நான் அவர்களை பழிவாங்க மாட்டேன்.
இதை சொன்னது யார் தெரியுமா?. எந்த புரட்சியும் செய்யாமல் புரட்சிகலைஞரான விஜயகாந்த் அவர்கள். யாரை பற்றி? தமிழக காவல்துறையை பற்றி. அய்யோ பாவம் தமிழக காவல் துறை. இவர்கள் எங்கெல்லாம் அடிபடுகிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் இவர்களை எல்லாவிததிலும் தவறாக பயன்படுத்துவது. கருணாநிதி இவர்களை கெட்டு குட்டி சுவராக்கினார். பின்னர் அவரே இவர்களை மிக கடுமையாக விமர்சித்தார். ஜெயலலிதா குட்டி சுவரை கேடு கெட்ட குட்டி சுவராக்கினார். இன்றைக்கு இவர்களை பற்றி யார் என்னவெல்லாம் பேசுகிறார்கள் பாருங்கள்...
முன்னர் ஒரு முறை குட்டி எம்.ஜி.யார் என்று தனக்கு தானே பெயர் சூடி கொண்ட சுதாகரன் நான் ஆட்சிக்கு வந்தால் யாரையும் பழி வாங்க மாட்டேன் என்று அதிரடி ஸ்டேட்மெண்ட் விட்டார். சுப்ரமணிய சுவாமி மட்டும் கோமாளி அல்ல. அதற்கு இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.
அது சரி ஆட்சிக்கு வந்தால்தானே... ஜனநாயகத்தில் இத்தகைய பேச்சுரிமைகளை தடுக்க முடியாது.
நான் ஆட்சிக்கு வந்தால்
1. அனைவருக்கும் இலவச கல்வி.
2. அனைத்து பள்ளிகளுக்கும் சர்வதேச தரம்
3. ஆசிரியர்களுக்கு சிறந்த சம்பளம்
4. 3 மணி நேரம் விளையாட்டு பயிற்சி தினந்தோறும்.
5. 10 வயதில் இருந்தே ப்ரொக்ராமிங்.
6. திறந்த புத்தக தேர்வுகள்.
7. வாரத்திற்கு நான்கு நாள் மட்டுமே பள்ளிகூடம்.
8. வீட்டு பாடங்கள் அனைத்தும் ரத்து. பள்ளி மட்டுமே படிப்பதற்கு.
9. கட்டாயமாக தாய்மொழி படிக்க வேண்டும்.
10. நல்ல சாலை வசதி,போக்குவரத்து வசதி.
11. 20 லட்சம் வரை வருமான வரி விலக்கு.அதற்கு மேல் இருந்தால் மாதத்திற்கு 5% வரி. ஆனால் அதற்கு எந்த விலக்கமும் கிடையாது. எல்லாவரியும் கட்டாயமாக வசூலிக்க படும்.
12. நிறைய நீதிமன்றங்கள்.
13. சமூக விரோதம், கட்ட பஞ்சாயத்து, கந்து வட்டி, தீவிரவாதம் அனைத்துகும் கடுமையான தண்டனை. 14. போலியாக கூச்சல் போடும் மனித உரிமைகள் இயக்கங்கள், மிருக பாதுகாப்பு இயக்கங்கள் அனைத்துக்கும் தடை.
இதற்கெல்லாம் வருமானம் எங்கிருந்து வரும் 11 இலிருந்து. வரி ஒழுங்காக வசூலிக்க பட்டாலே இந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும்.
1 comment:
ஆகா, இந்த பதினாங்கு குறிப்புகளும் நிஜமாக்கப்படும் நாள் விரைவில் வரட்டும்.
மிக அருமையான குறிப்புக்கள். வாழ்த்துக்கள்.
Post a Comment