சிவகங்கையில் 5ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது முதன் முதலாக எனது வீட்டில் பக்கத்தில் உள்ள ஒரு காம்பவுண்டில் இரண்டு பொண்டாட்டிகாரர் ஒருவரை சந்தித்தேன். அவர் இரண்டு மனைவிகள் , இரண்டு மனைவியின் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் குடியிருந்தார். ஏனோ தெரியவில்லை அவரை பற்றி அல்லது அவருடைய குடும்பத்தை பற்றி யாருக்கும் நல்ல அபிப்ராயம் இல்லை. யாரும் அவர்கள் வீட்டுடன் சாதரணமாக பழகி நான் பார்த்ததில்லை. அவர்களை பற்றி மற்றவர்கள் கிசுகிசு பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
மனைவி இறந்த பின்னர் குழந்தைகளுக்காக மணம் புரிந்தவர்களை பிறகு நான் சந்தித்தேன். அவர்களை சமூகம் மௌனமாக ஏற்று கொண்டுள்ளது. செல்வாக்கு உள்ளவர்கள் இரண்டு பொண்டாட்டிகாரர்களாக இருப்பதை நான் பார்த்தது அதற்கப்புறம். அதனை சமூகம் ஒரு குறையாக அல்லது வித்தியாசமானதாகவோ கண்டதில்லை.
இந்த சூழ்நிலையில் வளர்கிற குழந்தைகளின் மனநிலை எவ்வாறு இருக்கும்? இரண்டாவது தாரத்தின் பிள்ளைகள் என்றாலே கேவலமாக பார்க்கிற சமூகத்தின் கேலி பார்வை அந்த குழந்தைகளை எவ்வாறு பாதிக்கும்? இரண்டாவது மனைவியாக வருபவர்களை பல தரப்பு மீடியாக்கள் கீழ்தரமாகவே சித்தரித்துள்ளன. எனக்கு தெரிந்த வரை அவர்களுடைய உலகத்தை, உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்தவர் மணிரத்னம்.(அக்னி நட்சத்திரத்தில்)
சில கேள்விகள் புரியாமலேயே போய் விடுகின்றன: கல்யாணமானவர் என்று அறிந்த பின்பும் இந்த பெண்கள் எதனால் திருமணம் செய்கிறார்கள். அவர்களை அவ்வாறு செய்ய தூண்டுவது எது?சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லாததல் இரண்டாவது மனைவியின் குழந்தைகள் நியாயமான உரிமைகளை கோர முடியாமல் போவது எந்த வகையில் சேர்த்தி?
2 comments:
அதிகமாய் எழுதுகிறீர்கள். பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
ஆழமாய் எழுதினால் இன்னும் நன்று.
ஏனோ ஒரு மாலை நாளிதழை மேய்வது போல் தோன்றுகிறது - ஒரு வரி சேய்திகள்!
வாசக நன்பனாய் என் கருத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி. என் ப்லாகிற்கு வருகை தந்தமைக்கும் நன்றி. கடற்புரத்தான் ஜோ, அப்பாவி ஆறுமுகம்,ஜிகிடி, நிலா இன்னம் பலரும் இதனை கூறியுள்ளனர். நீங்கள் கூறியவற்றை மனதில் கொள்கிறேன்.
Post a Comment