Wednesday, February 08, 2006

இன்சமாமின் புலம்பல்.

சர்ச்சைக்கிறிய முறையில் ஆட்டம் இழந்த இன்சமாம் இந்திய வீரர்கள் அப்பீல் செய்ததை பற்றி புலம்பி தள்ளி இருக்கிறார். இதனால் இரண்டு அணி வீரர்களிடேயே உள்ள நல்லுறவு பாதிக்க படும் என்றும் கூறியுள்ளார்.
இதில் எனக்கு புரியாத ஒன்று உண்மையில் இன்சமாம் வருத்த பட வேண்டுமானால், குறை கூற வேண்டுமானால் சென்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்ட தொடரில் அவர் ஆட்டம் இழந்தது பற்றி.அது உண்மையில் தவறாக எடுக்க பட்ட முடிவு. ஏனெனில் அவர் த்ரோவிலிறுந்து விலகிசென்றார். ஆட்டவிதிகள் அவருக்கு சாதகமாகவே உள்ளது. ஆனால் அம்பயர்கள் தவறாக முடிவு எடுத்து விட்டனர்.
ஆனால் இந்த முறை அவர் த்ரோவை தடுத்து விட்டார். எனவே இந்த முறை எடுக்க பட்ட முடிவு சரியே. ஆனால் அதை குறை கூறாத இன்சமாம் இதனை குறை கூறுவது எதனால்?
பொதுவாகவே அனைத்து அணிகளொடும் சக்கை போடு போடும் இன்சமாம் இந்தியாவோடு தடுமாறவே செய்கிறார். அடிக்க்கடி அவர் கும்ப்லேயின் பந்து வீச்சிற்கு பலியாகிறார். ஆனால் முகமது யூசூஃப், யூனச் கான் மற்றும் பலர் சக்கை போடு போட தான் தடுமாறுவது அவரரி பாதித்துள்ளதொ?. இரண்டுக்கும் ஏதெனும் சம்பந்தம் உண்டோ?

1 comment:

dvetrivel said...

அன்சமாமுக்கு அச்சமயத்தில் 2 வழிகளே இருந்தது
1) பந்து விக்கெட்டில் படும் முன் கோட்டிற்கு உள்ளே சென்றிருக்கலாம்

2) பந்து படாதவாறு உடம்பை வலைத்து நகர்ந்திருக்கலாம்.

ஆனால் பாருங்கள் அவர் தனது (பூத)உடலை வைத்துக்கோண்டு எதையும் செய்ய முடியாமல் போய்விட்டது. பேசாமல் அவர் அணியின் பயிற்சியாளர் அகிவிடலாம்...