ஒரு வேளை பரஞ்சோதி பண்ணுன மாதிரி யாரோ பண்ணிட்டாங்க போல இருக்குன்னு வந்து பாத்தா, பதிவு நெஜமாவே நம்மளைப் பத்தி தான். :-) அதுவும் விளக்கம் கேட்டு. ஒருத்தர் விளக்கம் கேட்டு, அந்த விளக்கம் நம்மால கொடுக்க முடியும்ன்னாவே விளக்கம் சொல்லணும்ன்னு நினைக்கிறவன் நான். அதுவும் பதிவுல நம்ம பேரைப் போட்டு அதுக்கு தப்பு தப்பா அனானி பின்னூட்டங்கள் வரும்போது பின்னூட்டம் அவசியம் கொடுக்க வேண்டியது தான். :-)
முதலில் விளக்கம்: பாலசந்தர் கணேசனுக்கே தெரியும் அவருடைய பதிவுகளின் அளவைப் பற்றி என் கருத்து என்ன என்று. அதே நேரத்தில் அவருடைய பதிவுகள் பலவற்றை அவ்வப்போது படிப்பதுண்டு. ஆனால் அவற்றிற்கு பின்னூட்டம் கொடுக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றுவதில்லை. அதனால் கொடுப்பதில்லை. இதனையும் அவருக்கு நான் சொல்லியிருக்கிறேன். அவருடைய அண்மைப்பதிவொன்றில் அந்த பின்னூட்டத்தைப் பார்க்கலாம். இது தான் நான் சொல்லும் 'கதி'.
நாமக்கல் சிபி என்னுடைய பதிவுகள் பலவற்றைத் தவறாமல் படித்துப் பின்னூட்டம் இடுபவர். நானும் அவருடைய பதிவுகள் எல்லாவற்றையும் படித்துப் பின்னூட்டம் இடுபவன். வலைப்பதிவுலகத்திற்கு அப்பாலும் நானும் அவரும் நல்ல நண்பர்கள். நான் அவருக்கு விட்ட 'செல்ல' எச்சரிக்கை இது தான். அவர் பதிவுகளும் இதே ரீதியில் சென்றால் என்னால் தொடர்ந்து பின்னூட்டம் இடமுடியாத நிலை ஏற்படும் என்பது தான் நான் சொன்ன 'கதி'. அவருக்கு என் பின்னூட்டங்கள் வேண்டுமென்றால் பதிவுகளில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற என் தனிப்பட்டக் கருத்தை என் நண்பருக்கு நான் சொன்னேன். அதனால் தான் அவரும் இன்னும் கவனம் செலுத்துகிறேன் என்றும் சொல்லிவிட்டார்.
இது இரண்டு நண்பர்கள் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டது. இதில் கிண்டலிடப் பட்டது பாலச்சந்தர் கணேசன் என்பதாலும் அவர் நேரடியாக விளக்கம் கொடுங்கள் என்பதாலும் இந்த விளக்கம் தரப்பட்டது.
இப்போது பாலசந்தர் கணேசன் இந்த பின்னூட்டத்தை எந்த வகையில் புரிந்து கொண்டார் என்பதனை அவர் பதிவில் சொன்ன 'உண்மையில் எனது பதிவிற்கு பலர் படிக்கதான் செய்கிறார்கள். வெகு சிலர் பின்னூட்டம் இடவும் செய்கிறார்கள். ஆனால் அவர் பதிவிற்கு ஏற்பட்ட கதி என்று சொல்லும் வண்ணம் இங்கே என்ன நடந்து விட்டது?' என்பதிலிருந்து தெரிகிறது. என் பின்னூட்டத்தை அப்படி புரிந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. அதாவது அவருடைய பதிவுகள் தமிழ் வலைப்பதிவுலகத்தால் புறக்கணிக்கப் படுகிறது என்ற கருத்தினைச் சொல்வதாகவும் என் பின்னூட்டத்தைப் புரிந்து கொள்ளலாம். என் பின்னூட்டம் அப்படி சொல்லவில்லை என்பதை மேலே சொன்ன விளக்கம் தெளிவுறுத்தியிருக்கும் என்று நம்புகிறேன்.
//3000/4௪000 வார்த்தைகளில் எழுதினால் தான் பதிவு என்பது சிலரது எண்ணம். சிறிது அதிக கவனம் கிடைத்துவிட்டால், "பெரிய அண்ணன்" நினைப்பு தான்.
நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். யாருக்கும் இங்கு மற்றவரை police செய்யும் அதிகாரம் இல்லை.
//
என் கருத்துகளை நான் என் பெயரில் தான் இடுகிறேன். இந்த மாதிரி அனானிமஸ் பின்னூட்டம் இடுவதில்லை. அந்த தைரியம் எனக்கு இருக்கிறது. உங்கள் கருத்தினை உங்கள் பெயரில் கூற உங்களுக்குத் தைரியம் இல்லை. இதனை என்ன சொல்வது? 'கோழைத்தனம்' என்று சொல்லலாமா?
சம்பந்தப் பட்டவர் பொறுமையாக என் விளக்கம் என்ன என்று கேட்கும் போது என்னைப் பற்றிய உங்கள் கருத்தை இங்கே அவசரப்பட்டுக் கூறிவிட்டீர்கள். அதனை உங்கள் பெயரிலேயே கொடுத்திருந்தால் உங்கள் தைரியத்தை மெச்சியிருப்பேன். அனானியாய் வந்து என்னைப் பற்றிக் கூறியிருப்பதிலிருந்தே உங்கள் கருத்தில் தெளிவு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் சொல்வது ஒரு வேளை தவறாக இருக்குமோ என்ற பயம் நன்றாய் தெரிகிறது.
சரி. உங்கள் கருத்தை தான் கொஞ்சம் அலசுவோமே! என் பதிவுகள் எதுவுமே 3000 அல்லது 4000 வார்த்தைகளில் வந்ததில்லை. அவ்வளவு பெரிய பதிவு நான் எப்போதாவது இட்டேனா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது உயர்வு நவிற்சி அணி என்று சொல்லிவிடலாம். :-)
அடுத்துச் சொல்லும் வார்த்தைகள், எனக்கு கிடைத்த 'சிறிது அதிக கவனம் (முரண் அணி?)' என்ற சொற்களும் 'போலிஸ் செய்யும் அதிகாரம்' ஏதோ பொறாமையில் வந்த வார்த்தைகளாகத் தான் தெரிகிறது. :-)
அன்பு செல்வன், உங்கள் பின்னூட்டத்தில் என்னைப் பற்றி விளக்கம் சொன்னதற்கு மிக்க நன்றி. இந்த விஷயத்தில் என்னை சரியாகப் புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள். :-)
இதோ வெங்காயம் என்ற பெயரில் இன்னொரு அனானிமஸ் 'வெங்காய'ப் பின்னூட்டம். :-) சொன்ன கருத்தினை தைரியமாக சொல்லாமல் அனானிமஸாக இட வேண்டிய அவசியம் என்ன? எதற்கு பயம்? அந்தக் கருத்தில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லையே! நான் அப்படித் தான் செய்கிறேன். நாலு சாமி பதிவு எழுதிட்டு அப்புறம் பின்னூட்டம் பெறுவது எப்படின்னு 'கண்டபடி பேசி உளறிக் கொட்டிக்' கொண்டு தான் இருக்கிறேன். இந்தக் கருத்தை கூற அனானிமஸ் ஆகவேண்டிய அவசியம் என்னவோ? :-)
நான் என் விளக்கத்தைச் சொல்லிவிட்டேன் பாலசந்தர் கணேசன். ஆனால் அது நீங்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு இருந்ததா என்று நீங்கள் தான் சொல்லவேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி ராஜேஷ். யார் நீங்கள் என்று தெரியவில்லையே. உங்களிடம் ப்ளாக்கர் அக்கவுண்ட் இல்லையா இல்லை நீங்களும் அனானிமஸ் பின்னூட்டம் இடவேண்டும் என்று இட்டிருக்கிறீர்களா?
