Monday, February 27, 2006

போலி டோண்டுவிற்கு வந்த கோபம்.

நான் போலி டோண்டுவின் பதிவிற்கு சென்று பின்னூட்டம் இட்டேன். நல்ல முறையில் அறிவுரை கூறி. அந்த பின்னூட்டம் இட்டவுடன் போலி டோண்டுவிற்கு வந்த கோபத்தை பாருங்கள்.
இன்னா மயிருக்குடா போலி டோண்டு பதிவில் பின்னூட்டினே

என்று என் பதிவில் வந்து பின்னூட்டம் இட்டுள்ளார். இன்னமும் பல கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி.

பாருங்கள் டோண்டிவின் பெயரில் பல இடங்கள் சென்று இவர் பின்னூட்டம் இடுவார். ஆனால் இவர் பதிவில் நாம் ஒழுங்காக பின்னூட்டம் இட்டால் இவருக்கு கோபம் வந்து விடுகிறது. நல்ல காமெடி..
இப்போதாவது போலி டோண்டுவிற்கு தெரிகிறாதா மற்றவர்களுடைய எரிச்சல்.
-போலி டோண்டுவே .. நான் சிங்கம் இதற்கெல்லாம் அசராமாட்டேன். உங்கள் சொந்த பெயரில் நேரிடையாக என்னை நீங்கள் தொடர்பு கொள்ளவும்...
நினைவில் வைத்து கொள்ளுங்கள் நான் சிங்கம் என்பதை.

தனி மனித வழிபாடு-ஒரு ஆய்வு.

தனி மனித வழிபாடு உலக பொதுமறை. ஆனால் தமிழகத்தில் இருப்பது அசாதாரணமானது.(Extra-Ordinary). ஏன் இந்த அளவு தனி மனித வழிபாடு உள்ளது என்பது பற்றிய ஒரு ஆய்வு.
ஒரு தனி மனிதனை மற்றவர்கள் மதிப்பதற்கு காரணங்கள் இருக்கின்றின. அதிகாரம், பணம்,பதவி மற்றும் திறமை. மற்றவர்களின் உள்ளத்தை கொள்ளை அடிக்கும் திறமை இருப்பவர் பெருவாரியான ஜனங்களின் அபிமானத்தை பெற்று விடுகிறார்கள். தமிழகத்தில் அவ்வாறு வெகு ஜன ரசிகர்களை கொண்டவர்கள் பெரும்பாலும் திரை உலகத்தினை அல்லது அரசியல் உலகத்தினை சேர்ந்தவர்களாக உள்ளது ஒரு மிக பெரிய வித்தியாசம்.

திரை பட நடிகர்களுக்கு அரசியல் ரீதியான செல்வாக்கு உண்டா என்பது மிக முக்கியமான கேள்வி. காலம் காலமாக எம்.ஜி.யார் வெற்றி பெற்றதற்கு காரணம் சினிமா என்று கூற பட்டாலும் உண்மையில் அது இரண்டவது காரணமே. திராவிட இயக்கங்கள் இந்தி புகுத்த பட்டதையடுத்து பெரும் எழுச்சி பெற்றன. தி.மு.க வலிமை மிக்க , மிக பெரிய செல்வாக்கு மிக்க இயக்கமாக மாறியது இது தான் முதல் படி. அண்ணா மரணத்திற்கு பின்னர் அது கருணாநிதி ,எம்.ஜி,யார் சண்டையாக மாற, தி.மு.க இரண்டாக உடைந்தது. இந்த இரண்டாவது படியில் தான் எம்.ஜி.ஆர் தன்னை தனி பெரும் தலைவனாக நிறுவிக் கொள்ள முடிந்தது. கருணாநிதியின் வரிசையான தவறுகள் எம்.ஜி.ஆரின் செல்வாக்கை வளர்த்தன. கருணாநிதி காங்கிரசுடன் கூட்டணி வைத்து எம்.ஜி.ஆர் ஆட்சியினை கலைத்தார். எம்.ஜி.ஆர் மாபெரும் வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின் பல கூத்துக்கள் நடந்த பின்னர் ஜெயலலிதா அ.தி.மு.க வின் கொ.ப.செ என்ற பெயரில் சர்வாதிகாரியானார். தி.மு.க குடும்ப கட்சியாக மாறி விட்டது. ஆனாலும் இரண்டாம் கட்ட அளவில் ஜனநாயகம் அங்கே மற்ற கட்சிகளை விட செழிப்பாகவே உள்ளது.

எனவே தனி மனித செல்வாக்கினை மட்டும் வைத்து இவர்கள் மேலே வரவில்லை. திராவிட இயக்கங்கள் செய்த அரசிய்லை பார்க்கும்போது அவர்கள் உண்மையில் திராவிட உணர்வு கொண்டவர்களாகவே தெரியவில்லை. ஆனால் அந்த உணர்வுகள் தூண்ட பட்டு இவர்கள் வெற்றி பெற்றார்கள். தனி மனித உரசல்களின் காரணமாகவே இந்த இயக்கம் இரண்டானது. பரம்பரை சொத்தில் பிள்ளைகள் பங்கு பெறுவது போல இவர்கள் பங்கு போட்டனர். ஆனால் அதன் பின்னர் இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தினால் அதனை தங்கள் கைக்குள் அடக்கி கொண்டனர்.

இன்று அரசியல் ரீதியாக இவர்கள் வெற்றி பெறுவதற்கு காரணம் அடுத்த நிலை தலைவர்களின் தன்னம்பிக்கை இன்மை. மற்ற கட்சிகளால் தமிழக மக்கள் அபிமானம் பெறும் வண்ணம் கொண்ட தலைவர்களை கொண்டு வர முடியவில்லை. காங்கிரஸ் எப்போதும் தலைவரையே அப்பாயின்ட் செய்தது. விளைவு தமிழக மக்களினால் அந்த தலைவர்களை தலைவனாக அங்கீகாரம் செய்ய முடியவில்லை.

அரசியல் ரீதியாகவும், திரைப்பட ரீதியாகவும் மக்கள் நல்ல தலைமை பண்புகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறவர்களையே விரும்பி இருக்கிறார்கள். அப்படி பட்டவர்களின் வெற்றி தோல்விகளை சம்பந்தமே இல்லாமல் தன்னுடைய வெற்றி தோல்வியாக நினைக்கிறார்கள். இது தான் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் உள்ள எமோஷனல் பாண்டிங்: உணர்வு சங்கிலி.

அதன் காரணமாகவே இந்த கலைஞர் வாழ்க, ஜெயலலிதா வாழ்க கோஷங்கள். இவர்களை பெயர் சொல்லி கூப்பிடாத பவ்யங்கள்.
இந்தி எதிர்ப்பு போராட்டதின் போது மொத்த தமிழகமும் ஒரு விதமான நெருக்கடி மனநிலையில் இருந்தது. தங்களுடைய இனத்திற்கு ஆபத்து வந்து விட்ட நேரத்தில் காப்பாற்ற வந்தவர்களாகவே இந்த திராவிட இயக்க தலைவர்களை கருதினர். அந்த உணர்வினால் வந்த இயக்கத்தின் பலத்தினை தான் இந்த தலைவர்கள் பங்கு போட்டு கொண்டனர். அதற்கு மக்கள் மனதில் இருந்த பிம்பம் உதவியாக இருக்கிறது.இந்த தலைவர்களின் வெற்றி இந்த மக்களுக்கு ஒரு கனவு சுகத்தை, அதிகாரம் தனது கைக்கு வந்தது போல ஒரு உணர்வினை கொடுக்கிறது. அது தான் கரை வேட்டியாக தமிழகம் முழுவதும் தெரிகிறது.

இன்றைய நடிகர்களாலும் அத்தைகைய வெற்றி அடைய முடியும் .(எம்.ஜி,யார் மாதிரி வர முடியாது என்று கூறுவது தவறு.) திராவிட இயக்கம் எழுச்சி அடைந்தது போல ஒரு காரணம் உருவானால் இந்த நடிகர்களாலும் அத்தகைய வெற்றி அடைய முடியும். இதற்கான உதாரணத்தை தேடி வெகுதூரம் போக வேண்டியதில்லை.1996-இல் ஜெயலலிதாவிற்கு எதிராக ஒரு மிக பெரிய அலை உருவானது. அந்நேரம் அறிக்கை விட்ட ரஜினிகாந்த், கட்சி ஆரம்பித்த மூப்பனார் மாபெரும் அனைவர் பற்றியும் மிக நல்ல அபிமானம், பாசம் வளர்ந்தது. சுறுசுறுப்பாக செயல் பட்டிருந்தால் த.மா.க அல்லது ரஜினி இந்த் அங்கீகாரத்தினை தக்க வைத்திருக்கலாம்.


சவாரி செய்து பழக்க பட்ட ஒரிஜினல் காங்கிரசு காரர்களான இவர்களுக்கு தனி கட்சியை வளர்க்கவே தெரியவில்லை. ரஜினியோ தேர்தலுக்கு தேர்தல் அறிக்கை விட்டால் போதும் என்று தவறான கணிப்பிற்கு சென்றார். பிம்பங்களுக்கு அடிமையான தமிழக மக்களுக்கு , ஆளுமைதன்மையினை இரசிக்கிர மக்களுக்கு இவர்கள் விரைவாக அன்னியப்பட்டு போய்விட்டார்கள். கருணாநிதி, எம்,ஜி,ஆர்., ஜெயலலிதா வெற்றியின் மூல காரணம் திராவிட இயக்கத்திம் ஆரம்ப அசுர பாலம், மக்களுக்கு அவர்கள் கொடுக்கும் பிம்பங்கள்.


