Friday, February 03, 2006

பேரை மாற்றினால் தலையெழுத்து மாறுமா?

பேரை மாற்றுவது பற்றி எக்கச்சக்கமான உட்டாலக்கடிகள். ஆனால் அதில் முக்கியமாக பலன்களை பெறுவது பேரை மாற்றுபவர்களை விட,பேரை மாற்றச் சோல்லும் கன்ஸல்டண்ட்கள் மட்டுமே.எதனால் இந்த மோகம் மக்களை பிடிக்கிறது?
வெற்றியின் மீது மக்கள் வைத்திருக்கும் கண்மூடித்தனமான அன்பு. வெற்றியின் இரகசியம் புரிகிற வரை அதில் பேர் மாற்றுவதனால் வருவதில்லை என்பது தெரியும் வரை இந்த கன்ஸல்டண்ட்கள் காலம் பொற்காலம். என்னுடைய சில உறவினர்கள் இதில் மேதாவிகள். எண் கணிதம், வாஸ்து போன்றவற்றில் அவர்களுக்கு தெரியாதது எதுவும் கிடையாது என்கிற பெருமை வேறு. குப்பையில் மாஸ்டராகி இருக்கிறோம் என்பது அவர்களுக்கு இன்னமும் புரியவில்லை.
பேர் வைக்க எண் கணிதம் பார்பவர்களை நான் மனிதனாகவே மதிப்பதில்லை. மண்டையில் மூளை வேலை எந்த அளவிற்கு செய்கிறது என்பது அவர்கள் இந்த மாதிரி குப்பைகளை நம்புவதில் தெரிகிறது.
வெற்றியின் இரகசியம் உண்மையில் ஆழ்ந்த மனதில் பதிவாகி இருக்கும் எண்ணங்கள். அவற்றை ஆராய்வது மூலமாகவே நான் வாழ்க்கையை மாற்ற முடியும். எதற்கும் கலங்காத தன்னம்பிக்கை வேண்டும் என்று விவேகானந்தர் கூறியதை நான் இந்த முட்டாள் தனமான விஷயங்களை நம்புவர்களுக்கு சிபாரிசு செய்கிறேன். வெற்றிக்கு தேவை தன்னம்பிக்கை இந்த மாதிரியான நம்பிக்கைகள் அல்ல. ஒருவருடைய வெற்றியை காரணபூர்வமாக ஆராயுங்கள். அவருடைய பெயரில் காரணம் எதுவுமில்லை.

2 comments:

முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' said...

தங்களின் வலைப்பூ மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அமைந்துள்ளது. இதைப்போலவே எனது தமிழ் மன்றத்தின் வலைப்பூவையும் மாற்றிட செய்ய வேண்டியவற்றைக் கூறவேண்டுகிறேன். நான் கணினி அறியாதவன்.

அன்புடன்
முனைவர் இர.வாசுதேவன்

இலவசக்கொத்தனார் said...

அலைன்மெண்டை ஜஸ்டிபய்டில் இருந்து மாற்றுங்கள். நெருப்புநரியில் சரியாகத் தெரிவதில்லை.

இலவசகொத்தனார் என இருந்த என் பெயரை இலவச'க்'கொத்தனார் என மாற்றியபின் அதிகம் பின்னூட்டம் வருகிறது! ;)