ராஜேஷ் அவர்களே,
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. முதலில் பாலசந்தர் கணேசன் மாதிரி கெட்டுப் போய்டாதீங்க என்று குமரன் சொன்னது மாபெரும் தவறு. எழுதுபவருக்கு என ஒரு தனிப்பட்ட முறை இருக்கிறது. பாருங்கள் குழலிக்கு வன்னியர் பிடித்து இருக்கிறது. டோண்டுவுக்கு ஐயங்கார் சாதி பிடித்து இருக்கிறது. நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக எழுதாமல் இருக்கிறார்களா? கருணா என்ற பதிவர் கருணாநிதியை தரம் தாழ்ந்து தாக்கி இருக்கிறார். அதற்காக நாம் அவரை கொலையா செய்ய முடியும். எனவே எழுதுபவர்கள் எழுதிவிட்டுப் போகட்டும். நமக்கு விருப்பம் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட அந்த பதிவரின் பதிவில்போய் நமது கருத்தைச் சொல்வதில் தவறில்லை. அப்படி இல்லாமல் வேறு எங்கோ சென்று பாலசந்தர் கணேசன் மாதிரி கெட்டு போய்விடாதே என்று எச்சரிக்கை விடுவதை நியாயம் என்றா சொல்கிறீர்கள்? பாலசந்தர் அப்படி என்ன கெட்டுப் போய்விட்டார் என்று விளக்குங்களேன்.
அவரால் முடிந்த பதிவை எழுதுகிறார். படிப்பதும் பின்னூட்டுவதும் வெறுப்பதும் வாசகர் கடமை. அதற்காக அவரைப் பற்றி மோசமாக சித்தரித்தல் முறையாகாது.
குமரன் முதலில் திருந்த வேண்டும். பெரிய இவுரு மாதிரி உதார் விடுவது அவரின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.
பாலசந்தர் கணேசன். இது குமரன் இடும் பின்னூட்டம். நான் விளக்கமாக பல பின்னூட்டங்கள் இட்டேன். ஆனால் அவை என்று எனக்கே திரும்பி வந்துவிட்டன. உங்களுக்கு என் பின்னூட்டங்கள் கிடைத்ததா என்று சொல்லுங்கள். அப்படி கிடைத்திருந்தால் அவற்றை மட்டுறுத்தி அனுமதியுங்கள். கிடைக்கவில்லை என்றால் அவற்றை மீண்டும் இடுகிறேன்.
அன்புள்ள பாலச்சந்தர் கணேசன்,
நான் தமிழினி முத்து.
நீங்கள் குமரனின் இந்த வார்த்தைகளை தவறாக புரிந்துகொண்டீர்கள். நானும் உங்களுக்கு சொல்லவேண்டும் என்று நினைத்ததுதான் இது.
ஒன்றோ அல்லது இரண்டோ பதிவுகளில் செய்தியை சொல்லி அதன் பிறகு உங்கள் கருத்துக்களை சற்று விளக்கமாக போட்டீர்கள் என்றால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்.
தனிப்பட்ட முறையில் உங்களின் எத்தனையோ கருத்துக்களை நான் ரசிப்பதுண்டு. ஆனால் நீங்கள் அதை விளக்காமல் ஒரு வரியில் முடித்துவிடுகிறீர்கள் என்ற வருத்தமும் உண்டு.
படிக்கும் நண்பர்களும் உங்கள் பதிவை ஒரு செய்தியாக மட்டும் எடுத்துக்கொண்டு படிக்காமல் போய்விடுகிற அபாயமும் உண்டு.
தினமும் ஒரு பதிவையோ அல்லது இரண்டு பதிவையோ சற்று பெரிதாக உங்களுக்கே உரிய ஆர்க்யூமெண்ட்டுடன் போட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும் என்பதுதான் என் கருத்து.(விகடனில் சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பாணியில்).மற்றபடி உங்கள் உழைப்பையோ முயற்சியையோ நான் குறைத்து மதிப்பிடவில்லை.
இதை தனிப்பட்ட கடிதமாக எடுத்துக்கொள்ளவும். பப்ளிஷ் செய்யவேண்டாம்.நன்றி.
அன்புடன்
முத்து (தமிழினி)
பாலசந்தர்,
உங்கள் பதிவில் பின்னூட்டம் இடுவதில்லை என்ற முடிவை மீறி இங்கே இடுகிறேன்.
உங்கள் மேல் யாருக்கும் தனிப்பட்ட வெறுப்பு இல்லை.தொடக்கத்தில் நீங்கள் வலைப்பூ ஆரம்பித்த போது ஆர்வமாக வந்தோம் .ஆனால் உப்புச்சப்பில்லாத 2 வரிகளை பதிவுகளாக போட்டு எரிச்சல் படுத்தினீர்கள் .மாற்றிக்கொள்ளுங்கள் என்று உங்களுக்காக சொன்ன போது ,செவிமடுத்தீர்களே தவிர நடைமுறைப்படுத்தவில்லை ."கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" என்ற ரீதியில் விளக்கமும் கொடுத்து ,இனிமேல் உங்களுக்கு சொல்லி பிரயோஜனம் இல்லை என்ரு உணர்த்தினீர்கள் .இப்போது என்னைப்போல ,குமரனைப் போல பலர் அவ்வப்போது நீங்கள் என்ன காமெடி பண்ணுகிறீர்கள் என்று வந்து பார்த்து விட்டு போவதோடு சரி..பின்னூட்டமிட்டு மாட்டிக் கொள்வதில்லை ..இது தான் நிலைமை..இந்த நிலைமை சிபி-க்கும் வர வேண்டாம் என்று குமரன் சொல்லியிருக்க வேண்டும் .அதற்கு ஒரு தனிப்பதுவு போட்டு வேறு குமரனை மாட்ட வைத்து விட்டதாக நினைப்பு வேறு .அவருக்கு இது தேவை தான்.

சிறிய பதிவுகள் சைட் கவுண்ட்டர் ஏற உதவலாம்.ஆனால் நல்ல விவாதம் நடக்காது என்பதும் ஒரு கருத்து.

இந்தப் பிரச்சினைக்கு துளியும் தொடர்பில்லாத என்னை ஏன் இழுத்தீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா வெங்காயம்?
பாலசந்தர் கணேசன், ,
பின்னூட்டங்களின் அளவுக்கும் பதிவின் கருத்துக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்பது உண்மைதான். எனக்கு மிகவும் பிடித்த சில பதிவுகள் ஒரு பின்னூட்டம் கூட பெறாமல் போனதும், சும்மா காமெடி செய்தால் நூற்றுக்கணக்கான பின்னுட்டங்கள் வருவதையும் ஜீரணிக்க கொஞ்ச நாள் ஆனது. ஆனால், இந்த உண்மையை நூற்றுக்கணக்கான பின்னூட்டம் பெறும் பதிவர்கள் அறிந்தே உள்ளார்கள்.
பதிவின் அளவுக்கும் தரத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஏதோ ஒரு பத்திரிக்கையில் வெளியான கட்டுரையையோ பார்வேர்ட் செய்யப்பட்ட மெயிலகளை மறுபதிப்பு செய்தால் கூட அளவு அதிகரித்துவிடும்.