தமிழக மக்களுக்கு தேவை சுகமான பிம்பங்கள்,வெற்றிகரமான பிம்பங்கள்,வீராதி வீர பிம்பங்கள். அவர்கள் ஒட்டு மொத்த உணர்வு தூண்டபடுகிற சூழ்நிலையில் இந்த பிம்பங்களை கொடுப்பவர்கள் பெரிய வெற்றியினை அடைகிறார்கள். அந்த வெற்றியினை இந்த பிம்பங்களை கொடுப்பவர்கள் தக்க வைத்தால் வெற்றி தொடர்ச்சி அடைகிறது. முதலாவது படியில் வெற்றி பெற்ற த.மா.க, ரஜினி அடுத்த படியில் அன்னிய பட்டு போய் விட பிம்பங்கள் தளர்ந்து விட்டன.


தமிழக மக்கள் பிம்பங்களுக்கு மயங்குகிறவர்கள் அது தான் இந்த அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள் , தொலை காட்சி தொடர்கள் வெற்றிக்கு காரணம். மக்கள் விரும்புகிற பிம்பங்களை கொடுக்கிற வரை இவர்களின் வெற்றி தொடரும். இது தான் தனிப்பட்ட நபர்கள் வழிபாடு நடை பெற மூலகாரணம். தனிநபர்கள் வழுபாடு அரசியல் ரீதியாக செயல்படுமா என்றால் : எடுபடும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக அமைந்தால் , எம்.ஜி.ஆருக்கு அமைந்தது போல(கருணாநிதி), ஜெயலலிதாவிற்கு(எம்.ஜி.ஆர் மரணம்) அமைந்தது போல.

நான் ஆட்சிக்கு வந்தால்

நான் அவர்களை பழிவாங்க மாட்டேன்.
இதை சொன்னது யார் தெரியுமா?. எந்த புரட்சியும் செய்யாமல் புரட்சிகலைஞரான விஜயகாந்த் அவர்கள். யாரை பற்றி? தமிழக காவல்துறையை பற்றி. அய்யோ பாவம் தமிழக காவல் துறை. இவர்கள் எங்கெல்லாம் அடிபடுகிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் இவர்களை எல்லாவிததிலும் தவறாக பயன்படுத்துவது. கருணாநிதி இவர்களை கெட்டு குட்டி சுவராக்கினார். பின்னர் அவரே இவர்களை மிக கடுமையாக விமர்சித்தார். ஜெயலலிதா குட்டி சுவரை கேடு கெட்ட குட்டி சுவராக்கினார். இன்றைக்கு இவர்களை பற்றி யார் என்னவெல்லாம் பேசுகிறார்கள் பாருங்கள்...
முன்னர் ஒரு முறை குட்டி எம்.ஜி.யார் என்று தனக்கு தானே பெயர் சூடி கொண்ட சுதாகரன் நான் ஆட்சிக்கு வந்தால் யாரையும் பழி வாங்க மாட்டேன் என்று அதிரடி ஸ்டேட்மெண்ட் விட்டார். சுப்ரமணிய சுவாமி மட்டும் கோமாளி அல்ல. அதற்கு இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.
அது சரி ஆட்சிக்கு வந்தால்தானே... ஜனநாயகத்தில் இத்தகைய பேச்சுரிமைகளை தடுக்க முடியாது.
நான் ஆட்சிக்கு வந்தால்
1. அனைவருக்கும் இலவச கல்வி.

2. அனைத்து பள்ளிகளுக்கும் சர்வதேச தரம்
3. ஆசிரியர்களுக்கு சிறந்த சம்பளம்
4. 3 மணி நேரம் விளையாட்டு பயிற்சி தினந்தோறும்.
5. 10 வயதில் இருந்தே ப்ரொக்ராமிங்.
6. திறந்த புத்தக தேர்வுகள்.
7. வாரத்திற்கு நான்கு நாள் மட்டுமே பள்ளிகூடம்.
8. வீட்டு பாடங்கள் அனைத்தும் ரத்து. பள்ளி மட்டுமே படிப்பதற்கு.
9. கட்டாயமாக தாய்மொழி படிக்க வேண்டும்.
10. நல்ல சாலை வசதி,போக்குவரத்து வசதி.
11. 20 லட்சம் வரை வருமான வரி விலக்கு.அதற்கு மேல் இருந்தால் மாதத்திற்கு 5% வரி. ஆனால் அதற்கு எந்த விலக்கமும் கிடையாது. எல்லாவரியும் கட்டாயமாக வசூலிக்க படும்.
12. நிறைய நீதிமன்றங்கள்.
13. சமூக விரோதம், கட்ட பஞ்சாயத்து, கந்து வட்டி, தீவிரவாதம் அனைத்துகும் கடுமையான தண்டனை. 14. போலியாக கூச்சல் போடும் மனித உரிமைகள் இயக்கங்கள், மிருக பாதுகாப்பு இயக்கங்கள் அனைத்துக்கும் தடை.

இதற்கெல்லாம் வருமானம் எங்கிருந்து வரும் 11 இலிருந்து. வரி ஒழுங்காக வசூலிக்க பட்டாலே இந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும்.

மக்களே ஒட்ட பார்த்து போடுங்க

மக்களே ஒட்ட பார்த்து போடுங்க
ஒட்டை இந்த கட்சிக்கு தான் போடுவேன் என்று கட்சிக்கு விசுவாசமாக மக்கள் இருப்பது தான் பிரச்சினைகளின் மூலகாரணம். கட்சிக்கு இவர்கள் காட்டும் விசுவாசத்தை, தங்கள் தெருவின் மீதோ ,ஊரின் மீதோ காட்டினால் இவர்கள் இருக்கும் இடமாவது மேம்படும். யாரை நிப்பாட்டினாலும் மாறாமல் ஒட்டு போடுவது தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலகாரணமாக அமைகிறது. நமது மாநிலத்திற்கு மிக அருகே உள்ள கேரளாவை பாருங்கள். அங்கே அரசியல்வாதிகள், நடிகர்கள் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்கள். நம்மூரில் தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம். காரணம் தமிழனிடம் இருக்கும் தனிமனித வழிபாடு. இந்த அடிமை புத்தி தான் தலைவர்களின் நிரந்தர சொத்து.
உடன்பிறப்பே, கழக கண்மணியே, இரத்தத்தின் இரத்தமே இனியாவது உனது சொந்த பெயரில் ஒரு அடையாளம் தேடு. கட்சி விசுவாசத்தை விடு. உனக்கு நல்லது எது என்று தேடு.

இந்த கூட்டணி அமைந்தால் எப்படி இருக்கும்?



இந்த கூட்டணி அமைந்தால் எப்படி இருக்கும்?
இட்லி வடையின் உதவிக்கு நன்றி. இந்த அட்டவணையை பாருங்கள். ஆனால் விஜயகாந்த் ஸ்டைலில் படிக்கவேண்ட்டாம்.
நான் முன்பு 0+15 <25 கணக்கு சரியா என்ற பதிவை போட்ட போது கிண்டல் அடித்தவர்கள் படிக்கவேண்டிய புள்ளிவிபரம் இது. தி.மு.க, அ.தி.மு.க ஓட்டுக்களை இணைத்தால் வருவது 16840998. மற்ற கட்சிகள் அனைத்தையும் இணைத்தால் வருவது கிட்டதட்ட 96,00,000. இவர்கள் இருவரும் அடித்து கொள்வதில் எக்க சக்கமான பாதிப்பு மக்களுக்கு. எக்கசக்கமான வரவு இந்த குட்டி கட்சிகளுக்கு. இனிமேலாவது இந்த கட்சிகள் திருந்தி என்ன ஆனாலும் சரியென்று தனியாக போட்டியிட வேண்டும். இந்த குட்டி பொடியன்கள் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க படுவார்கள். இரண்டு கட்சிகளுக்கும் உண்மையான பிரதிநிதித்துவம் கிடைக்கும். இப்போது போலவே மாறி மாறி ஆட்சி செய்கின்ற வாய்ப்பு கிடைக்கும். அதுவே உண்மையான ஜனநாயகமாக இருக்கும்.
இரு கட்சி தலைவர்களும் இந்த அட்டவணையை பார்த்து அகங்காரம் கைவிட்டு கரம் இணைத்தால் தமிழகம் ஒலிமயமாகும் என்று எழுத ஆசை. வில்லன் ஆட்சி பார்த்தாகி விட்டது. வில்லி ஆட்சியும் பார்த்தாகி விட்டது. வில்லன் வில்லி சேர்ந்து ஆட்சி பார்த்தால் என்ன? இரண்டு தேர்தல் இவர்கள் இவ்வாறு செய்தால் மருத்துவர் அய்யா, சிறுத்தை, புலி, கதர் சட்டை, சிகப்பு சட்டை,காவி கொடி எல்லாவற்றையும் காலி செய்து விடலாம். செய்வார்களா
?

Friday, February 24, 2006

When every thing seems to be lost


வெற்றி பெறலாம் வாருங்கள்.

எத்தனையோ சுய உதவி புத்தங்கள் நான் படித்திருக்கிறேன். எத்தனையோ வெற்றி கரமான மனிதர்களை நானும் பார்த்து விட்டேன். வெற்றியின் இரகசியம் என்ன? பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க நாம் காணும் வழி உண்மையில் சரியானது தானா?

