Friday, February 03, 2006

தமிழ்மணம் சட்டமன்ற தேர்தலில் போட்டி?

விகடனில் இந்த வாரம் சு,சாமி பேட்டி வந்திருக்கிறது.ஜாலியாக இருக்கும் என்பதால் அதை படித்தேன். காலம் மாறினாலும் சு.சாமி மாறமாட்டார். இந்த முறை அவர் மூன்றாவது அணி அமைப்பது அவருடைய திட்டமாம்.
தேர்தல் வந்து விட்டாலே புதியதாக சில கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தோன்றுவார்கள். இவர்கள் அடிக்கிற கூத்துக்கு அளவே கிடையாது. தங்களுக்கு இருக்கிற ஆதரவை பற்றி இவர்கள் விடுகிற ஸ்டெட்மெண்ட்கள் காமேடி டைத்தை விட பெட்டர்.போன சட்டமன்ற தேர்தலின் போது சரத் பவாரின் கட்சியின் தமிழக தலைவர் 160 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என அறிக்கை விட்டார்.

நாமும் கொஞ்சம் பீலா விடலாம். தமிழ்மண வலைபதிவர்கள் கட்சி போட்டியிட்டால் 200கொகுதிகளில் வெற்றி பெறும். டோண்டுவின் வாக்கை போலி டோண்டு போடுவார். டோண்டு எலெக்ஷன் கமிஷனருக்கு கடிதம் எழுதுவார்.

7 comments:

சிறில் அலெக்ஸ் said...

//டோண்டுவின் வாக்கை போலி டோண்டு போடுவார். டோண்டு எலெக்ஷன் கமிஷனருக்கு கடிதம் எழுதுவார்.//

:)

Santhosh said...

தப்பு பாலா,
டோண்டு அப்படி எல்லாம் செய்ய மாட்டார் எலெசன் கமிஷனருக்கு கடிதம் போட்டால் மேட்டர் முடிந்து விடும், அப்படி எல்லாம் பண்ண மாட்டார் அதுக்காக முதலில் ஒரு தனி பதிவு போடுவார் அப்புறம் தகுந்த இடைவெளியில் போலியை தாக்கி ஒரு பதிவு போடுவார், அப்புறம் அவர் போடுற ஒவ்வொரு ஒட்டையும் ஒரு காப்பி எடுத்து தனி பேலட்டில்(ballot) போடுவார். பிரச்சனை முடியிறமாதிரி இருந்தா உடனே எலக்ஷன் கமிஷனருக்கு ஒரு நன்றி பதிவு போடுவார்.

பாலசந்தர் கணேசன். said...

சந்தோஷ் அவர்களே நன்றி.
மிக நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளீர்கள்....

இலவசக்கொத்தனார் said...

//அண்ணா பல்கலை கழக துணைவேந்தருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது. (3) ://

இப்படி ஒரு தலைப்பு தமிழ்மணத்திலே. சரி வந்து பார்ப்போம்ன்னு சுட்டிய சொடுக்கினா வர பதிவு - தமிழ்மணம் சட்டமன்ற தேர்தலில் போட்டி?

பைத்தியம் துணைவேந்தருக்கா, எனக்கான்னு மனசுகுள்ள பட்டிமன்றமே நடக்குது. என்னன்னே புரியலையே. கடவுளே.

பாலசந்தர் கணேசன் அவர்களே, உங்கள் வலைப்பூவை பயர்பாக்ஸில் பார்க்க ஏதுவாகச் செய்யக்கூடாதா?

பாலசந்தர் கணேசன். said...

என்ன ஆச்சுன்னு எனக்கும் தெரியல. பார்க்கிறேன்

Karthik Jayanth said...

//அண்ணா பல்கலை கழக துணைவேந்தருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது. (3) ://

இப்படி தலைப்பு பாத்து வந்த என்னத்த சொல்ல....

கொஞ்சம் சரி பண்ண கூடதா ?.

Muthu said...

பாலச்சந்தர் கணேசன்,
உங்கள் பதிவுகளை "align=justify" செய்யாமல் இருந்தால் பயர்பாக்ஸில் தெளிவாய்ப் பார்க்க இயலும்.