எனவே, என் கருத்தில், பிரச்சினை அளவிலோ, பின்னூட்டம் பெறாமையோ இல்லை.
விவாதக்களத்தை ஆரம்பித்து வைக்காமல் முடிப்பது போல் இருக்கிறது உங்கள் பெரும்பாலான பதிவுகளின் தொனி. இது எனக்குத் தோன்றியது. ஏற்Pஅதும் ஏற்காததும் உங்கள் இஷ்டம்.
நான் எல்லாப்பதிவுகளைப் படித்தாலும் பின்னூட்டம் இடுவது அந்நேரத்து மனநிலைப்பொறுத்தது மட்டுமே. எந்த அளவுகோலும் இல்லை, பெரும்பாலானோர் நிலையும் இதாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
நீங்கள் உங்கள் விருப்பப்படி தொடருங்கள், பிடித்தால் மற்றவர்கள் படிப்பார்கள், இல்லையென்றால் விடப்போகிறார்கள்.. கிண்டல் என்பதை மனத்துக்குள் கொண்டு போகாதீர்கள்.
What happened to my other (long) Comment?? being moderated or was it not received at all?
மறுமுறை என் பின்னூட்ட விளக்கங்களை இடுகிறேன். இந்த பின்னூட்டம் உங்களுக்கு வந்து நீங்களும் அதனை அனுமதித்தால்.
I think your blog is rejecting all the comments that are coming from a blogger account. Did you receive my previous comment which was posted 1/2 hour ago from my blogger account? If not, but if you receive this one please publish it. After seeing this in your blog, I can put my earlier comments with explanations using the 'other' option in posting comments.
- Kumaran.
நேற்று நான் இட்ட பின்னூட்டங்கள்:
நம்ம பேரை தலைப்புல வச்சு ஒரு பதிவு வந்திருக்கே. ஒரு வேளை பரஞ்சோதி பண்ணுன மாதிரி யாரோ பண்ணிட்டாங்க போல இருக்குன்னு வந்து பாத்தா, பதிவு நெஜமாவே நம்மளைப் பத்தி தான். :-) அதுவும் விளக்கம் கேட்டு. விளக்கம் சொல்றது தான் நமக்கு ரொம்பப் பிடிக்குமே. கட்டாயம் குடுத்துற வேண்டியது தான். :-)
நேற்று நான் இட்ட பின்னூட்டங்கள்:
முதலில் விளக்கம்: பாலசந்தர் கணேசனுக்கே தெரியும் அவருடைய பதிவுகளின் அளவைப் பற்றி என் கருத்து என்ன என்று. அதே நேரத்தில் அவருடைய பதிவுகள் பலவற்றை அவ்வப்போது படிப்பதுண்டு. ஆனால் அவற்றிற்கு பின்னூட்டம் கொடுக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றுவதில்லை. அதனால் கொடுப்பதில்லை. இதனையும் அவருக்கு நான் சொல்லியிருக்கிறேன். அவருடைய அண்மைப்பதிவொன்றில் அந்த பின்னூட்டத்தைப் பார்க்கலாம். இது தான் நான் சொல்லும் 'கதி'.
நாமக்கல் சிபி என்னுடைய பதிவுகள் பலவற்றைத் தவறாமல் படித்துப் பின்னூட்டம் இடுபவர். நானும் அவருடைய பதிவுகள் எல்லாவற்றையும் படித்துப் பின்னூட்டம் இடுபவன். வலைப்பதிவுலகத்திற்கு அப்பாலும் நானும் அவரும் நல்ல நண்பர்கள். நான் அவருக்கு விட்ட 'செல்ல' எச்சரிக்கை இது தான். அவர் பதிவுகளும் இதே ரீதியில் சென்றால் என்னால் தொடர்ந்து பின்னூட்டம் இடமுடியாத நிலை ஏற்படும் என்பது தான் நான் சொன்ன 'கதி'. அவருக்கு என் பின்னூட்டங்கள் வேண்டுமென்றால் பதிவுகளில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற என் தனிப்பட்டக் கருத்தை என் நண்பருக்கு நான் சொன்னேன். அதனால் தான் அவரும் இன்னும் கவனம் செலுத்துகிறேன் என்றும் சொல்லிவிட்டார்.
இது இரண்டு நண்பர்கள் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டது. இதில் கிண்டலிடப் பட்டது பாலச்சந்தர் கணேசன் என்பதாலும் அவர் நேரடியாக விளக்கம் கொடுங்கள் என்பதாலும் இந்த விளக்கம் தரப்பட்டது.
இப்போது பாலசந்தர் கணேசன் இந்த பின்னூட்டத்தை எந்த வகையில் புரிந்து கொண்டார் என்பதனை அவர் பதிவில் சொன்ன 'உண்மையில் எனது பதிவிற்கு பலர் படிக்கதான் செய்கிறார்கள். வெகு சிலர் பின்னூட்டம் இடவும் செய்கிறார்கள். ஆனால் அவர் பதிவிற்கு ஏற்பட்ட கதி என்று சொல்லும் வண்ணம் இங்கே என்ன நடந்து விட்டது?' என்பதிலிருந்து தெரிகிறது. என் பின்னூட்டத்தை அப்படி புரிந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. அதாவது அவருடைய பதிவுகள் தமிழ் வலைப்பதிவுலகத்தால் புறக்கணிக்கப் படுகிறது என்ற கருத்தினைச் சொல்வதாகவும் என் பின்னூட்டத்தைப் புரிந்து கொள்ளலாம். என் பின்னூட்டம் அப்படி சொல்லவில்லை என்பதை மேலே சொன்ன விளக்கம் தெளிவுறுத்தியிருக்கும் என்று நம்புகிறேன்.
நேற்று நான் இட்ட பின்னூட்டங்கள்:
முதலில் விளக்கம்: பாலசந்தர் கணேசனுக்கே தெரியும் அவருடைய பதிவுகளின் அளவைப் பற்றி என் கருத்து என்ன என்று. அதே நேரத்தில் அவருடைய பதிவுகள் பலவற்றை அவ்வப்போது படிப்பதுண்டு. ஆனால் அவற்றிற்கு பின்னூட்டம் கொடுக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றுவதில்லை. அதனால் கொடுப்பதில்லை. இதனையும் அவருக்கு நான் சொல்லியிருக்கிறேன். அவருடைய அண்மைப்பதிவொன்றில் அந்த பின்னூட்டத்தைப் பார்க்கலாம். இது தான் நான் சொல்லும் 'கதி'.
நாமக்கல் சிபி என்னுடைய பதிவுகள் பலவற்றைத் தவறாமல் படித்துப் பின்னூட்டம் இடுபவர். நானும் அவருடைய பதிவுகள் எல்லாவற்றையும் படித்துப் பின்னூட்டம் இடுபவன். வலைப்பதிவுலகத்திற்கு அப்பாலும் நானும் அவரும் நல்ல நண்பர்கள். நான் அவருக்கு விட்ட 'செல்ல' எச்சரிக்கை இது தான். அவர் பதிவுகளும் இதே ரீதியில் சென்றால் என்னால் தொடர்ந்து பின்னூட்டம் இடமுடியாத நிலை ஏற்படும் என்பது தான் நான் சொன்ன 'கதி'. அவருக்கு என் பின்னூட்டங்கள் வேண்டுமென்றால் பதிவுகளில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற என் தனிப்பட்டக் கருத்தை என் நண்பருக்கு நான் சொன்னேன். அதனால் தான் அவரும் இன்னும் கவனம் செலுத்துகிறேன் என்றும் சொல்லிவிட்டார்.