இது தான் வெற்றிக்கு வழி என்று காட்ட ஒரு பாதை இல்லை. மேலும் வெற்றி என்பது, ஒரு இலக்கு அல்ல. அது ஒரு தொடரவேண்டிய பயணம். பிரச்சனைகளை தீர்க்க ஒரு நிரந்தரமான தீர்வை தேடி நான் அலைந்து கண்டவற்றை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.



எந்த ஒரு பிரச்சனையையும் தீர்க்க நான் சொல்லும் வழி மூல காரணத்தை கண்டு பிடியுங்கள். அதை செய்யாத வரை எல்லா பிரச்சினைகளும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.

வெற்றிக்கு அவசியமானவை இரண்டு
1. வலிமை: உடல், மனம், சிந்தனை இவை பயமின்றி, சுதந்திரமாக செயல் பட வேண்டியது மிக அவசியம். நீங்கள் வலிமையாக இருந்தால் எதுவும் உங்களை பாதிக்காது. உண்மையில் வெளி உலகில் உங்களை பாதிக்கும் விஷயம் எதுவுமில்லை. யாருக்குமே வராத ஒரு கஷ்டமா உங்களுக்கு வந்து விட போகிறது?( உண்மையில் இவ்வாறு சில பேருக்கு நேரலாம். ஆனால் அது மிக அரிதே).
வலிமையோடு நிலைத்து நின்றால் எதனையும் நேர்கொள்ளலாம். எனக்கு இரு நண்பர்கள் உண்டு. அவர்கள் நான் கண்டு கொண்ட பாடம் இதுவே: வலிமை, வலிமை,வலிமை. ஒரு நண்பர் அலுவலக மேலாளரை கூட எதிர்த்து விடுவார். இன்னொருவர் ஒரு அலுவலகத்தில் இருந்து விலகி இன்னொரு இடம் சென்றார். அவருக்கு அனுபவ சான்றிதல் கிடைக்கவில்லை வெகுநாளாக. அவர் என்ன செய்தார் தெரியுமா?. புலம்பவில்லை. அழுகவில்லை. குறை சொல்லவில்லை. ஒரு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பினார். அனுபவ சான்றிதழ் கிடைக்காவிட்டால் மின்னஞ்சலை அனைவருக்கும் அனுப்புவதாக கூறி மிரட்டினார். தொலைபேசியில் அழைத்து காலவரை நிர்ணயம் செய்து எச்சரித்தார். இவருடைய தன்னம்பிக்கையை பார்த்து அனைவரும் மிரண்டு போய் அவருக்கு சான்றிதழை வழங்கி விட்டனர்.

இது என்னுடைய வாழ்விலும் நடந்திருக்கிறது. என்னை ஒரு முறை மேலாளர் கீழ்தரமாக நடத்த முயன்றார். ஒரு ப்ராஜக்டில் இருந்து இன்னோரு ப்ராஜக்ட் சென்ற போது, நீ அங்கே இருந்து வெளியெ வந்தாய். நீ அங்கே ஒண்ணும் செய்திருக்க மாட்டாய் என்றார். நான் அதை கேட்டு அதிர்ச்சியோ, மனவருத்தமோ அடையவில்லை. இது மிக முக்கியம். மிக வலிமையோடு, உற்சாகத்தோடு தன்னம்பிக்கையுடன் இந்த பதிலை கூறினேன். நீங்கள் வேலை செய்வது போல நான் வேலை செய்தால் என் ப்ரொஜக்ட் குப்பை தொட்டிக்கு போயிருக்கும். நீங்கள் வேலை செய்வது போல இங்கு உள்ள எல்லாரும் வேலை செய்தால் எல்லா ப்ராஜக்ட்டும் குப்பை தொட்டிக்கு போயிருக்கும். அதன் பின்னர் அவர் ஒழுங்காக நடத்துகிறார்.

எனவே மன வருத்தம் இல்லாமல் தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் வலிமையாக முன்னே செல்லுங்கள். எப்பொதும் தலை நிமிர்த்தி , நெஞ்சை உயர்த்தி நடை போடுங்கள். ஒரு நொடி மட்டுமில்லை, ஒரு நிமிடம் மட்டுமில்லை எபோதும் வலிமையாக உங்கள் உள்ளத்தை வைத்திருங்கள்.

2. ஊக்கம்.

இதற்கு நிகரானது எதுவுமில்லை. நான் வென்றே தீருவேன் என்று திரிபவனை யாராலும் தடுக்க முடியாது. இது என்றும் குறையாத வண்ணம் இருக்க வேண்டும். உங்கள் ஒவ்வொரு நாளையும் கனவு நாளாக வெற்றிகரமான நாளாக நினையுங்கள். அது அவ்வாறகவே முடியும்.

என்னுடைய வலைபதிவையே நான் அதற்கு எடுத்து காட்டாக கூறுவேன். பலர் விமர்சித்த போதிலும் தளராமல் எழுதுகிறேன். டெம்ப்ளெட்டில் பல மாற்றங்கள் செய்தேன். இன்னமும் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.இப்போது கூட சென்ற பதிவின் லின்க் ஒவ்வொரு பதிவிலும் தெரியும் வண்ணம் மாற்றி அமைத்துள்ளேன்.

என்னுடைய வலைபதிவை பார்க்கவும் படிக்கவும் சிறந்த பதிவாக ஆக்கியே விடுவேன். இந்த மாதிரி ஒவ்வொரு செயலையும் நான் செய்வேன். அதுவே எனது வெற்றியின் இரகசியம்.ஊக்கத்தை பற்றி பேசும் போது இந்த சில வரிகள் முக்கியமாக படுகின்றன.

When every thing seems to be lost ; Future Remains

இந்த வைர வரிகள் அனைவருக்கும் ஊக்கத்தை தரும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. இப்போது ஆராயுங்கள் உங்கள் தோல்வியின் காரணம் என்னவென்று :1 .வலிமை இன்மை , 2. ஊக்க குறைவு. அதனை சரி செய்யுங்கள். எல்லா பிரச்சினயும் தீர்ந்து விடும்.

Thursday, February 23, 2006

நீங்கள் சினிமா சூட்டிங் பார்த்தது உண்டா?

பல்வேறு திரைப்பட காட்சிகள் பார்க்கும் போது எனக்கு தோன்றுகிற கேள்விகள்?.
1. எவ்வாறு இந்த நடிகைகள் இந்த மாதிரி ஆடையை குறைத்து கொண்டு ஆபாசமாக நடிக்கிறார்கள். சில காட்சிகளில் இவர்கள் முழு முதுகை கூட காட்டுகிறார்கள். சில நேரங்களில் இவர்கள் பொது இடங்களில் ஆட , நடிக்க வேண்டியுள்ளது. எவ்வாறு இந்த சூழ்நிலையை இவர்கள் நேர்கொள்கிறார்கள்.
2. மற்ற இடங்களில் வேலை பார்க்கின்ற பெண்களே சில நேரங்களில் பாலியல் ரீதியான பிரச்சினைகள எதிர்கொள்கிறார்கள். இவர்களுடையே வேலையே பாலியல் ரீதியான கொடுமையாக உள்ளது. இவர்கள் மனதில் கண்டிப்பாக சில தடுமாற்றங்கள் இருக்கும். அதற்கும் நடுவே அவர்கள் புன்னை பூப்பது போல காட்டுவது எப்படி?
3.ஆடை அவிழ்ப்பு மட்டுமே நடிப்பு என்று ஆகிவிட்ட நிலையில் , சினிமா துறையில் உள்ள மற்றவர்கள் இவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதை எவ்வளவு? இவர்களுக்கே தங்கள் மீது , தங்கள் வேலையின்மீது ஒரு சுயமரியாதை இருக்குமா?. நான் பார்த்த ஒரு படத்தில் விக்ரம் காலை தூக்க சாய சிங் அதன் கீழே சென்று வருவார். ஏன் பெண்கள் இவ்வாறு இழிவு படுத்த படுகிறார்கள்.
நீங்கள் சினிமா சூட்டிங் பார்த்ததுண்டா? நடிகைகளின் தர்மசங்கடத்தை நேரில் கண்டதுண்டா?

Wednesday, February 22, 2006

பார்ப்பதற்கு சிறந்த தமிழ் வலைபதிவு எது?

பார்க்க சிறந்த வலைபதிவு எது?
நண்பர்களே , வாருங்கள் கருத்துக்கள் கூறுங்கள்.

என்ன தான் பேசியிருப்பார்கள்?


