Wednesday, February 08, 2006

கணவன் மனைவிற்கிடையே அடிக்கடி சண்டை வர காரணம் என்ன?

1. பெரும்பாலும் சண்டை வருவதற்கு மூல காரணம் ஒருவர் மற்றவர் வீட்டை பற்றி குறை கூறுவது. இதற்கான காரணங்கள் கல்யாணத்தின் போதே ஆரம்பித்து விடுகின்றன. இதனால் இரு தரப்பு பெரியவர்களும் அமைதியான முறையில் பேசி தீர்த்து கொள்வது நல்லது. இரு தரப்பு பெரியவர்களிடமும் நல்ல உறவு முறை அமைவது அவசியம். அது தான் கூட்டு குடும்பத்திற்கு, இனிமையான மண வாழ்விற்கு முக்கியமானது.
2. கல்யாணத்தை ஒட்டி சின்ன பிரச்சினைகள் எழும் போது , இரு தரப்பினரும் ஒவர் ரியாக்ஷன் காட்டாமல் இருப்பது அவசியம். ஒரு சின்ன பிரச்சினைக்காக ஒரு தரப்பில் யாராவது ஊளையிட, அது கடைசியில் மிக முக்கியமான கணவன் -மனைவி உறவை பாதிக்கும் வகையில் அது அமைந்து விடுகிறது. கல்யாணம் செய்ய படுவதே இரண்டு பேர் இணைந்து நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக. இந்த நோக்கத்தை மறந்து விட்டு பெரியவர்கள் செயல்படுவதே எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்.
பிரச்சினை இல்லாமல் கல்யாணம் முடிந்தால், இல்வாழ்க்கை அமைதியாக இருக்கும். இல்லாவிட்டால் அதுவே பின்னர் வருகின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலகாரணமாக அமையும்.

1 comment:

வெளிகண்ட நாதர் said...

நல்லதொரு கருத்து நண்பரே!