இது இரண்டு நண்பர்கள் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டது. இதில் கிண்டலிடப் பட்டது பாலச்சந்தர் கணேசன் என்பதாலும் அவர் நேரடியாக விளக்கம் கொடுங்கள் என்பதாலும் இந்த விளக்கம் தரப்பட்டது.
இப்போது பாலசந்தர் கணேசன் இந்த பின்னூட்டத்தை எந்த வகையில் புரிந்து கொண்டார் என்பதனை அவர் பதிவில் சொன்ன 'உண்மையில் எனது பதிவிற்கு பலர் படிக்கதான் செய்கிறார்கள். வெகு சிலர் பின்னூட்டம் இடவும் செய்கிறார்கள். ஆனால் அவர் பதிவிற்கு ஏற்பட்ட கதி என்று சொல்லும் வண்ணம் இங்கே என்ன நடந்து விட்டது?' என்பதிலிருந்து தெரிகிறது. என் பின்னூட்டத்தை அப்படி புரிந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. அதாவது அவருடைய பதிவுகள் தமிழ் வலைப்பதிவுலகத்தால் புறக்கணிக்கப் படுகிறது என்ற கருத்தினைச் சொல்வதாகவும் என் பின்னூட்டத்தைப் புரிந்து கொள்ளலாம். என் பின்னூட்டம் அப்படி சொல்லவில்லை என்பதை மேலே சொன்ன விளக்கம் தெளிவுறுத்தியிருக்கும் என்று நம்புகிறேன்.
நான் என் விளக்கத்தைச் சொல்லிவிட்டேன் பாலசந்தர் கணேசன். ஆனால் அது நீங்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு இருந்ததா என்று நீங்கள் தான் சொல்லவேண்டும்.
அன்பு செல்வன், உங்கள் பின்னூட்டத்தில் என்னைப் பற்றி விளக்கம் சொன்னதற்கு மிக்க நன்றி. இந்த விஷயத்தில் என்னை சரியாகப் புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள். :-)
அனானிமஸ் பதிவுகளைப் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. நிந்தா ஸ்துதி போல் இருக்கிறது முதல் அனானிமஸ் பின்னூட்டம். தேவையில்லாமல் பெனாத்தல் சுரேஷை இழுத்துவிட்டிருக்கிறது இரண்டாவது அனானிமஸ் 'வெங்காய'ப் பின்னூட்டம். :-) பெனாத்தலார் பதிவில் நான் இதுவரை இரண்டோ மூன்றோ முறை தான் பின்னூட்டம் இட்டிருக்கிறேன். அவரோ என் பதிவுகளில் பின்னூட்டம் இட்டதாகவே எனக்கு நினைவில்லை. வெங்காயத்தாருக்கு யாரையோ திட்ட வேண்டி இருந்திருக்கிறது. வேறு யாரையோ திட்டி இருக்கிறார். :-)
குமரன் மற்றும் அனைவரின் பின்னூட்டங்களுக்கு நன்றி,
எனக்கு வந்த அனைத்து பின்னூட்டங்களையும் பப்ளிஷ் செய்து விட்டேன். ப்லாக்கர் பிரச்சினை காரணமாக சில பின்னூட்டங்கள் வராமல் போயிருக்கலாம்.
குமரனின் கருத்து ஒரு பாதி புரிந்தது. மறு பாதி புரியவில்லை என்பதனால் தான் இந்த பதிவினை எழுதினேன். அவர் தற்போது கொடுத்த விளக்கத்தை புரிந்து கொண்டேன்.
முத்து தமிழினியும் இதை பற்றி கருத்து சொல்லி உள்ளார். ஜோ -கடற்புரத்தானும் அங்கே பின்னூட்டம் இட்டுள்ளார். அவர் இட்ட பின்னூட்டம் எனக்கு வரவில்லை. அன்பு செல்வன் என்ன கூறினார் என்று தெரியவில்லை. யாரேனும் அவர் கருத்தை கூறினால் எனக்கு உதவியாக இருக்கும்.
உங்கள் கருத்துக்களை நல்ல முறையிலேயே எடுத்து கொள்கிறேன். விரைவில் மாற்றங்கள் காண்பீர்கள்.
//கடுகு சிறுத்தாலும் காரம் போகாமல் எழுதுகிறீர்கள்//
நவீன அகத்தியர் பாலசந்தர் கணேசன் வாழ்க வாழ்க!
//அணுவைப் பிளந்து எழுகடலைப் புகுத்தி குறுகத் தரித்த பதிவுகளாய் இடுகிறீர்கள்//
நவீன திருவள்ளுவர் பாலசந்தர் கணேசன் வாழ்க வாழ்க!!!
:-)
செல்வன் இட்ட பின்னூட்டம் உங்களுக்கு வந்துவிட்டது பாலசந்தர் கணேசன். நீங்களும் அதைப் பதித்து விட்டீர்கள். இந்தப் பதிவின் இரண்டாவது பின்னூட்டம் தான் அது.
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html
குமரன்,
உங்கள் விளக்கத்திப் பார்த்துவிட்டு பிறகு பின்னூட்டலாம் என்று இருந்தேன்.
எனது பதிவுகள் தங்களால் மட்டுமல்ல பிறராலும் படிக்க மட்டுமின்றி ரசிக்கப்படவும் வேண்டுமென்ற தங்கள் அக்கறையையே உங்கள் பின்னூட்டத்திலிருந்து நான் புரிந்து கொண்டேன்.
இப்போது நண்பர் பாலசந்தரும் புரிந்து கொண்டார். மகிழ்ச்சி.
குமரன்,
உங்கள் விளக்கத்திப் பார்த்துவிட்டு பிறகு பின்னூட்டலாம் என்று இருந்தேன்.
எனது பதிவுகள் தங்களால் மட்டுமல்ல பிறராலும் படிக்க மட்டுமின்றி ரசிக்கப்படவும் வேண்டுமென்ற தங்கள் அக்கறையையே உங்கள் பின்னூட்டத்திலிருந்து நான் புரிந்து கொண்டேன்.
இப்போது நண்பர் பாலசந்தரும் புரிந்து கொண்டார். இரட்டிப்பு மகிழ்ச்சி.
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

சிபியும் வந்துட்டாரா?
வாங்க வாங்க நாமக்கல் சிபி,
இனிமே நாம "கொஞ்சம் சிறுசா எழுதுங்கப்பான்னு" குமரன் வேண்டுகோள் விடும் வண்ணம் எழுதி குமிப்போம்.
பலர் இந்த பதிவிற்காக இட்ட பின்னூட்டங்கள் எனக்கு வரவில்லை. மீண்டும் ஒரு முறை இட்டால் அவை உடனடியாக பதிவில் இடம் பெறும்.சிரமங்களுக்காக மன்னிக்கவும்.
அடடடடடா...இந்த பதிவு வாசகர் பரிந்துரையில் 24/24 பெற்று முண்ணனியில் இருக்கிறது. என் பெயரைத் தலைப்பில் கொண்ட ஒரு பதிவு இப்படி உச்சத்திற்கு சென்றது மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. :-)
அனைவரின் பின்னூட்டத்திற்கு நன்றி.
திரு. குமரன் அவர்களுக்கு நான் மீண்டும் கூற விரும்புவது: நான் உங்களிடம் வேண்டியது விளக்கம் மட்டுமே ஏனெனில் நீங்கள் என்ன அர்த்ததில் கூறினர்கள் என்பதை நான் தெளிவாக புரிந்து கொள்ள விரும்பினேன்.