கருணாநிதி- என்னய்யா, சொல்ல வேண்டியது எல்லாம் சம்பத் மூலம் சொல்லி முடிச்சுட்ட. சரி கழட்டி விடலாம்னு பார்த்தா கூட்டணியில தொடருவோம்னு சொல்றியே...
வைகோ- நீங்க மட்டும் என்ன திட்டுவதற்கு ஆற்காடு வீராசாமி, எதிர் கட்சி தலைவர்னா அன்பழகன், மத்திய அமைச்சர்னா உங்க பேரன் அப்படின்னு லிஸ்ட் போட்டு வைச்சிருக்கிங்க...
கருணாநிதி- என்னய்யா உங்க் ஆட்கள் 50 தொகுதி கேட்குறாங்க. உங்க கட்சிக்கு அத்தனை ஒட்டு இருக்கா முதல்ல?வைகோ- அலெக்ஸாண்டர் உலகத்தை வெல்லுவேன் என்று சொன்ன போது உலகம் இவ்வாறு தான் கிண்டல் செய்தது. காந்தி சுதந்திரம் பெறுவேன் என்று சொன்ன போது அதனை நிறைய பேர் நம்பவில்லை.வரபோகிற நாட்களில் ஆட்சியை நிர்ணயிக்கின்ற சக்தியாக மதிமுக அமையும்.
கருணாநிதி- அப்படியா , அப்ப உங்களுக்கு 10 சீட் கொடுக்கிறேன்.வைகோ- என்னது 10 சீட்டா?. பொடாவில் ஜெயிலுக்கெல்லாம் போய் விட்டு வந்துருக்கேங்க, கொஞ்சம் பார்த்து போட்டு கொடுங்க.
கருணாநிதி- கட்சியில் இருக்கும் போது மாறனுக்காகவும், ஸ்டாலினுக்காகவும் தியாகம் செய்த நீ, வெளியே சென்ற பிறகாவது எனக்காக தியாகம் செய்ய கூடாதா?
வைகோ- என்னங்க இது கட்சியில் இருக்கும் போது என்னைய வளர விடல. நானே வெளிய வந்து கட்சிஅமைச்சா ஒரு பய ஒட்டு போட மாட்டேங்கிறான். கூட்டணி அமைச்சா நீங்க சீட் தரமாட்டிங்க. அந்த அம்மா பக்கம் போன எனக்கு இருக்கிற ஒட்டும் போய் விடும். என் கட்சி காரன் ஏற்கனவே என்னைய பொடாவில் போட்டத மறந்து விட்டான். எத்தனை சீட் அப்படிங்கிறத கடைசி வரைக்கும் வெளியே சொல்லாதிங்க. அப்ப தான் நான் என் கட்சிகாரனை ஏமாத்த முடியும்.
கருணாநிதி- நீ இழுத்தடிச்சதும் ஒரு விதத்துல நல்லது தான். மத்தவங்க கிட்ட நான் கண்டிப்பாக இருக்க முடியும்.
வைகோ-கூட்டணியில் எங்களுக்கு சீட் இல்லைங்கிறீங்க. ஆனா இன்னமும் நிறைய கட்சியை கூட்டணியில் சேர்க்கிறீங்க .... என்ன திட்டத்தில் இருக்கிறீங்க..கருணாநிதி- என்ன தம்பி.. இன்னமுமா உனக்கு புரியவில்லை. இதயத்தில் அனைவருக்கும் இடம் உண்டு. தேர்தல் கூட்டணியில் தான் இடம் இல்லை.
வைகோ-உண்மையில் உங்கள் இதயத்தில் கூட யாருக்கும் இடம் இல்லை என்கிற உண்மை அனைவருக்கும் தெரிந்த சொல்ல முடியாத உண்மை.

தொடர்கிறது...

அம்மா பிறந்த நாள்...

வந்த போது புரட்சி தலைவி என்று அழைக்க பட்டார். நிரந்தர முதல்வர் என்று கட்சி காரர்களால் முன்பு அழைக்க பட்டார். இப்போது அனைவரும் அவரை அம்மா என்று அழைக்கிறார்கள். தவறி கூட அவரை யாரும் பெயர் சொல்லி கூப்பிடுவதில்லை.
பிறந்த நாள் என்ற பெயரில் பலரும் கூத்தடிப்பார்கள். சென்ற ஆண்டு சிலர் போயஸ் கார்டனுக்கு மாலை போட்டார்கள். எந்த அளவுக்கு புகழ்வது என்பது அளவு கடந்து போய் அருவருப்பாக உள்ளது இந்த தனி மனித புகழ்ச்சிகள்,நிகழ்ச்சிகள் போய் கொண்டு இருக்கின்றன. இது மேலும் மேலும் எல்லா துறையிலும் வளர்ந்து கொண்டே போகின்றது.
யாரை கொண்டாடுவது என்று தமிழர்களுக்கு சுத்தமாக தெரியாமல் போய் விட்டது. இந்த வருடம் அம்மா பிறந்த நாளுக்கு என்ன நடந்தது என்று யாரேனும் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

டிவி இல்லாம சினிமா ஜெயிக்குமா?

இது என்னுடைய தலைப்பு இல்லை. தமிழ் முரசுவில் இந்த தலைப்புடன் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. இதில் பேசியுள்ள அனைவரும் சினிமா துறையினர் தொலைகாட்சிகளில் கிளிப்பிங்ஸ் காட்டவிட்டால் நட்டம் அவர்களுக்கே என்றும், சன் டிவி மீது போட படுவதாக கூறப்படும் வழக்கு அர்த்தம் இல்லாதது என்கிற ரீதியிலும் பேட்டி அளித்துள்ளனர். மீடியாக்கள் ஒன்றை ஒன்று சார்ந்து தான் செயல் படவேண்டும் என்கிற ஒரு மெஸ்ஸேஜ் வேறு சொல்ல பட்டுள்ளது.
அது சரி... சன் டிவி ஓனர் நடத்துகிற பத்திரிக்கையில் சன் டிவிக்கு சார்பாக தானே கட்டுரை வரும். இவ்வாறாக ஒரு மீடியா இன்னொரு மீடியாவை சார்ந்து ஆதரவாக செயல்படுகிறது.
சும்மா சொல்ல கூடாது. அவர்கள் வெறுமனே உபதேசத்தோடு நிற்கவில்லை. கடை பிடிக்கவும் செய்கிறார்கள்.

Tuesday, February 21, 2006

காம்பிர் கங்குலியை விட நல்ல ஆட்டகாரரா?

கங்குலியை விரட்டி விட்டு காம்பிர் வைத்து ஆடுவது சரியான முடிவாக தெரியவில்லை. அனுபவத்திலும், ஆட்ட திறனிலும் கங்குலி காம்பிரை விட சிறந்தவர். அவரால் பந்து வீசவும் முடியும். ஒரு நாள் போட்டிகளில் சேவாக் அல்லது சச்சின் ஆட முடியாத போது கங்குலி மிகவும் உதவியாகவே இருப்பார்.
சாப்பல் விரும்பாததல் மட்டுமே கங்குலி நீக்க படுகிறார் என்றால் அது தவறு. ஒரு கேப்டன் என்கிற முறையில் ட்ராவிட் கங்குலியை கொண்டு வர முழு முயற்சி செய்ய வேண்டும். கங்குலி மூன்றாவது துவக்க ஆட்டகாரராக இருப்பது அணிக்கு மிகவும் நல்லது. புதிய ஆட்டகாரர்கள் நன்றாக ஆடாத பட்சத்தில் கங்குலிக்கு மீண்டும் வாய்ப்பு மிடில் ஆர்டரில் கொடுப்பதில் தவறில்லை.

திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களே வருக வருக...

திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களே வருக வருக என்று ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டினார் திண்டிவனம் ராமமூர்த்தி அவர் காங்கிரஸ் தலைவராக நியமிக்க பட்ட போது. இப்போது அவரே ஒரு கட்சி ஆரம்பித்து விட்டார். எல்லா காங்கிரஸ் தலைவர்களும் கட்சியை விட்டு வெளியேறும் போது காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ் பெயரில் ஆரம்பிப்பார்கள். இவரும் அதனையே செய்துள்ளார். உண்மையில் அவர் ஆரம்பித்திருப்பது ஜெயலலிதா காங்கிரஸ்.
அம்மாவிடம் உள்ள் பசையின் யோகம்: சில ஜால்ராக்கள் கட்சியில் உள்ளார்கள். சில ஜால்ராக்கள் கட்சிக்கு வெளியே உள்ளார்கள். எல்லா தேர்தலின் போதும் சில கட்சிகள் தோன்றும். தேர்தல் முடிந்தவுடன் அவை மறைந்து விடும். இந்த முறை தோன்றியுள்ள இந்த கட்சி இந்த தேர்தலோடு காணமல் போய் விடும். அரசியல் கோமாளிகள் வரிசையில் இவர் சுப்ரமணிய சுவாமியின் அடுத்த இடத்தில் உள்ளார்.
திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களே வருக வருக....

Monday, February 20, 2006

வைகோ முடிவு...


பிரிந்து போக போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் வைகோ தி.மு.க கூட்டணியில் தொடர முடிவெடுத்துள்ளார். என்ன காரணம் இருக்க கூடும் என பல்வேறு ஊகங்கள் வெளிவருகின்றன.
1. விடுதலை புலிகள் அதிமுக கூட்டணியை விரும்பவில்லை. இந்த செய்தி ஜூனியர் விகடனில் சில வாரங்களுக்கு முன்னர் வந்தது.2. தொண்டர் மத்தியில் அ.தி.மு.க கூட்டணி பற்றி தர்ம சங்கடம்.(தட்ஸ்தமிழ்)3. பொடா கைது பற்றி ஜெயலலிதா கருத்து தெரிவிக்காதது.(தட்ஸ்தமிழ்)4. தி.மு.க கூட்டணியில் தொடர்வது எதிர்காலத்திற்கு நல்லது.(இது எனது கணிப்பு).
ஆனாலும் சீட் பங்கீடு இன்னமும் முடியாத நிலையில் இதை இறுதி முடிவாக கருதுவது கடினமே ஆனாலும் இந்த முடிவு மாறுவதற்கு வாய்ப்புகள் குறைவு. ஆனால் இன்னமும் புரியாத ஒன்று விடுதலை புலிகளை பற்றியும் தி.மு.க பா.ம.க பேசி வருவது. எப்படித்தான் சீட் பிரிக்க போகிறார் கலைஞர்.

சித்திரம் பேசுதடி.

எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாத ஒரு திரைப்படம் மிக கடுமையாக நம் உணர்வுகளை தாக்குகிறது. ரவுடியை காதலிக்கும் பெண் என்று எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அந்த வரிசையில் இந்த படத்தை நிச்சயமாக சேர்க்க முடியாது.
சாதரணமாக திரை படங்கள் என்னை உணர்வு பூர்வமாக பாதிக்காது. வெறும் கற்பனை பிம்பங்களை அளவுக்கு மீறுவது சரியானதாக படவில்லை. ஆனால் இந்த படம் சுய கட்டுபாட்டுகளை தாண்டி என்னை பாதித்தது. இவ்வாறு சொல்வது எனக்கு விருப்பமானதாக படவில்லை என்றாலும் படத்தின் சில நொடிகளே வருகிற காட்சியின் வீரியம் இன்னமும் என்னிடத்தில் உள்ளது.
விபச்சார விடுதியில் காதலன் காதலியின் கண் முன்னர் கைது செய்ய படுகிறான்.கல்யாணம் நின்று விடுகிறது. பெண்ணின் தகப்பனார் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் பிரிந்து செல்லும் காதலி இறுதியில் காதலனை மீண்டும் சேர்கிறார். ஏன்?. சித்திரம் பேசுதடி படம் பாருங்கள்....

Tuesday, February 14, 2006

சூப்பர் சாப்பாடு...

சூப்பர் சாப்பாடு...
எப்போதும் அகோர பசியோடு திரிந்து கொண்டிருக்கும் மீடியாவிற்கு சில ரட்சகர்கள் இருக்கிறார்கள்.இந்தியாவில் அந்த மாதிரி ரட்சகர்களில் கிரிக்கெட் ஒன்று. நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் டெண்டுல்கர் சரியாக ஆடதவுடன் டெண்டுலகர் ரிடையர் ஆகவேண்டும் என்று பல பத்திரிக்கைகளும் எழுத தொடங்கினர். நேரட்டியாக அந்த கருத்தை முன்வைக்க விரும்பாத சில பத்திரிக்கைகள் அந்த கருத்து கொண்டவர்களை முகமூடியாக பயன்படுத்தின.
இப்போது மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் மீடியா தன்னுடைய நிறத்தை மாற்றி கொண்டுள்ளது. இப்போது ஒரு இணைய தளத்தில் டெண்டுலகரின் கடந்த 60 ஆட்டத்தின் புள்ளி விபரங்கள் வெளியிட பட்டுள்ளன. அதில் டெண்டுல்கர் நல்ல ஃபார்மில் இருப்பது போல இறுதி கருத்து தெரிவிக்க பட்டுள்ளது. இதே இணைய தளம் சற்று முன்பு அவருடைய கடைசி 25 ஆட்ட புள்ளி விபரதை போட்டு ஆட்டதிறன் குறைந்து விட்டது என்ற கருத்து தெரிவித்தது.
இதனால் அறிய படுவது யாதெனின் : 1.புள்ளி விபரங்களை வைத்து இறுதி முடிவிற்கு வராமல், இறுதி முடிவெடுத்து விட்டு இவர்கள் புள்ளி விபரத்தை நாடுகிறார்கள்.2. நன்றாக ஆடினாலும் ஆடாவிட்டாலும் டெண்டுல்கரே மீடியாவை பொருத்தவரை ஆட்ட நாயகர்: என்றென்றும் மேன் ஆப் தி மாட்ச்.
டெண்டுல்கரினால் மீடியாவிற்கு சரியான சாப்பாடு.

Thursday, February 09, 2006

பெற்ற சுதந்திரம் பறி போகிறதோ

பதவியில் இருந்தவரை மணிசங்கர அய்யர் ஒரளவு சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். பெட்ரோல் விலை உயர்வு பற்றி அவர் அடித்த கமெண்ட் மோசமானது என்றாலும் அவருடைய பல்வேறு திட்டங்கள் லாங் டெர்மில் இந்தியாவிற்கு முகுந்த பலனை அளிக்க கூடியவை.
மத்திய மந்திரிகளின் இலாகாக்களை மாற்றி அமைக்க மன்மோகன் சிங்கிற்கு அதிகாரம் இருக்கிறது என்ற போதிலும் நன்கு செயல்பட்டு வந்த அமைச்சரை,அதுவும் பல முக்கிய திட்டங்களை மெட்டிரியலைஸ் பண்ண முயன்று கொண்டிருக்கின்ற ஒருவரை மாற்ற காரணம் என்ன?. இவ்வாறு செய்வது அந்த திட்டங்களை பாதிக்காதா? அல்லது அந்த திட்டங்களுக்கு பாதிப்பு உண்டு பண்ணுவது தான் நோக்கமா?மணிசங்கரின் இடத்தை பிடித்திருப்பவர் முரளி தியோரா. கட்சியின் கஜானாவை பல முறை நிரப்பியவர் என்று புகழ்ச்சி அவருக்கு உண்டு. இப்படி பட்டவர் இந்த துறைக்கு வந்தால் பலன் யாருக்கு போகும் என்பதில் சந்தேகம் இல்லை.
அமேரிக்க தூதர் இந்தியாவில் யார் எதை பற்றி பேசவேண்டும் என்பது பற்றி ஆலோசனை கூறுகிறார்.பிரதமரும் அதை பற்றி விளக்கம் கொடுத்து கொண்டிருக்கிறார். (இந்த விஷயத்தில் கம்யீனிஸ்ட் மற்றும் பா.ஜ.க ஒரே நிலை எடுத்திருப்பது மிக சுவாரசியமானது).
அமேரிக்கா வெகு வெளிப்படையாகவே வலியுறுத்த இந்தியா அதற்கு வேலைக்காரன் போல பணிவது வேதனையாக உள்ளது. பெற்ற சுதந்திரம் மறைமுகமாக பறிபோகிறதோ?...

Wednesday, February 08, 2006

கணவன் மனைவிற்கிடையே அடிக்கடி சண்டை வர காரணம் என்ன?

1. பெரும்பாலும் சண்டை வருவதற்கு மூல காரணம் ஒருவர் மற்றவர் வீட்டை பற்றி குறை கூறுவது. இதற்கான காரணங்கள் கல்யாணத்தின் போதே ஆரம்பித்து விடுகின்றன. இதனால் இரு தரப்பு பெரியவர்களும் அமைதியான முறையில் பேசி தீர்த்து கொள்வது நல்லது. இரு தரப்பு பெரியவர்களிடமும் நல்ல உறவு முறை அமைவது அவசியம். அது தான் கூட்டு குடும்பத்திற்கு, இனிமையான மண வாழ்விற்கு முக்கியமானது.
2. கல்யாணத்தை ஒட்டி சின்ன பிரச்சினைகள் எழும் போது , இரு தரப்பினரும் ஒவர் ரியாக்ஷன் காட்டாமல் இருப்பது அவசியம். ஒரு சின்ன பிரச்சினைக்காக ஒரு தரப்பில் யாராவது ஊளையிட, அது கடைசியில் மிக முக்கியமான கணவன் -மனைவி உறவை பாதிக்கும் வகையில் அது அமைந்து விடுகிறது. கல்யாணம் செய்ய படுவதே இரண்டு பேர் இணைந்து நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக. இந்த நோக்கத்தை மறந்து விட்டு பெரியவர்கள் செயல்படுவதே எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்.
பிரச்சினை இல்லாமல் கல்யாணம் முடிந்தால், இல்வாழ்க்கை அமைதியாக இருக்கும். இல்லாவிட்டால் அதுவே பின்னர் வருகின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலகாரணமாக அமையும்.

எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா

நாமும் ஒரு குத்து பாட்டு எழுதுவது எப்படி.
ஹீரோவை புகழ்ந்து நான்கு வரி, ஹீரோவை உண்மையான ஹீரோ என்று நம்பிக் கொண்டிருக்கிற ஏமாளி இரசிகர்களை நம்பு நான்கு வரி மீதியெல்லாம் சும்மா இடத்தை நிரப்புகிற வரிகள் - எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா என்கிற மாதிரி. இந்த பாடல் யார் வேண்டுமானாலும் பயன் படுத்தி கொள்ளலாம்.

கோழி போட்ட முட்டை..
மாம்பழத்து கொட்டை...
எல்லாம் இங்க இருக்கு...
அடி வாங்கி போக பல பேரு..
ஜெயிக்கரவங்க கொஞ்சம் சில பேரு..
என் வெற்றி உன்னோடது...
உன் இதயம் என்னைக்கும் என்னோடது...
நாசாவில் நானும் கொடி கட்டுவேன்...
எட்டு திசையிலும் ஒலிக்கது எம் பேரு.
.தேடி வந்தவுங்க எல்லாம் நிக்க...
நான் ஒடி வந்தேன் உன்னை தேடி...
புலியா பார்த்து போடதே சூடு..
ஆளவந்தவன் நான்..
அட்ரஸ் தெரியாதவன் நீ...
அடங்குடா நீயும்..
என் கூட்டம் திரண்டா எல்லாரும் கால் தூசு..
கோழி போட்ட முட்டை..
மாம்பழத்து கொட்டை...எல்லாம் இங்க இருக்கு...

