Monday, February 27, 2006

தனி மனித வழிபாடு-ஒரு ஆய்வு.

தனி மனித வழிபாடு உலக பொதுமறை. ஆனால் தமிழகத்தில் இருப்பது அசாதாரணமானது.(Extra-Ordinary). ஏன் இந்த அளவு தனி மனித வழிபாடு உள்ளது என்பது பற்றிய ஒரு ஆய்வு.
ஒரு தனி மனிதனை மற்றவர்கள் மதிப்பதற்கு காரணங்கள் இருக்கின்றின. அதிகாரம், பணம்,பதவி மற்றும் திறமை. மற்றவர்களின் உள்ளத்தை கொள்ளை அடிக்கும் திறமை இருப்பவர் பெருவாரியான ஜனங்களின் அபிமானத்தை பெற்று விடுகிறார்கள். தமிழகத்தில் அவ்வாறு வெகு ஜன ரசிகர்களை கொண்டவர்கள் பெரும்பாலும் திரை உலகத்தினை அல்லது அரசியல் உலகத்தினை சேர்ந்தவர்களாக உள்ளது ஒரு மிக பெரிய வித்தியாசம்.

திரை பட நடிகர்களுக்கு அரசியல் ரீதியான செல்வாக்கு உண்டா என்பது மிக முக்கியமான கேள்வி. காலம் காலமாக எம்.ஜி.யார் வெற்றி பெற்றதற்கு காரணம் சினிமா என்று கூற பட்டாலும் உண்மையில் அது இரண்டவது காரணமே. திராவிட இயக்கங்கள் இந்தி புகுத்த பட்டதையடுத்து பெரும் எழுச்சி பெற்றன. தி.மு.க வலிமை மிக்க , மிக பெரிய செல்வாக்கு மிக்க இயக்கமாக மாறியது இது தான் முதல் படி. அண்ணா மரணத்திற்கு பின்னர் அது கருணாநிதி ,எம்.ஜி,யார் சண்டையாக மாற, தி.மு.க இரண்டாக உடைந்தது. இந்த இரண்டாவது படியில் தான் எம்.ஜி.ஆர் தன்னை தனி பெரும் தலைவனாக நிறுவிக் கொள்ள முடிந்தது. கருணாநிதியின் வரிசையான தவறுகள் எம்.ஜி.ஆரின் செல்வாக்கை வளர்த்தன. கருணாநிதி காங்கிரசுடன் கூட்டணி வைத்து எம்.ஜி.ஆர் ஆட்சியினை கலைத்தார். எம்.ஜி.ஆர் மாபெரும் வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின் பல கூத்துக்கள் நடந்த பின்னர் ஜெயலலிதா அ.தி.மு.க வின் கொ.ப.செ என்ற பெயரில் சர்வாதிகாரியானார். தி.மு.க குடும்ப கட்சியாக மாறி விட்டது. ஆனாலும் இரண்டாம் கட்ட அளவில் ஜனநாயகம் அங்கே மற்ற கட்சிகளை விட செழிப்பாகவே உள்ளது.

எனவே தனி மனித செல்வாக்கினை மட்டும் வைத்து இவர்கள் மேலே வரவில்லை. திராவிட இயக்கங்கள் செய்த அரசிய்லை பார்க்கும்போது அவர்கள் உண்மையில் திராவிட உணர்வு கொண்டவர்களாகவே தெரியவில்லை. ஆனால் அந்த உணர்வுகள் தூண்ட பட்டு இவர்கள் வெற்றி பெற்றார்கள். தனி மனித உரசல்களின் காரணமாகவே இந்த இயக்கம் இரண்டானது. பரம்பரை சொத்தில் பிள்ளைகள் பங்கு பெறுவது போல இவர்கள் பங்கு போட்டனர். ஆனால் அதன் பின்னர் இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தினால் அதனை தங்கள் கைக்குள் அடக்கி கொண்டனர்.

இன்று அரசியல் ரீதியாக இவர்கள் வெற்றி பெறுவதற்கு காரணம் அடுத்த நிலை தலைவர்களின் தன்னம்பிக்கை இன்மை. மற்ற கட்சிகளால் தமிழக மக்கள் அபிமானம் பெறும் வண்ணம் கொண்ட தலைவர்களை கொண்டு வர முடியவில்லை. காங்கிரஸ் எப்போதும் தலைவரையே அப்பாயின்ட் செய்தது. விளைவு தமிழக மக்களினால் அந்த தலைவர்களை தலைவனாக அங்கீகாரம் செய்ய முடியவில்லை.

அரசியல் ரீதியாகவும், திரைப்பட ரீதியாகவும் மக்கள் நல்ல தலைமை பண்புகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறவர்களையே விரும்பி இருக்கிறார்கள். அப்படி பட்டவர்களின் வெற்றி தோல்விகளை சம்பந்தமே இல்லாமல் தன்னுடைய வெற்றி தோல்வியாக நினைக்கிறார்கள். இது தான் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் உள்ள எமோஷனல் பாண்டிங்: உணர்வு சங்கிலி.