ஆனால் முத்து( தமிழினி) நான் எழுதியது வருத்ததை தந்ததாக கூறியுள்ளார். நான் குமரனை வம்புக்கு இழுக்க வில்லை.அல்லது அவருக்கு சிரமம் தரும் நோக்கத்தோடும் எழுதவில்லை.
எனக்கு தமிழினியும் ஜோவும் தான் என்னை தவறாக புரிந்து கொண்டு ஒவர் ரியாக்ட் செய்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. இந்த பின்னூட்டம் இதற்கு முற்று புள்ளி வைக்கும் என நினைக்கிறேன்.
எது எப்படியோ!
நாண்கு வரியில் இருந்து நாண்கு பத்திகளாக உயர்த்திக் கொண்ட பாலச்சந்தரின் சமீபத்திய பதிவுகளுக்கு என்னுடைய மன்மார்ந்த வாழ்த்துக்கள்!
:-))))))))))))))))
குமரன் மற்றும் பெனாத்தல் சுரேஷ் ஆகியோருக்கு,
வெங்காயத்தின் அநேக நமஸ்காரங்கள்.
கடுகு சிறுத்தாலும் காரம்போகாது மற்றும் குறுகத்தரித்த குறள் என்று நான் பால்சந்தர் பதிவைக் கூறியது கண்டு எள்ளி நகையாடி நக்கல் தொனியில் பதிந்து இருக்கிறீர்கள். அப்படி என்ன குறை கண்டீர்கள் அவர் பதிவுகளில்? அளவில் சிறியதாக இருந்தாலும் அவர் தான் சொல்ல வந்ததை முறையாக நாணயமாக சொல்கிறார். உங்களுக்கும் எனக்கும் பயந்து கொண்டு அவரை பக்கம் பக்கமாக எழுதிச் சாய்க்கச் சொல்கிறீர்களா? படிப்பவருக்கு ஒரு அலுப்பினைத்தராதா பக்கம் பக்கமான பதிவுகள்?
கொஞ்சம் எழுதினால் என்ன நிறைய எழுதினால் என்ன? நல்ல கருத்தினை யார் எழுதினாலும் ரசிப்பேன் நான்.
உங்களைப்போல குழுவாக சேர்ந்து கொண்டு 'என் பதிவில் நீ பின்னூட்டினால் நான் திரும்ப ஊட்டுபேன்' என்ற அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டு அவர் எங்கும் சென்று ஊட்டுவதில்லை.
இலவசகொத்தனார் முதல் குமரன் வரை, பினாத்தல் முதல் ராமநாதன் வரை அதிகமான பின்னூட்டங்கள் எப்படி எடுப்பது என ஒரே பின்னூட்ட பைத்தியமாக அலைந்தீர்களே! அதனைத்தான் நான் இங்கு நன்றியோடு நினைவுகூறினேன்.
எங்கே நீங்களே உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், நீங்கள் அதிகமாக பின்னூட்டுவது எப்படி என பதிவிடவில்லை என? அவ்வாறு இல்லையென நீங்கள் மறுக்குங்கால் தகுந்த ஆதாரத்துடன் எடுத்துப்போட நான் ஆவல் கொண்டுள்ளேன்.
எனக்கும் பாலசந்தருக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. சிபி தன் வலைப்பதிவில் கொஞ்சமாக எழுதினால் நண்பர் என்ற முறையில் கண்டிக்க குமரனுக்கு உரிமை உண்டு. அதற்காக பாலசந்தர் பெயரினை பயன்படுத்தியது கண்டிக்கத் தகுந்தது.
உங்களைப்போல நானும் பாலசந்தரும் நண்பரில்லை. எதிரியும் இல்லை. சக பதிவர்கள். உங்களைப்போல சாதிக்காகவோ மதத்துக்காகவோ எழுதவில்லை. தொண்டரடிப்பொடிகளோ நாங்கள் இல்லை. எங்கள் மனமகிழ்ச்சிக்காக எழுதுகிறோம். குறைவாக எழுதுகிறோம் நிறைய எழுதுகிறோம் என மிரட்டிப்பேச உங்களுக்கு அதிகாரம் யார் கொடுத்தது?
//எங்கே நீங்களே உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், நீங்கள் அதிகமாக பின்னூட்டுவது எப்படி என பதிவிடவில்லை என? அவ்வாறு இல்லையென நீங்கள் மறுக்குங்கால் தகுந்த ஆதாரத்துடன் எடுத்துப்போட நான் ஆவல் கொண்டுள்ளேன்.//
வெங்காயம். அவர்கள் தான் எல்லா இடத்துக்கும் சென்று அவர்களின் பின்னூட்ட விளையாட்டைப் பற்றி வெளிப்படையாய்ச் சொல்லிக் கொள்கிறார்களே. உங்களைப் போல் உண்மைப் பெயரைச் சொல்லாமலோ அனானிமஸ் பின்னூட்டம் இட்டுக் கொண்டோ அலைகிறார்களா என்ன? தகுந்த ஆதாரம் நீங்கள் சொல்லித் தான் தெரியவேண்டுமா? அவர்களே உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தால் தங்கள் பதிவுகளின் சுட்டிகளை வெளிப்படையாக எடுத்துப் போட்டுவிடுவார்கள். நீங்கள் என்ன அதனைப் பற்றி சொல்வது?
எனக்குத் தெரிந்து பினாத்தலார் இந்த விளையாட்டு விளையாடினதாகத் தெரியவில்லை. ஏன் அவரை விடாமல் பிடித்து வைத்து கொண்டிருக்கிறீரோ? உங்களுக்கும் அவருக்கும் அப்படி என்ன பகை?
//உங்களைப்போல சாதிக்காகவோ மதத்துக்காகவோ எழுதவில்லை. தொண்டரடிப்பொடிகளோ நாங்கள் இல்லை. எங்கள் மனமகிழ்ச்சிக்காக எழுதுகிறோம். குறைவாக எழுதுகிறோம் நிறைய எழுதுகிறோம் என மிரட்டிப்பேச உங்களுக்கு அதிகாரம் யார் கொடுத்தது?
//
எனக்குத் தெரிந்த வரை இவர்களில் யாரும் சாதிக்காக எழுதியதாகத் தெரியவில்லை. குமரனும் இராமனாதனும் சமயத் தமிழைப் பற்றி எழுதுகிறார்கள். அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நீங்களும் அவர்களை கிண்டல் செய்துவிட்டுப் போங்கள். அதனை விட்டுவிட்டு எதற்காக மிரட்டுகிறீர்கள்? குமரன் கிண்டல் செய்தார். பாலசந்தர் விளக்கம் கேட்டார். குமரன் விளக்கம் சொல்லிவிட்டார். இதில் எங்கு மிரட்டல் வந்தது? நீங்களாகவே ஏதாவது கற்பனை செய்து கொண்டு பிணக்கை வளர்த்துக் கொண்டு போகிறீர்கள்.
//இலவசகொத்தனார் முதல் குமரன் வரை, பினாத்தல் முதல் ராமநாதன் வரை அதிகமான பின்னூட்டங்கள் எப்படி எடுப்பது என ஒரே பின்னூட்ட பைத்தியமாக அலைந்தீர்களே!//
என்னங்க இது? வெங்காயம். இப்படி சொல்லிட்டீங்க? அலைந்தீர்களேன்னு இறந்த காலத்தில? இன்னமும் அந்தத் தேடலில்தானே இருக்கேன். அதன் மூலமா எனக்கு எத்தனையோ நல்ல நண்பர்கள் கிடைத்திருக்காங்க. அதனால அந்த தேடலை நிறுத்தறதா இல்லை.