தொகுதி பங்கீடு இறுதியை நோக்கி

சில வாரங்களில் தொகுதி பங்கீடு எண்ணிக்கை அளவில் முடிவு செய்யபட்டு விடும் தி.மு.க. கூட்டணியை பொறுத்த வரையில். அ.தி.மு.கவை நோக்கி ம.தி.மு.க செல்ல வாய்ப்பு நிறையவே உள்ளது. இது தி.மு.க விற்கு இலாப கரமாகவே அமையும். எல்லா தொகுதியிலும் வோட்டு உள்ளது ம.தி.மு.க விற்கு. ஆனால் பா.ம.க உறுதியாக சில மாவட்டங்களில் வெல்லும் ஆனால் ம.தி.மு.க விற்கு அவ்வாறு உள்ளது என கூற முடியாது.
காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் பலம் இருந்தால் ம.தி.மு.க இழப்பை சரி செய்யலாம். ஆனால் மத்திய அளவில் காங்கிரசு ஒரு உறுப்பினர் ஆதரவு குறைவது கூட விரும்பாது என்றாலும் அதனால் தி.மு.க வை நிர்பந்தம் செய்ய முடியுமா என்பது சந்தேகம்.
மதிமுகவை கழட்டி விட்டு தி.மு.க இந்த வெற்றி கணக்கை போடலாம்.

தி.மு.க - 145
காங்கிரசு- 40
பா.ம.க - 30
கம்யூனிஸ்ட் - 16
மற்றவை - 3
மொத்தம் - 234.
வெற்றி வாய்ப்பு எவ்வாறு அமையும்?
தி.மு.க - 130
காங்கிரஸ் - 35
பா.ம.க.- 28
கம்யூனிஸ்ட் - 14
மற்றவை - 2
மொத்தம் - 209

இன்சமாமின் புலம்பல்.

சர்ச்சைக்கிறிய முறையில் ஆட்டம் இழந்த இன்சமாம் இந்திய வீரர்கள் அப்பீல் செய்ததை பற்றி புலம்பி தள்ளி இருக்கிறார். இதனால் இரண்டு அணி வீரர்களிடேயே உள்ள நல்லுறவு பாதிக்க படும் என்றும் கூறியுள்ளார்.
இதில் எனக்கு புரியாத ஒன்று உண்மையில் இன்சமாம் வருத்த பட வேண்டுமானால், குறை கூற வேண்டுமானால் சென்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்ட தொடரில் அவர் ஆட்டம் இழந்தது பற்றி.அது உண்மையில் தவறாக எடுக்க பட்ட முடிவு. ஏனெனில் அவர் த்ரோவிலிறுந்து விலகிசென்றார். ஆட்டவிதிகள் அவருக்கு சாதகமாகவே உள்ளது. ஆனால் அம்பயர்கள் தவறாக முடிவு எடுத்து விட்டனர்.
ஆனால் இந்த முறை அவர் த்ரோவை தடுத்து விட்டார். எனவே இந்த முறை எடுக்க பட்ட முடிவு சரியே. ஆனால் அதை குறை கூறாத இன்சமாம் இதனை குறை கூறுவது எதனால்?
பொதுவாகவே அனைத்து அணிகளொடும் சக்கை போடு போடும் இன்சமாம் இந்தியாவோடு தடுமாறவே செய்கிறார். அடிக்க்கடி அவர் கும்ப்லேயின் பந்து வீச்சிற்கு பலியாகிறார். ஆனால் முகமது யூசூஃப், யூனச் கான் மற்றும் பலர் சக்கை போடு போட தான் தடுமாறுவது அவரரி பாதித்துள்ளதொ?. இரண்டுக்கும் ஏதெனும் சம்பந்தம் உண்டோ?

Tuesday, February 07, 2006

பள்ளி மாணவர்களுக்காக உதவும் ஒரு அமைப்பு.

மற்றவர்களை விமர்சித்து எழுதுவது மட்டுமே தீர்வாகி விடுமா?. உண்மையில் சமுதாயத்திற்கு உதவ நீ என்ன செய்ய போகிறாய் என்ற கேள்விக்கு ஒரு சின்ன பதிலை தயார் செய்து கொண்டிருக்கிறேன்.எனது ஊர் காரைக்குடியில் உள்ள அனைத்து பள்ளியில் உள்ள ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி செய்யும் இயக்கம் ஒன்றை தொடங்க போகிறேன்.
இது ஒரு சின்ன தொடக்கம் மட்டுமே. இதனால் பயன்பட போகிறவர்கள் சிலராக மட்டுமே இருக்கலாம். எந்த ஒரு பெரிய முயற்சியும் சிறியதாகவே தொடங்க பட்டது. எனவே தொடர்ச்சியாக முனைந்தால் எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லாததால் உடனடியாக தொடங்குகிறேன்.
இந்தியா சென்றவுடன் அரசு சம்பந்த பட்ட ஃபார்மாலிட்டிகளை முடித்து விட்டு மேலும் விபரங்கள் தருகிறேன்.

Monday, February 06, 2006

இரண்டு பொண்ட்டாட்டிகாரர்கள் வாழ்க்கை.

சிவகங்கையில் 5ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது முதன் முதலாக எனது வீட்டில் பக்கத்தில் உள்ள ஒரு காம்பவுண்டில் இரண்டு பொண்டாட்டிகாரர் ஒருவரை சந்தித்தேன். அவர் இரண்டு மனைவிகள் , இரண்டு மனைவியின் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் குடியிருந்தார். ஏனோ தெரியவில்லை அவரை பற்றி அல்லது அவருடைய குடும்பத்தை பற்றி யாருக்கும் நல்ல அபிப்ராயம் இல்லை. யாரும் அவர்கள் வீட்டுடன் சாதரணமாக பழகி நான் பார்த்ததில்லை. அவர்களை பற்றி மற்றவர்கள் கிசுகிசு பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
மனைவி இறந்த பின்னர் குழந்தைகளுக்காக மணம் புரிந்தவர்களை பிறகு நான் சந்தித்தேன். அவர்களை சமூகம் மௌனமாக ஏற்று கொண்டுள்ளது. செல்வாக்கு உள்ளவர்கள் இரண்டு பொண்டாட்டிகாரர்களாக இருப்பதை நான் பார்த்தது அதற்கப்புறம். அதனை சமூகம் ஒரு குறையாக அல்லது வித்தியாசமானதாகவோ கண்டதில்லை.
இந்த சூழ்நிலையில் வளர்கிற குழந்தைகளின் மனநிலை எவ்வாறு இருக்கும்? இரண்டாவது தாரத்தின் பிள்ளைகள் என்றாலே கேவலமாக பார்க்கிற சமூகத்தின் கேலி பார்வை அந்த குழந்தைகளை எவ்வாறு பாதிக்கும்? இரண்டாவது மனைவியாக வருபவர்களை பல தரப்பு மீடியாக்கள் கீழ்தரமாகவே சித்தரித்துள்ளன. எனக்கு தெரிந்த வரை அவர்களுடைய உலகத்தை, உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்தவர் மணிரத்னம்.(அக்னி நட்சத்திரத்தில்)
சில கேள்விகள் புரியாமலேயே போய் விடுகின்றன: கல்யாணமானவர் என்று அறிந்த பின்பும் இந்த பெண்கள் எதனால் திருமணம் செய்கிறார்கள். அவர்களை அவ்வாறு செய்ய தூண்டுவது எது?சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லாததல் இரண்டாவது மனைவியின் குழந்தைகள் நியாயமான உரிமைகளை கோர முடியாமல் போவது எந்த வகையில் சேர்த்தி?

ஜெயலலிதாவை கிறுக்காக்கும் வாய்ப்பை இழந்த கருணாநிதி.

கலைஞரின் திறமைக்கு ஒரு சரியான பரிசோதனை.
கலைஞர் ஜெயலலிதா போட்டி தற்போதைக்கு 2- 2 என்ற அளவில் சமமாக உள்ளது. 1996இல் ஜெயலலிதா கருணாநிதிக்கு சரியான வாய்ப்பு கொடுத்தார். கலைஞர் மீண்டும் 2001இல் அந்த நன்றி கடனை திருப்பி செலுத்தினார். அனைவரையும் போக விட்டு விட்டு தனி பட்ட செல்வாக்கினால் ஜெயித்து விடலாம் என்று அவர் எண்ணியது மிக தவறாக முடிந்தது.
பா.ம.க, காங்கிரசு, தமிழ் மாநில காங்கிரசு மற்றும் கம்ப்யூனிஸ்ட் கட்சிகள் அ.தி.மு.க பக்கம் சென்ற பின்னர் குறைந்த பட்சம் ம.தி.மு.க மட்டுமையாவது தனது பக்கம் வைத்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் வைகோவை கழட்டி விட, தேர்தல் முடிவுகள் ஜெயலலிதாவிற்கு தனி பட்ட பெரும்பான்மையினை கொடுத்தது. ம.தி.மு.க குறைந்தது 30 தொகுதிகளில் தி.மு.க வாய்ப்பை நேரடியாக பாதித்தது. இருவரும் இணைந்திருந்தால் 65 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம். ஜெயலலிதா கூட்டணி அரசு அமைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு போயிருப்பார். காங்கிரசு, மூப்பனார், ராமதாஸ் அனைவரும் ஜெயலலிதாவை கிறுக்காக்கியிருப்பார்கள். ஆட்சி இழந்தது மட்டுமில்லாமல் ஜெயலலிதாவிற்கு தனிபட்ட பெரும்பான்மை பெற் கலைஞர் செய்த உதவிக்கு ஜெயலலிதா பாராளுமன்றத்தில் நன்றி கடன் செய்தார். இப்போது கலைஞர் பக்கம் வலிமையான கூட்டணி. அதுவே அவருக்கு பலவீனமும் கூட. அனைவரும் அதிர்ப்தியாக வழி உள்ளது. கலைஞர் என்ன செய்ய போகிறார் என்பது இந்த் தேர்தலை நிர்ணயிக்கும். வாசலை திறந்து வைத்து ஜெயலலிதா காத்திருக்கிறார். கட்சிகள் இடம் மாறுமா? காட்சிகள் மாறுமா..

