Tuesday, February 21, 2006

காம்பிர் கங்குலியை விட நல்ல ஆட்டகாரரா?

கங்குலியை விரட்டி விட்டு காம்பிர் வைத்து ஆடுவது சரியான முடிவாக தெரியவில்லை. அனுபவத்திலும், ஆட்ட திறனிலும் கங்குலி காம்பிரை விட சிறந்தவர். அவரால் பந்து வீசவும் முடியும். ஒரு நாள் போட்டிகளில் சேவாக் அல்லது சச்சின் ஆட முடியாத போது கங்குலி மிகவும் உதவியாகவே இருப்பார்.
சாப்பல் விரும்பாததல் மட்டுமே கங்குலி நீக்க படுகிறார் என்றால் அது தவறு. ஒரு கேப்டன் என்கிற முறையில் ட்ராவிட் கங்குலியை கொண்டு வர முழு முயற்சி செய்ய வேண்டும். கங்குலி மூன்றாவது துவக்க ஆட்டகாரராக இருப்பது அணிக்கு மிகவும் நல்லது. புதிய ஆட்டகாரர்கள் நன்றாக ஆடாத பட்சத்தில் கங்குலிக்கு மீண்டும் வாய்ப்பு மிடில் ஆர்டரில் கொடுப்பதில் தவறில்லை.

5 comments:

Anonymous said...

Hello Sir,
ithu avasarap pathivu.
Gambir is not brought against Ganguly. its a trial only. Like many new blood to the team.
If Shewaq would not return to home in the middle, Gambir's chances also would be thin.
A.J

பாலசந்தர் கணேசன். said...

No. Not really. Ganguly can continue in the team as a third opener. There is no need to try some one at the top slot. We have tendular, shewag and ganguly aleady. Instead we can try a spinner as our spin department has become very weak.

Unknown said...

கங்குலி திறமையைப்பற்றியே இங்கு கேள்வி இல்லையே? அவரது போக்கு சரியில்லையென்று தானே அவர் நீக்கப்பட்டார்? அனானிமஸ் சொன்னது போல, இளவயதும் கம்பீருக்கு ஒரு பிளஸ்.

கம்பீர் இல்லையென்றால், வாசிம் ஜாஃபர் தான் உள்ளே வருவார். கங்குலி வருவதற்கு இனி வாய்ப்புக்கள் மிக மெல்லியதே. (அதுவும் இந்தியா வென்றுகொண்டிருக்கும் இந்த நிலையில்).

நன்றி!

சாணக்கியன் said...

அண்ணே கவாஸ்கர் கூட காம்பிரை விட நல்ல ஆட்டக்காரராக இருக்கலாம், அதுக்காக அவரை விளையாட வைக்க முடியுமா? அப்படிதான் கங்குலியும்.. அவர் திறமை மங்கிப்போச்சுன்னே... 2003 உலக கோப்பைல அவர் திறமைய பார்த்தே அவர தூக்கீருக்கனும்.. நீங்க சொன்ன அந்த அனுபவம் திறமைனு பழைய பல்லவி பாடித்தான் இவ்வளவு நாள் வெச்சிருந்தாங்க..

உங்களுக்கு கங்குலிமேல அன்பு இருக்கலாம்னே.. ஆனா காம்பிருக்கு வாய்ப்பு குடுக்கணும்கறேன் இன்னொரு தோனியா கூட வருவாருன்னே...

பாலசந்தர் கணேசன். said...

சாணக்கியன் அவர்களே,
முதலில் வெறும் புள்ளி விபரத்தை வைத்து நான் ஆதரிக்கவில்லை. சேவாக் , டெண்டுல்கர் இருவரில் ஒருவர் ஆட இயலாத போது நமக்கு ஒரு நல்ல துவக்க ஆட்டகாரர் தேவை படுகிறது. அந்த இடத்தில் கங்குலி காம்பிரை தோதான ஆட்டகாரர்.

காவாஸ்கரை ஏன் இங்கே இழுக்கிறீர்கள்?. வெறும் புள்ளிவிபர அடிப்படையில் பார்த்தால் கூட காவஸ்கர் ஒரு நாள் போட்டியில் அப்படி ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை. அந்த கோணத்தில் பார்தாலும் கூட உங்கள் கருத்து தவறு தான்.

உங்கள் கருத்து உங்கள் நகைச்சுவை உணர்வையும் , சாமர்த்தியத்தையும் காட்டுகிறதே தவிர, சரியான கருத்தாக அமையவில்லை.