ஆனா அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? அதுதான் அடியேனுக்கு புரியலை. நீங்க எங்க பின்னூட்ட விளையாட்டை பயித்தியக்காரத்தனம்னு சொல்லலாம்னா குமரன் இவரோட கடுகு பதிவை கிண்டலடிக்கிறதுல ஒரு தப்பும் இல்லை.
அவரே நிறுத்திக்கிறேன்னு சொன்னப்புறம் உங்களுக்கு என்ன? அல்லது வெங்காயம் என்ன சொல்கிறார்ன்னு நான் ஒரு பதிவு போடணும்ன்னு எதிர்பாக்கறீங்களா?
போங்கப்பா. போய் வேலையைப் பாருங்க. இங்க வந்து பின்னூட்டம் போடக்கூடாதுன்னுதான் பாத்தேன். இவ்வளவு தூரம் வந்ததுக்கு அப்புறம் கணேசனுக்கு 25 பின்னூட்டமாவது வாங்கிக் குடுக்கலைன்னா எப்படி? அதனாலதான். அதானே நமக்கு தெரிஞ்சது.
இதுதாங்க 25ஆவது பின்னூட்டம். இப்பவாவது நிறுத்திக்கோங்க.
முதன் முறையாக வாசகர்களால் அபரிதமான அளவில் பரிந்துரைக்கப்பட்ட இப்பதிவைப் போல் பல நூறு பதிவுகள் எழுதிட பாலச்சந்தருக்கு வாழ்த்துகள்.
பாலச்சந்தர் நன்றி,
நீங்கள் கருத்துக்களை நல்ல முறையில் எடுத்து கொள்கிறீர்கள். நன்றி. நான் மீண்டும் சொல்கிறேன். நான் எழுதியதில் எந்த தவறான உள்நோக்கமும் கிடையாது.
மேலும் உங்கள் பதிவில் கருப்பான டெம்பிளேட் மற்றும் சிறிய எழுத்துக்கள் படிக்க கடினமாக உள்ளது என்பதும் என் கருத்து. இதுவெல்லாம் ஒரு நட்பான ஆலோசனைதான். ஏற்பதும் ஏற்காததும் உங்கள் இஷ்டம்.
நேற்று நான் பின்னூட்டம் இட முடியவில்லை என்பதும் தனிபதிவு போட்டதற்கு காரணம்.மற்றபடி உங்கள் பதிவு உங்கள் உரிமை என்பதையும் நான் மதிக்கிறேன்.
ஒரு உதாரணம்:
கஙகுலியை அவமானப்படுத்துகிறார்கள் என்று ஒரு பதிவு உள்ளது.அதை ஆர்வமுடன் பார்த்தால் ஒன்றுமே இல்லை. பழைய கதை..சேப்பல் ஈமேயில் விவகாரம், கங்குலியின் வேகபந்தை எதிர்கொள்ள தயக்கம், நக்மா மேட்டர்(?) எல்லாம் கலந்து அருமையான ஒரு கட்டுரை தந்திருக்க முடியும்.உங்களால் முடியும்.மீண்டும் சொல்கிறேன்.உங்களுடைய பல கருத்துக்கள் நன்றாக உள்ளன.ஆனால் விளக்கமாக இல்லை.சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பாணியில் போட்டீர்கள் என்றால் அருமையாக இருக்கும்.
you can edit and post and you can treat this as personal mail also.thank you
//வெங்காயம். அவர்கள் தான் எல்லா இடத்துக்கும் சென்று அவர்களின் பின்னூட்ட விளையாட்டைப் பற்றி வெளிப்படையாய்ச் சொல்லிக் கொள்கிறார்களே.//
ஆமாம். ஒப்புக் கொண்டீர்கள். அவர்களைப்போல பாலசந்தர் கணேசன் அவர்களி வைத்தியம் பிடித்து லூசாக அலையவில்லை. தனக்குத் தெரிந்தவற்றை ஏதோ எழுதுகிறார். பின்னூட்டம் இடுவதும் வெறுப்பதும் வாசகர் முடிவு. அதற்காக எள்ளி நகையாடல் தகுமோ?
//உங்களைப் போல் உண்மைப் பெயரைச் சொல்லாமலோ அனானிமஸ் பின்னூட்டம் இட்டுக் கொண்டோ அலைகிறார்களா என்ன?//
பினாத்தல் என்பது என்ன? உரிச்ச வெங்காயம் என்பது என்ன? இலவச கொத்தனார் என்பது என்ன? கண்ணு தெரியலன்னா கண்ணாடி போடு தம்பி.
//தகுந்த ஆதாரம் நீங்கள் சொல்லித் தான் தெரியவேண்டுமா? அவர்களே உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தால் தங்கள் பதிவுகளின் சுட்டிகளை வெளிப்படையாக எடுத்துப் போட்டுவிடுவார்கள். நீங்கள் என்ன அதனைப் பற்றி சொல்வது?//
ஆமாம். அவர்கள் ஆதாரம் கேட்பார்களே என்று அஞ்சித்தான் முந்திக் கொண்டேன். நீங்களே ஒத்துக் கொண்டீர்கள். நன்றி.
//எனக்குத் தெரிந்து பினாத்தலார் இந்த விளையாட்டு விளையாடினதாகத் தெரியவில்லை. ஏன் அவரை விடாமல் பிடித்து வைத்து கொண்டிருக்கிறீரோ? உங்களுக்கும் அவருக்கும் அப்படி என்ன பகை?//
அவருக்கும் எனக்கு பகையா? நல்ல பகிடி இது. விளையாடியோரின் பட்டியல் சொன்னால் ஏன் பகை புகை என்றெல்லாம் புலம்புகிறீர்கள்?
//எனக்குத் தெரிந்த வரை இவர்களில் யாரும் சாதிக்காக எழுதியதாகத் தெரியவில்லை.//
அடக் கஷ்டகாலமே! மெய்யாலுமே நீங்கள் படித்ததே இல்லையா?
//குமரனும் இராமனாதனும் சமயத் தமிழைப் பற்றி எழுதுகிறார்கள். அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நீங்களும் அவர்களை கிண்டல் செய்துவிட்டுப் போங்கள்.//
அருமையாக எழுதட்டும் வாழ்த்துகிறேன். அடுத்தவரை குற்றம் குறை சொல்லி எள்ளி நகையாடுதலை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். போக வேண்டிய பாதை வெகுதூரம்.
//அதனை விட்டுவிட்டு எதற்காக மிரட்டுகிறீர்கள்? குமரன் கிண்டல் செய்தார். பாலசந்தர் விளக்கம் கேட்டார். குமரன் விளக்கம் சொல்லிவிட்டார். இதில் எங்கு மிரட்டல் வந்தது?//
குமரன் சிபியை மிரட்டவே இல்லையா? அந்த பதிவில் மிரட்டல் தொனிதான். பாலசந்தர்போல எழுதினால் பின்னூட்டேன்! என்ற மிரட்டல். அப்படியே இது பாலசந்தருக்குமான எச்சரிக்கையாக அது.
//நீங்களாகவே ஏதாவது கற்பனை செய்து கொண்டு பிணக்கை வளர்த்துக் கொண்டு போகிறீர்கள்.//
இந்த வரிகளை நான் உங்களுக்கு திரும்ப சொல்லிக் கொள்கிறேன்.