எத்தனை ரன் அடிச்சாலும் கொடுத்துவிடும் பௌலர்கள்.

இந்தியாவின் தோல்விக்கான காரணம் கண்டுபிடிப்பது மிக எளிது. 45 வது ஒவருக்கு அப்புறம் இந்தியாவின் ஆட்டம் சரியான சொதப்பல்.இந்தியா பதான்,தோனியை ட்ராவிட்,யுவராஜ்,கைஃபை விட நம்புகிறது. அவர்களும் அதற்கேற்றார் போல ஆடுகிறார்கள். டெண்டுல்கர் ஒரு நிதானமான, பாரட்டதக்க ஆட்டம் ஆடினார்.

ஃபீல்டிங் நன்றாக முன்னேறியும் கூட இந்தியாவினால் ரன்களை கட்டுபடுத்த முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது. யுவ்ராஜ் மற்றும் சேவாக் போன்றவர்களை இன்னமும் அதிகமாகவே பயன்படுத்தலாம். ஒவ்வோர் போட்டியிலும் 2 ஒவர் கொடுப்பதனால் அவர்களும் எதுவும் சாதிக்க போவதில்லை.

பதான் ஒரேடியாக பத்து ஒவர்களையும் வீசியது சற்று அதிகபடியாக தோன்றியது. மத்த பந்து வீச்சாளர்கள் ரொம்ப பின்னரே வந்தனர். அவர்களாலும் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை.
டாஸ் ஜெயித்த உடன் இந்தியாவை பேட் செய்ய அழைத்தன் மூலம் பாகிஸ்தானின் திட்டம் தெளிவாகிறது. இந்தியா எத்தனை ரன் அடித்தாலும் அத்தனையும் இந்திய பந்து வீச்சாளர்கள் கொடுத்து விடுவார்கள் என்கிற அவர்கள் எதிர்பார்ப்பு பெரும்பாலும் சரியாகவே அமைந்தது.

என்றாலும் இன்னமும் மூன்று ஒவர்கள் இருக்கையில் போட்டி நிறுத்த பட்டது இந்தியாவிற்கு மிக பெரிய அநியாயமே. ஒரு நாள் போட்டிகளில் இதை காட்டிலும் பெரிய கூத்துகள் விதிமுறை காரணமாக நடந்துள்ளது.

45 ஒவரில் 305 க்கு 5 விக்கெட்கள் இழந்த இந்தியா இறுதியில் 328 க்கு ஆல்-அவுட் ஆனது. அது போல பாகிஸ்தானுக்கும் கூட நடந்திருக்கலாம் அந்த மூன்று ஒவர்கள் தொடர்ந்திருந்தால். என்ன பேசி என்ன?

Sunday, February 05, 2006

பாக்கியராஜின் அடுத்த படம்.

தமிழக சினிமா வரலாற்றின் சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்று கருத பட்ட பாக்கியராஜ் பல வரிசையான தோல்விகளுக்கு பிறகு வழங்கும் திரைபடம் பாரிஜாதம். இந்த திரைபடம் பாக்கியராஜ் இயக்குனராக மீண்டும் வலம் வருவாரா என்பதை நிர்ணயிக்கும்.
நாம் தோல்வி அடையும்போது நாம் நம்பிக்கை இழக்காவிடிலும் அடுத்தவர்கள் நமது மேல் நம்பிக்கை இழப்பார்கள். இது எல்லா இடத்திற்கும் பொருந்தும் என்றாலும் , சினிமா போன்ற மற்றவர்களின் நம்பிக்கையை பெரிதும் சார்ந்திருக்கிற துறைகளில் ஒரு தோல்வி கடுமையான பாதிப்பை உண்டு பண்ணும் போது தொடர்ச்சியான தோல்விகள் ஒரேடியாக ஆளை கவிழ்த்து விடும் அபாயம் உள்ளது.
எனவே சோதனைகள் பல தாண்டி மீண்டு வரும் பாக்கியராஜிற்கு வெற்றி பெர வாழ்த்துக்கள்.

Friday, February 03, 2006

போலி டோண்டுவிற்கு உதவுங்கள்.

போலியான டோண்டுவிற்கு நான் பொழுது போக்க ஆலோசனை சொன்னேன். அதன் பின்னர் அவருடைய பதிவுக்கு சென்று பின்னோட்டம் இட்டு வந்தேன். உங்களிடம் ஏதெனும் ஆலோசனை இருந்தால் போலி டோண்டுவின் பதிவிற்கு சென்று பின்னோட்டம் இடுங்கள். அல்லது இந்த பதிவில் பின்னோட்டம் இடுங்கள்.

விகடனில் ஞானி எழுதியது பற்றி

விகடனில் ஞானி எழுதியது பற்றி.ஞானி நான் விரும்பி படிக்கும் எழுத்தாளர்களில் ஒருவர். இந்த வார விகடனில் அவர் எழுதியுள்ள முக்கியமான கருத்து- சினிமா தயாரிப்பாளர்கள் இனிமேல் தொலை காட்சிகளுக்கு க்ளிப்பிங்ஸ் கொடுக்க போவதில்லை என்பது பற்றி. இந்த மாதிரி நிறைய முறை தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். மாற்றி இருக்கிறார்கள். இந்த முறையும் கொண்டு வந்ததை வெகு சீக்கிரம் மாற்றி விடுவார்கள்.
தயாரிப்பாளர்கள் பிரச்சினை எல்லா சினிமா வட்டாரத்திலும் உண்டு என்றாலும் இங்கே தமிழகத்தில் மிக அதிகம். இதற்கு மூல காரணம்: தயாரிப்பாளர்களிடத்தில் ஒற்றுமை இல்லை. கேரளாவில் உள்ளது. ஆந்திராவில் உள்ளது. அங்கெல்லாம் ஒன்று நடிகர்களின் சம்பளம் கம்மி. அதிகமாக இருந்தாலும் அட்வான்ஸ் எப்போதும் ஒரு லட்சம் மட்டும். இங்கேயும் ஒற்றுமை இருந்தால் அந்த விதிமுறைகளை கொண்டு வர முடியும். நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கூச்சலிட தேவையில்லை.
அட்வான்சாக ஒரு லட்சம் மட்டும் கிடைக்கும் என்று கொண்டு வந்தால் போதும். இவர்கள் தயாரிப்பு செலவு குறையும். பிரச்சினைகள் தானகவே தீரும்.

பேரை மாற்றினால் தலையெழுத்து மாறுமா?

பேரை மாற்றுவது பற்றி எக்கச்சக்கமான உட்டாலக்கடிகள். ஆனால் அதில் முக்கியமாக பலன்களை பெறுவது பேரை மாற்றுபவர்களை விட,பேரை மாற்றச் சோல்லும் கன்ஸல்டண்ட்கள் மட்டுமே.எதனால் இந்த மோகம் மக்களை பிடிக்கிறது?
வெற்றியின் மீது மக்கள் வைத்திருக்கும் கண்மூடித்தனமான அன்பு. வெற்றியின் இரகசியம் புரிகிற வரை அதில் பேர் மாற்றுவதனால் வருவதில்லை என்பது தெரியும் வரை இந்த கன்ஸல்டண்ட்கள் காலம் பொற்காலம். என்னுடைய சில உறவினர்கள் இதில் மேதாவிகள். எண் கணிதம், வாஸ்து போன்றவற்றில் அவர்களுக்கு தெரியாதது எதுவும் கிடையாது என்கிற பெருமை வேறு. குப்பையில் மாஸ்டராகி இருக்கிறோம் என்பது அவர்களுக்கு இன்னமும் புரியவில்லை.
பேர் வைக்க எண் கணிதம் பார்பவர்களை நான் மனிதனாகவே மதிப்பதில்லை. மண்டையில் மூளை வேலை எந்த அளவிற்கு செய்கிறது என்பது அவர்கள் இந்த மாதிரி குப்பைகளை நம்புவதில் தெரிகிறது.
வெற்றியின் இரகசியம் உண்மையில் ஆழ்ந்த மனதில் பதிவாகி இருக்கும் எண்ணங்கள். அவற்றை ஆராய்வது மூலமாகவே நான் வாழ்க்கையை மாற்ற முடியும். எதற்கும் கலங்காத தன்னம்பிக்கை வேண்டும் என்று விவேகானந்தர் கூறியதை நான் இந்த முட்டாள் தனமான விஷயங்களை நம்புவர்களுக்கு சிபாரிசு செய்கிறேன். வெற்றிக்கு தேவை தன்னம்பிக்கை இந்த மாதிரியான நம்பிக்கைகள் அல்ல. ஒருவருடைய வெற்றியை காரணபூர்வமாக ஆராயுங்கள். அவருடைய பெயரில் காரணம் எதுவுமில்லை.

போலி டோண்டுவிற்கு பொழுது போக சில வழிகள்...

எல்லாரும் பின்னோட்டத்தை மாடரேட் செய்ய ஆரம்பித்து விட்டதால் போலி டோண்டு வேலியில் மாட்டிய வெள்ளாடு மாதிரி ஆகி விட்டார். பின்னூட்டங்களை வைத்து பொழுது போக்கி கொண்டிருந்த இவர் இனிமேல் என்ன செய்வார்?. அவ்வப்போது ஜாதிவெறியன் பதிவில் மற்ற பதிவுகளுக்கு கிண்டல் ஆபாச பதிவுகள் போட்டு கொண்டிருந்தார். இனிமேல் அதை அவர் தொடரலாம். ஆனாலும் அவருடைய முதற்கடமையான பின்னூட்டம் விலங்கு இடுவதற்கு இப்போது விலங்கு மாட்டி விட்டார்கள்.