அதன் காரணமாகவே இந்த கலைஞர் வாழ்க, ஜெயலலிதா வாழ்க கோஷங்கள். இவர்களை பெயர் சொல்லி கூப்பிடாத பவ்யங்கள்.
இந்தி எதிர்ப்பு போராட்டதின் போது மொத்த தமிழகமும் ஒரு விதமான நெருக்கடி மனநிலையில் இருந்தது. தங்களுடைய இனத்திற்கு ஆபத்து வந்து விட்ட நேரத்தில் காப்பாற்ற வந்தவர்களாகவே இந்த திராவிட இயக்க தலைவர்களை கருதினர். அந்த உணர்வினால் வந்த இயக்கத்தின் பலத்தினை தான் இந்த தலைவர்கள் பங்கு போட்டு கொண்டனர். அதற்கு மக்கள் மனதில் இருந்த பிம்பம் உதவியாக இருக்கிறது.இந்த தலைவர்களின் வெற்றி இந்த மக்களுக்கு ஒரு கனவு சுகத்தை, அதிகாரம் தனது கைக்கு வந்தது போல ஒரு உணர்வினை கொடுக்கிறது. அது தான் கரை வேட்டியாக தமிழகம் முழுவதும் தெரிகிறது.

இன்றைய நடிகர்களாலும் அத்தைகைய வெற்றி அடைய முடியும் .(எம்.ஜி,யார் மாதிரி வர முடியாது என்று கூறுவது தவறு.) திராவிட இயக்கம் எழுச்சி அடைந்தது போல ஒரு காரணம் உருவானால் இந்த நடிகர்களாலும் அத்தகைய வெற்றி அடைய முடியும். இதற்கான உதாரணத்தை தேடி வெகுதூரம் போக வேண்டியதில்லை.1996-இல் ஜெயலலிதாவிற்கு எதிராக ஒரு மிக பெரிய அலை உருவானது. அந்நேரம் அறிக்கை விட்ட ரஜினிகாந்த், கட்சி ஆரம்பித்த மூப்பனார் மாபெரும் அனைவர் பற்றியும் மிக நல்ல அபிமானம், பாசம் வளர்ந்தது. சுறுசுறுப்பாக செயல் பட்டிருந்தால் த.மா.க அல்லது ரஜினி இந்த் அங்கீகாரத்தினை தக்க வைத்திருக்கலாம்.


சவாரி செய்து பழக்க பட்ட ஒரிஜினல் காங்கிரசு காரர்களான இவர்களுக்கு தனி கட்சியை வளர்க்கவே தெரியவில்லை. ரஜினியோ தேர்தலுக்கு தேர்தல் அறிக்கை விட்டால் போதும் என்று தவறான கணிப்பிற்கு சென்றார். பிம்பங்களுக்கு அடிமையான தமிழக மக்களுக்கு , ஆளுமைதன்மையினை இரசிக்கிர மக்களுக்கு இவர்கள் விரைவாக அன்னியப்பட்டு போய்விட்டார்கள். கருணாநிதி, எம்,ஜி,ஆர்., ஜெயலலிதா வெற்றியின் மூல காரணம் திராவிட இயக்கத்திம் ஆரம்ப அசுர பாலம், மக்களுக்கு அவர்கள் கொடுக்கும் பிம்பங்கள்.


தமிழக மக்களுக்கு தேவை சுகமான பிம்பங்கள்,வெற்றிகரமான பிம்பங்கள்,வீராதி வீர பிம்பங்கள். அவர்கள் ஒட்டு மொத்த உணர்வு தூண்டபடுகிற சூழ்நிலையில் இந்த பிம்பங்களை கொடுப்பவர்கள் பெரிய வெற்றியினை அடைகிறார்கள். அந்த வெற்றியினை இந்த பிம்பங்களை கொடுப்பவர்கள் தக்க வைத்தால் வெற்றி தொடர்ச்சி அடைகிறது. முதலாவது படியில் வெற்றி பெற்ற த.மா.க, ரஜினி அடுத்த படியில் அன்னிய பட்டு போய் விட பிம்பங்கள் தளர்ந்து விட்டன.


தமிழக மக்கள் பிம்பங்களுக்கு மயங்குகிறவர்கள் அது தான் இந்த அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள் , தொலை காட்சி தொடர்கள் வெற்றிக்கு காரணம். மக்கள் விரும்புகிற பிம்பங்களை கொடுக்கிற வரை இவர்களின் வெற்றி தொடரும். இது தான் தனிப்பட்ட நபர்கள் வழிபாடு நடை பெற மூலகாரணம். தனிநபர்கள் வழுபாடு அரசியல் ரீதியாக செயல்படுமா என்றால் : எடுபடும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக அமைந்தால் , எம்.ஜி.ஆருக்கு அமைந்தது போல(கருணாநிதி), ஜெயலலிதாவிற்கு(எம்.ஜி.ஆர் மரணம்) அமைந்தது போல.

1 comment:

குமரன் (Kumaran) said...

இப்ப எல்லாம் கொஞ்சம் பெரிசாவே பதிவு போடத் தொடங்கிவிட்டீர்கள். வாழ்க வளர்க.