ஒரு சிறு தவறு....தீப்பொறியாகி...மரத்தைப் பற்றிக் காட்டைத் தணிக்க நினைத்த வேளையில் அனைத்தும் அடங்கியிருக்கிறது என நினைக்கிறேன். ஆகையால் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் நன்று.
===================================
அதே நேரத்தில் அடுத்தவர் மனம் நோகாமல் பேச வேண்டும் என்ற பண்பைக் கற்க பலர் மறந்துள்ளார்கள். பெயரைப் போட்டு எழுதுகின்றவர்களிடம் உரிமையோடு என்னங்க...இப்படிச் சொல்லீட்டீங்களே என்று உரிமையோடேனும் கேட்கலாம். ஊரும் பேரும் தெரியாதவரிடம் என்னதான் கேட்பது!
அப்படி அடையாளங்களை மறைத்து எழுதுகின்றவர்களே.....நண்பர்களே....உங்களுக்கு ஒரு கேள்வி.....வெளிப்படையாக நான் எழுதியது என்று சொல்ல முடியாத வகையில் எழுதுவதும் ஒரு எழுத்தா....அந்த எழுத்தில் உண்மையிலேயே சிறப்பு இருக்கிறதென்றால் அதைப் பெருமையாக உங்கள் கையொப்பத்தோடு போடுவதில் என்ன தயக்கம்? புகழுக்காக எழுதவில்லை என்றெல்லாம் பேச வேண்டாம். ஒரு முறை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்குப் புரியும். முடிவு உங்கள் கையில். சொல்ல வேண்டுமென்று தோன்றியது. சொல்லி விட்டேன். இத்தோடு விஷயத்தை விடுவோம். வாதிட விருப்பமில்லை. நன்றி.
===================================
சமயங்களுக்காக எழுதுவது சாதிக்காக எழுதுவது என்றிருக்கிறது......
சாதிக்காக எழுதுகின்றவர்கள் சிலர் இருக்கிறார்கள். மறுக்க முடியாது. சமயத்திற்காக எழுதுகின்றவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். அருந்தமிழ்ப் பாக்களைப் பிரித்து அதற்குள் இருக்கும் நறுந்தேனை எடுத்துக் கொடுக்கும் நல்ல முயற்சியும் வலைப்பூக்களில் நடக்கிறது. அப்படிச் சொல்லும் பொழுது ஏற்படும் கருத்தியல் பிழைகளை அங்கங்கே சுட்டுங்கள். கிருஸ்தவத்திலும் இஸ்லாமிலும் நண்பர்கள் எழுதத்தான் செய்கிறார்கள். இது ஒரு நல்ல கருத்துப் பரிமாற்றமாக மலர்வதில் எனக்கு மகிழ்ச்சி.
வெங்காயம் அவர்களே!
//குமரன் சிபியை மிரட்டவே இல்லையா?//
குமரன் சிபியை மிரட்டினாரா இல்லையா என்பது சிபி அல்லது குமரன்தான் தீர்மானிக்க வேண்டும்.
குமரன் விடுத்தது ஓர் அக்கறையின்பால் கொடுத்த எச்சரிக்கை. இடித்துரைக்க ஓர் நண்பன் கூறும் அறிவுரை. அப்படித்தான் நான் எடுத்துக் கொண்டேன்.
//அப்படியே இது பாலசந்தருக்குமான எச்சரிக்கையாக அது//
இதற்குத்தான் பாலசந்தரும் விளக்கம் கேட்டார். குமரனும் விளக்கமளித்தார்.
ஆக சம்மந்தப்பட்ட மூவருக்குமே இப்போது இதில் எந்த குழப்பமும் இல்லை.
தங்களைத்தவிர ஏனைய அனைவருமே குமரனின் எச்சரிக்கையை(தங்கள் கூற்றுப்படி மிரட்டலை) ஓர் ஆரோக்கியமான விமர்சனமாகவே கருதுகின்றனர்.

இராகவன் அவர்களுக்கு நமஸ்காரங்கள்.
தங்களின் விளக்கம் நன்றாக இருந்தது. வேறு பெயர்களில் எழுதுபவர் எல்லாம் மனநலம் குன்றியவர் என்றோ அறிவிலிகள் என்றோ ஏதும் தவறான முடிவுக்கு வர வேண்டாம். அப்படிப் பார்த்தீர்கள் என்றால் எத்தனையோ பேர் செல்லப்பெயர்களில்தான் உலவுகிறார்கள். எந்த பெயரில் எழுதினால் என்ன? நல்லதையே நினைத்து நல்லதையே எழுதினால் எல்லாம் சுகமே.
குமரன் உங்களுக்கு நண்பர் என்பதால் உங்களால் விட்டுக்கொடுக்க முடியவில்லை.
பாலசந்தர் குற்றம் செய்தால் அதனை நேரடியாக சுட்டிக் காட்டுவது மனித இயல்பு. அப்படியின்றி மூன்றாம் பதிவரிடத்து சென்று கிசுகிசு பாணியில் கோள் சொல்லுதல் பெண்களுக்கே உரிய சிறப்புக் குணம். உங்கள் நண்பர் இங்கே அதனைத்தான் செய்து இருக்கிறார்.
சாதீய வலைப்பதிவர்கள் செய்வது தவறு. மதப் பதிவர்கள் செய்வது தவறில்லை என்றீர்கள். என்னைப் பொருத்தவரை என் மதம்தான் பெரிது, என் சாதிதான் பெரிது என்று தலையில் தூக்கி வைத்து ஆடாமல் இருப்பதே சிறந்தது. ஒரு மதம் சொல்லும் நல்ல கருத்துக்களை மக்கள் முன் வைப்பதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்கும் தெரியவில்லை.
அடுத்து யார் சிபி அண்ணாச்சியா, வணக்கம், வாருங்கள். அஏக நமஸ்காரங்கள்.
அடியேன் தமிழில் இலக்கணம் முறைப்படி பயின்றதில்லை. அதனாலோ என்னவோ மிரட்டலும் எச்சரிக்கையும் வேறு வேறு என்ற பொருளை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.
தாங்கள் சொன்னதற்குப் பின்னர்தான் தமிழ் இலக்கண நூல்களையும் அகராதிகளையும் புரட்டிப் பார்த்தேன். குமரன் உங்களுக்குச் சொன்னது எச்சரிக்கைதான். மிரட்டல் அல்ல என்று புரிந்தேன்.
அதாவது ஒரு ரவுடி உங்கள் முன் வந்து நாளை வீட்டைக் காலி செய் என்றால் அது எச்சரிக்கை. அதே ரவுடி அரிவாளோடு வந்து வீட்டைக் காலிச் எய் என்றால் மிரட்டல்! அப்படித்தானே?
எனக்கு கொஞ்சம் புரிந்த மாதிரி இருக்கிறது. நிறைய புரியவில்லை. தமிழில் புலமை பெற்ற தாங்கள் கொஞ்சம் விளக்கினால் இன்னும் மகிழ்வேன் நான்.
இடித்துரைக்காத மன்னன் கூட கெட்டழிவான் என்று சங்க இலக்கியங்களைப் புரட்டியபோது அறிந்தேன். எனவே நல்ல நண்பர்களாக இருந்து சிற்றிதழ் நடத்தியவரும் தமிழின்பால் காதல் கொண்டவருமான பாலசந்தர் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி இருந்தால் நிச்சயம் மாறி இருப்பார். நானும்கூட முன்னர் பாலசந்தர் அவர்களுக்கு அறிவுரையாக பின்னூட்டி இருக்கிறேன். பின்சென்று தேடிப் பார்க்கவும். ஆனால் குமரன் அப்படி இல்லாமல் அவரின் பெயரை உங்கள் பதிவில் இட்டு அவர்போல் ஆகாதே என்று எச்சரிக்கை விடுத்தது தவறினும் தவறேதான்.
