Thursday, February 23, 2006

நீங்கள் சினிமா சூட்டிங் பார்த்தது உண்டா?

பல்வேறு திரைப்பட காட்சிகள் பார்க்கும் போது எனக்கு தோன்றுகிற கேள்விகள்?.
1. எவ்வாறு இந்த நடிகைகள் இந்த மாதிரி ஆடையை குறைத்து கொண்டு ஆபாசமாக நடிக்கிறார்கள். சில காட்சிகளில் இவர்கள் முழு முதுகை கூட காட்டுகிறார்கள். சில நேரங்களில் இவர்கள் பொது இடங்களில் ஆட , நடிக்க வேண்டியுள்ளது. எவ்வாறு இந்த சூழ்நிலையை இவர்கள் நேர்கொள்கிறார்கள்.
2. மற்ற இடங்களில் வேலை பார்க்கின்ற பெண்களே சில நேரங்களில் பாலியல் ரீதியான பிரச்சினைகள எதிர்கொள்கிறார்கள். இவர்களுடையே வேலையே பாலியல் ரீதியான கொடுமையாக உள்ளது. இவர்கள் மனதில் கண்டிப்பாக சில தடுமாற்றங்கள் இருக்கும். அதற்கும் நடுவே அவர்கள் புன்னை பூப்பது போல காட்டுவது எப்படி?
3.ஆடை அவிழ்ப்பு மட்டுமே நடிப்பு என்று ஆகிவிட்ட நிலையில் , சினிமா துறையில் உள்ள மற்றவர்கள் இவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதை எவ்வளவு? இவர்களுக்கே தங்கள் மீது , தங்கள் வேலையின்மீது ஒரு சுயமரியாதை இருக்குமா?. நான் பார்த்த ஒரு படத்தில் விக்ரம் காலை தூக்க சாய சிங் அதன் கீழே சென்று வருவார். ஏன் பெண்கள் இவ்வாறு இழிவு படுத்த படுகிறார்கள்.
நீங்கள் சினிமா சூட்டிங் பார்த்ததுண்டா? நடிகைகளின் தர்மசங்கடத்தை நேரில் கண்டதுண்டா?

3 comments:

வெளிகண்ட நாதர் said...

நீங்கள் கூறும் ஆடைக்குறைப்புக் காட்சிகள் படமெடுக்கும் பொழுது வெளியாட்கள் யாரையும் அனுமதிப்பதில்லை.

கால்கரி சிவா said...

பாலா,

நான் நிறைய சூட்டிங்களைப் பார்த்திருக்கிறேன். கதாநாயகி பொன்றவர்கள் படபிடிப்பு முடிந்தவுடன் ஒரு போர்வையைப் போர்த்திக் கொள்வார்கள். துணை நடிகைக:ள் பாடு பாவம். சில பேருக்கு மறத்துவிடுகிறது, சில பேருக்கு மானத்தை விட பசி முக்கியமாக படுகிறது.

1983ல் நான் கண்ட ஒரு காட்சி : ஏவிஎம் ஸ்டூடியோவில் அமிதாப் பச்சன் நடிக்கும் படபிடிப்பில், பக்கத்து செட்டிலிருந்து அன்றைக்கு புகழின் உச்சியில் இருந்த நடிகை ராதா அமிதாப்பிற்க்கு ஹலோ சொல்லுவதற்க்கு விரைந்து வந்தார். அப்போது அவர் அணிந்திருந்த ஆடை மிக சிறியது. அவருக்கு அவருக்கு என்ன மனநிலை இருந்திருக்கும்.

சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா...

Anonymous said...

இந்திய சமூகம் பொதுவில் உடல்,உடல் இணைவு,உடல் கொண்டாட்டம் ஆகியவற்றை ஒடுக்கும்,அதே சமயம் தனிமனித அளவில் கட்டுக்கடங்காத பால் வேட்கை பொங்கும், இரட்டை மதிப்பீடுகள் கொண்டதாக உள்ளது.அதனால் இந்திய வணிக சினெமா இருண்ட அரங்கங்களில் "ரசிகனின்" கட்புலன் பால் வேட்கையை(அதே சமயம் அவன் பண்பாட்டு மனவமைப்பையும்) தணிப்பதாகவே இருந்து வந்துள்ளது.அதன் நடப்புகளில் பெண் நடிகைகள் வெறும் பொருட்களே.கே.எஸ்.ரவிகுமார் போன்ற இயக்குனர்களின் படங்களில் வயது வேறுபாடு இன்றி நடிகைகளைத் துகிலுரிப்பதைக் காணலாம்.நடிகைகளும் எல்லாவற்றுக்கும் துணிந்துதான் களத்தில் இறங்குகிறார்கள்.
நடிகைகயாக இருப்பது என்பது மற்றவற்றைப் போல் ஒரு Job அல்ல.அதில் "எல்லாம்" அடங்கும்.அதனால் அதைக் கண்டு நாம் குழப்பமடையத் தேவையில்லை.