Thursday, February 02, 2006

கலாநிதி தடுமாறுவது ஏன்?

வெகு வெற்றிகரமாக சன் நிறுவனத்தின் அனைத்து சானல்களையும் நிர்வகித்து வரும் கலாநிதி மாறன் வார இதழ்கள் அல்லது நாளிதழ்களில் அவ்வளவாக பிரகாசிக்கவில்லையே ஏன்?
குங்குமம், தினகரன் இன்னமும் கூட் சூடுபிடிக்கவில்லை. தமிழ் முரசு இணையத்திலும் கிடைக்கிறது. வியாபாரம் நன்றாகவே நடக்கிறது என கூற பட்டாலும் அது காலை தினசரியாக மாறினால் உடனே படுத்து விடும்.
ஒரு பக்கம் மீடியாவில் சக்கை போடு போடுகிறவர் ஏன் பத்திரிக்கை வட்டாரத்தில் முன்னேற முடியவில்லை என்று யோசித்தால் சன் டீவியின் வெற்றி ரகசியம் தெரிந்து விடும். ஊருக்கு முன்பு தொடங்கி விட்டார்கள், நல்ல பணபலம், அரசியல் செல்வாக்கு, நிறைய திரைபடங்கள் வாங்க முடிகிறது. அடுத்தடுத்து சானல்கள் துவங்க முடிந்தது, முடிகிறது. சினிமா, சீரியல்கள் தரம் பற்றி கவலை படாமல் காண இரு கூட்டம் இருக்கிறது. இதை மூலதனமாக வைத்து தான் சன் நிறுவனங்கள் வெற்றி பெற்றுள்ளது. தனி பட்ட தர முத்திரை எதுவும் அதற்கு கிடையாது.
ஆனால் காலை நேர நாளிதழ், வார பத்திரிக்கைகான வட்டம் வேறு. அங்கே இருப்பவர்களிடம் இது போன்ற மலிந்த சரக்குகள் மட்டும் பற்றாது. கலாநிதி இதனையும் அங்கே முயற்சித்தார். ஆனால் அது தற்காலிகமாக பலன் தந்ததே தவிர அவரால் குங்குமத்தை நிலை நாட்ட முடியவில்லை. இலவசங்கள் நிறைய கிடைக்கும் வரை அது எண்ணிக்கை அதிகமாக விற்றது. ஆனால் அது நின்றவுடன் , எண்ணிக்கையும் குறைந்தது. எதற்காக மக்கள் குஙுமம் வாங்கினார்கள் என்பது தெளிவு.
தரத்தை உயர்த்தி கலாநிதி ஜெயிக்கட்டும் முதலில். இது வரை இவர்கள் பெற்ற வெற்றி உண்மையில் ஒரு உட்டாலக்கடி.

2 comments:

Unknown said...

Bala.. i guess its too early to comment on kalanidhis performance in the print media circuit.

He has just entered and has really created a ripple in the existing print world.

From business perspective definitely Tamil murasu is doing good as a new entrant.

Kungumam does have a regular patronage ofcourse only next to the likes of av and kumudam..

Let us wait and watch before u pass judgement on his performance

பாலசந்தர் கணேசன். said...

இல்லீங்க நான் அவர் தரத்தை முன்னிறுத்தி வெற்றி பெறவில்லை. அபாரமான பண பலம், அதிகார வட்ட நெருக்கம், சுமங்கலி அராஜகம் ஆகியவற்ற முலதனமாக கொண்டு அவர் வெற்றி பெற்றுள்ளார்.
பத்திரிக்கை வட்டாரத்தில் அவரால் இதனை வைத்து முன்னே வர முடியுமா என்பது சந்தேகமே.
அதை அவர் செய்யாத வரையில் அவரை திறமைசாலி என்று சொல்ல முடியாது. பல சாதக அம்சங்களை வைத்து நம்பர் 1 இலக்கினை அடைந்தவர் என்று கூறலாம். இது ஸ்டாலின் , தயாநிதி,மற்றும் அன்பு மணி அனைவருக்கும் பொருந்தும்.


தமிழ் முரசு நன்கு விற்பனையாவது உண்மை. ஆனால் அதுவே காலை நாளிதழ் ஆனால் நின்று விடும்.