அவர் அப்படி ஏதும் பெரிய தவறைச் செய்து விட்டு ஜெயில் கம்பியை எண்ணியதாக எனக்கு நினைவில் இல்லை. தாங்களுக்குத் தெரிந்தால் விளக்கவும். நானும் புரிந்து கொள்வேன்.
வெங்காயம் சார். என்ன எதிர்பார்க்கிறீர்கள்? மன்னிப்பு கேட்கவேண்டுமா? கேட்டு விடுகிறேன் அவ்வளவு தானே. அப்படியாவது இதனைத் தொடராமல் நிறுத்துவீர்களா?
இராகவன், நீங்கள் சொன்னது சரி தான். அடுத்தவர் மனம் நோகாமல் பேச வேண்டும் என்ற பண்பைக் கற்க பலர் மறந்துள்ளார்கள், என்று நீங்கள் என் நண்பராயிருந்தாலும் உங்கள் மனதிற்குத் தோன்றியதைச் சொல்லியிருக்கிறீர்கள். அந்த அறிவுரையை மதித்தும் மன்னிப்பு கேட்கிறேன்.
நண்பர் பாலசந்தர் கணேசன். உங்களுக்கு ஏற்கனவே நான் சொன்னதைப் பற்றி விளக்கம் சொல்லிவிட்டேன். நீங்களும் அதனை ஒத்துக் கொண்டீர்கள். அது மட்டும் இல்லாமல் நண்பர்களும் இந்த விஷயத்தில் தங்கள் கருத்தினை இந்தப் பதிவில் கூறிவிட்டார்கள்.
http://muthuvintamil.blogspot.com/2006/03/blog-post_09.html
ஆனாலும் உங்கள் பெயரைச் சொல்லிக் கிண்டல் செய்ததால் உங்கள் மனம் புண்பட்டிருக்கலாம். அப்படி உங்களுக்கு மறைமுகமாக 'மிரட்டல்/எச்சரிக்கை' (?!) விட்டதற்கு பெரிய மனம் செய்து தயை செய்து மன்னித்து விடுங்கள்.
// இராகவன் அவர்களுக்கு நமஸ்காரங்கள். //
வணக்கம் வெங்காயம். நீங்கள் வெங்காயம். உங்களுக்கு காரம் பிடிக்கிறது. எனக்குக் காரம் அவ்வளவாகப் பிடிக்காததால் வணக்கம் போடுகிறேன். :-)
// குமரன் உங்களுக்கு நண்பர் என்பதால் உங்களால் விட்டுக்கொடுக்க முடியவில்லை. //
வெங்காயம்...கொஞ்சம் மேலே பாருங்கள். நான் குமரனை இடித்திருக்கிறேன்.
// சாதீய வலைப்பதிவர்கள் செய்வது தவறு. மதப் பதிவர்கள் செய்வது தவறில்லை என்றீர்கள். என்னைப் பொருத்தவரை என் மதம்தான் பெரிது, என் சாதிதான் பெரிது என்று தலையில் தூக்கி வைத்து ஆடாமல் இருப்பதே சிறந்தது. ஒரு மதம் சொல்லும் நல்ல கருத்துக்களை மக்கள் முன் வைப்பதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்கும் தெரியவில்லை. //
மதப்பதிவர்கள் செய்வது எல்லாம் சரி என்று நான் சொல்லவில்லை. நல்ல கருத்துகளை முன் வைப்பது சரிதான் என்ற உங்கள் எண்ணத்தைத்தான் நானும் கொண்டுள்ளேன். என்னால் முடிந்தவரை அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.
அன்புள்ள குமரன் அவர்களே,
வலைபதிவிற்கு வந்து விட்டால் விமர்சனங்களை சந்தித்து தான் ஆகவேண்டும். என் பதிவை பற்றி மற்றவர்கள் கூறிய கருத்துக்களை நான் பதிவு செய்து தான் உள்ளேன். ஆனால் நீங்கள் சிபியின் பதிவில் இட்ட பின்னூட்டத்தில் இரண்டாவது பாதி எனக்கு தெளிவாக புரியவில்லை. இதை தான் கூறியிருக்கிறீர்கள் என்று நானாகவே ஊகிப்பதற்கு பதிலாக உங்களிடம் விளக்கம் கேட்பது மேல் என்று தான் பதிவினை எழுதினேன். மற்றவர்கள் பின்னூட்டத்தை வெளி இடுவது போல வெங்காயம் அவர்களின் பதிவினையும் இட்டேன். உங்கள் கருத்தோ அல்லது அதை வெளிபடுத்திய விதம் குறித்தோ எனக்கு எந்த விதமான சங்கடமும் இல்லை. திரும்பவும் சொல்கிறேன் - உங்களிடம் இருந்து நான் வேண்டியது விளக்கம் மட்டுமே. தயவு செய்து மன்னிப்பு என்று கூறி சங்கட படுத்தாதீர்கள்.
வெங்காயத்தை உறிச்சா கடைசியில் ஒன்னுமே இருக்காது. அதனால தான் ஒன்றும் இல்லாத / ஒன்றுக்கும் உதவாத விசயத்தை பெரியார் வெங்காயம் என்று சொல்லுவார். போடா வெங்காயம் என்றால் போடா உதவாக்கரை என்று அர்த்தம். யாரும் தப்பா எடுத்துக்காதிங்க. :-))
- பெருங்காயம்
பாலச்சந்தர்,
நான் எழுதிய பெரிய பின்னுட்டம் எப்படியோ காணாமல் போய்விட்டது. அதன் சுருக்கம் மட்டும் நினைவில் இருந்து:
பின்னூட்டங்களின் எண்ணிக்கையோ, பதிவின் அளவோ தரத்தை நிர்ணயிப்பதில்லை என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் பல நேரங்களிலும், உங்கள் பதிவின் தலைப்பை பார்த்துவிட்டு உள்ளே வந்தால் மிக -ஆன விஷயங்களை மட்டுமே சுருக்கமாக எழுதிருக்கிறீர்கள் என்பது என் கருத்து. அதனால் ஒன்றும் பாதகமும் இல்லை நீங்கள் உங்கள் பாணிப்படியும், இஷ்டப்படியும் தொடருங்கள்.
வெங்காயம்,
என் பதிவுகளில் ஒரே ஒரு பதிவு மட்டும்தான் 100க்கு மேற்பட்ட பின்னூட்டங்களைப் பெற்றது, அந்தப்பதிவை கொஞ்சம் கcவனமாகப் படித்தீர்கள் என்றால் அதிகப் பின்னூட்டம் பெறும் பதிவுகளை நையாண்டி செய்த பதிவு என்பது புலப்படும். குழு சேர்ப்பதும் எனக்குத் தெரியாது, என் பதிவுகளின் பின்னூடங்களையே கவனித்தீர்கள் என்றால் எனக்கு நிரந்தர பின்னூட்டமிடும் வாசகர் என்று ஒருவரும் கிடையாது என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
உங்கள் பதில்(?) எனக்கும் குமரனுக்கும் பொதுவாக அமைந்துவிட்டது. உங்கள் புரிதலுக்காக இல்லை இந்த விளக்கம். பொதுவானவர்களுக்காக.
குமரன் நல்லா சமாளிச்சு இருக்கார்.
Post a Comment