போலி டோண்டு அவர்களே...


உங்களால் டோண்டு இரண்டு முறை பின்னூட்டம் இட்டார். ஆனால் இனிமேல் உங்களால் ஒரு முறை கூட பின்னூட்டம் இட முடியுமா என்று தெரியவில்லை. ஏனெனில் தற்போது உங்கள் பின்னூட்டங்கள் கண்டிப்பாக பதிவர்களால் நீக்க பட்டு விடும் .

உங்களுக்கு பொழுது போவதற்கு சில வழிகள்.
1. மற்ற மொழிகளில் நிறைய ப்லொக்குகள் உள்ளன. அவற்றில் போய் எதேனும் பதிவு பண்ணுங்கள் தமிழில் மட்டும். அவர்கள் உங்களை சும்மா மறந்து விடுவார்கள்.
2. டோண்டுவின் புகைப்படம் எடுத்து முகத்தில் ஒட்டி கொண்டு ஊர் சுற்றுங்க்கள்.எல்லாரும் நீங்கள் டோண்டு என்று நம்பி விடுவார்கள். அதனால் நீங்கள் செய்கிற காரியத்திற்கு டோண்டு பொறுப்பாவார்.நல்ல காமெடியாக இருக்கும்.
3. நீங்கள் முகமூடி போல முகமூடி போட்டது தான் சரியான காமெடி. முகமூடியே முகம் காட்டவில்லை. இதில் நீங்கள் அவர் முகமூடி போட்டீர்கள். இதை அடுத்து நான் தான் முகமூடி என்று உங்கள் முகம் காட்டுங்கள். உங்களுக்கு இதனால் நல்ல பெயர் கிடைக்கும் . ஏனெனில் முகமூடியின் முகம் யாருக்கும் தெரியாது.

தமிழ்மணம் சட்டமன்ற தேர்தலில் போட்டி?

விகடனில் இந்த வாரம் சு,சாமி பேட்டி வந்திருக்கிறது.ஜாலியாக இருக்கும் என்பதால் அதை படித்தேன். காலம் மாறினாலும் சு.சாமி மாறமாட்டார். இந்த முறை அவர் மூன்றாவது அணி அமைப்பது அவருடைய திட்டமாம்.
தேர்தல் வந்து விட்டாலே புதியதாக சில கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தோன்றுவார்கள். இவர்கள் அடிக்கிற கூத்துக்கு அளவே கிடையாது. தங்களுக்கு இருக்கிற ஆதரவை பற்றி இவர்கள் விடுகிற ஸ்டெட்மெண்ட்கள் காமேடி டைத்தை விட பெட்டர்.போன சட்டமன்ற தேர்தலின் போது சரத் பவாரின் கட்சியின் தமிழக தலைவர் 160 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என அறிக்கை விட்டார்.

நாமும் கொஞ்சம் பீலா விடலாம். தமிழ்மண வலைபதிவர்கள் கட்சி போட்டியிட்டால் 200கொகுதிகளில் வெற்றி பெறும். டோண்டுவின் வாக்கை போலி டோண்டு போடுவார். டோண்டு எலெக்ஷன் கமிஷனருக்கு கடிதம் எழுதுவார்.

Thursday, February 02, 2006

கலாநிதி தடுமாறுவது ஏன்?

வெகு வெற்றிகரமாக சன் நிறுவனத்தின் அனைத்து சானல்களையும் நிர்வகித்து வரும் கலாநிதி மாறன் வார இதழ்கள் அல்லது நாளிதழ்களில் அவ்வளவாக பிரகாசிக்கவில்லையே ஏன்?
குங்குமம், தினகரன் இன்னமும் கூட் சூடுபிடிக்கவில்லை. தமிழ் முரசு இணையத்திலும் கிடைக்கிறது. வியாபாரம் நன்றாகவே நடக்கிறது என கூற பட்டாலும் அது காலை தினசரியாக மாறினால் உடனே படுத்து விடும்.
ஒரு பக்கம் மீடியாவில் சக்கை போடு போடுகிறவர் ஏன் பத்திரிக்கை வட்டாரத்தில் முன்னேற முடியவில்லை என்று யோசித்தால் சன் டீவியின் வெற்றி ரகசியம் தெரிந்து விடும். ஊருக்கு முன்பு தொடங்கி விட்டார்கள், நல்ல பணபலம், அரசியல் செல்வாக்கு, நிறைய திரைபடங்கள் வாங்க முடிகிறது. அடுத்தடுத்து சானல்கள் துவங்க முடிந்தது, முடிகிறது. சினிமா, சீரியல்கள் தரம் பற்றி கவலை படாமல் காண இரு கூட்டம் இருக்கிறது. இதை மூலதனமாக வைத்து தான் சன் நிறுவனங்கள் வெற்றி பெற்றுள்ளது. தனி பட்ட தர முத்திரை எதுவும் அதற்கு கிடையாது.
ஆனால் காலை நேர நாளிதழ், வார பத்திரிக்கைகான வட்டம் வேறு. அங்கே இருப்பவர்களிடம் இது போன்ற மலிந்த சரக்குகள் மட்டும் பற்றாது. கலாநிதி இதனையும் அங்கே முயற்சித்தார். ஆனால் அது தற்காலிகமாக பலன் தந்ததே தவிர அவரால் குங்குமத்தை நிலை நாட்ட முடியவில்லை. இலவசங்கள் நிறைய கிடைக்கும் வரை அது எண்ணிக்கை அதிகமாக விற்றது. ஆனால் அது நின்றவுடன் , எண்ணிக்கையும் குறைந்தது. எதற்காக மக்கள் குஙுமம் வாங்கினார்கள் என்பது தெளிவு.
தரத்தை உயர்த்தி கலாநிதி ஜெயிக்கட்டும் முதலில். இது வரை இவர்கள் பெற்ற வெற்றி உண்மையில் ஒரு உட்டாலக்கடி.
கூட படிக்கிற பொண்ணு வீட்டுக்கு போறது தப்பா?
காலேஜில படிக்கும் போது கூட படிக்கிற பொண்ணு வீட்டுக்கு போயிருக்கிங்களா?. இது எனக்கு ஒரு தனி பிரச்சினையாவே தெரிஞ்சதில்லை. ஏனெனில் என் கூட படிக்கிற பொண்ணுங்க நிறைய பேர், அவங்க குடும்பம் எல்லாருமே எனக்கு முன்னரே அறிமுகமானவர்கள். எனது குடும்பத்தாருக்கும் தெரிந்தவர்கள்.
முதல் முதலாக பிரச்சினை ஆரம்பித்தது, என்னோடு படித்த சில பேர், என்னை போல அவர்கள் வீட்டுக்கு சென்றனர். அடிக்கடி சென்றனர். இது ஏனோ சில பேர் வீட்டிலே தர்ம சங்கடமான சூழ்நிலையை உருவாக்கியது. இதனால் சில பெண்கள் என்னிடம் சங்கட பட்டனர். இதை அவர்களிடம் எப்படி கூறுவது என்று அவர்களுக்கும் தெரியவைல்லை. எனக்கும் தெரியவில்லை. நீ மட்டும் போற என்று கேட்டால் என்ன பதில் சொல்ல என்று எனக்கும் தெரியவில்லை. எனவே நான் போவதை நிறுத்தி விட்டேன்.
என்னதான் இப்போது கூட பல கல்லூரிகளில் ஆண் பெண் சகஜமாக பழகினாலும் தற்போது கூட பசங்க பொண்ணுக வீட்டுக்கு போக முடியுமா என்று எனக்கு தெரியவில்லை.

Wednesday, February 01, 2006

இந்திய அணியின் படு தோல்வி.

இது எந்த விதமான ஆச்சரியத்தையும் எனக்கு கொடுக்கவில்லை. நான் 3-0 என்கிற அளவிலே இந்திய அணி தோற்கும் என கணித்திருந்தேன். அது தவறாக போனாலும் பாகிஸ்தான் தொடரை வெல்லும் என்கிற அளவில் என்னுடைய கணிப்பு சரியாகவே வந்தது.
ட்ராவிட துவக்க ஆட்டகாரராக வந்தது சரியான கணிப்பாகவே பட்டது. அவர் அந்த இடத்தில் தொடர்ந்து ஆடுவது மிகவும் நன்று. மூன்றாவது இடத்தில் ஆட லக்ஷ்மண் இருக்கிறார். இதுவே நமக்கு முழுமையை தருகிற காம்பினேஷன்.
கங்குலிக்கு இன்னமும் நம்பிக்கை தருமாறு டீம் மேனேஜ்மென்ட் நடந்து கொள்ள வேண்டும். அது அவருக்கு டீமிற்கு நன்மை பெயக்கும். டெண்டுல்கர், ஹர்பஜன் மோசமாக ஆடியது நமக்கு தொடர்ந்து ஏமாற்றத்தை அளித்தது. நிதானமாக ஆட முனைவது அவருடைய ஆட்டதிறனை பாதித்துள்ளது.
பாகிஸ்தான் மிக வலிமையாகவே காட்சி அளிக்கிறது. ஒரு நாள் தொடரையும் அதுவே வெல்லும்