என் ப்லொக்கிற்கு வருகை தந்ததற்கு நன்றி. ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்பது நானும் என் நண்பர்களும் நடத்தி வந்த மாத பத்திரிக்கை. இப்பொது வெப் வடிவம் பெற்றுள்ளது.
Friday, February 24, 2006
When every thing seems to be lost
வெற்றி பெறலாம் வாருங்கள்.
எத்தனையோ சுய உதவி புத்தங்கள் நான் படித்திருக்கிறேன். எத்தனையோ வெற்றி கரமான மனிதர்களை நானும் பார்த்து விட்டேன். வெற்றியின் இரகசியம் என்ன? பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க நாம் காணும் வழி உண்மையில் சரியானது தானா?
இது தான் வெற்றிக்கு வழி என்று காட்ட ஒரு பாதை இல்லை. மேலும் வெற்றி என்பது, ஒரு இலக்கு அல்ல. அது ஒரு தொடரவேண்டிய பயணம். பிரச்சனைகளை தீர்க்க ஒரு நிரந்தரமான தீர்வை தேடி நான் அலைந்து கண்டவற்றை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
எந்த ஒரு பிரச்சனையையும் தீர்க்க நான் சொல்லும் வழி மூல காரணத்தை கண்டு பிடியுங்கள். அதை செய்யாத வரை எல்லா பிரச்சினைகளும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.
வெற்றிக்கு அவசியமானவை இரண்டு
1. வலிமை: உடல், மனம், சிந்தனை இவை பயமின்றி, சுதந்திரமாக செயல் பட வேண்டியது மிக அவசியம். நீங்கள் வலிமையாக இருந்தால் எதுவும் உங்களை பாதிக்காது. உண்மையில் வெளி உலகில் உங்களை பாதிக்கும் விஷயம் எதுவுமில்லை. யாருக்குமே வராத ஒரு கஷ்டமா உங்களுக்கு வந்து விட போகிறது?( உண்மையில் இவ்வாறு சில பேருக்கு நேரலாம். ஆனால் அது மிக அரிதே).
வலிமையோடு நிலைத்து நின்றால் எதனையும் நேர்கொள்ளலாம். எனக்கு இரு நண்பர்கள் உண்டு. அவர்கள் நான் கண்டு கொண்ட பாடம் இதுவே: வலிமை, வலிமை,வலிமை. ஒரு நண்பர் அலுவலக மேலாளரை கூட எதிர்த்து விடுவார். இன்னொருவர் ஒரு அலுவலகத்தில் இருந்து விலகி இன்னொரு இடம் சென்றார். அவருக்கு அனுபவ சான்றிதல் கிடைக்கவில்லை வெகுநாளாக. அவர் என்ன செய்தார் தெரியுமா?. புலம்பவில்லை. அழுகவில்லை. குறை சொல்லவில்லை. ஒரு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பினார். அனுபவ சான்றிதழ் கிடைக்காவிட்டால் மின்னஞ்சலை அனைவருக்கும் அனுப்புவதாக கூறி மிரட்டினார். தொலைபேசியில் அழைத்து காலவரை நிர்ணயம் செய்து எச்சரித்தார். இவருடைய தன்னம்பிக்கையை பார்த்து அனைவரும் மிரண்டு போய் அவருக்கு சான்றிதழை வழங்கி விட்டனர்.
இது என்னுடைய வாழ்விலும் நடந்திருக்கிறது. என்னை ஒரு முறை மேலாளர் கீழ்தரமாக நடத்த முயன்றார். ஒரு ப்ராஜக்டில் இருந்து இன்னோரு ப்ராஜக்ட் சென்ற போது, நீ அங்கே இருந்து வெளியெ வந்தாய். நீ அங்கே ஒண்ணும் செய்திருக்க மாட்டாய் என்றார். நான் அதை கேட்டு அதிர்ச்சியோ, மனவருத்தமோ அடையவில்லை. இது மிக முக்கியம். மிக வலிமையோடு, உற்சாகத்தோடு தன்னம்பிக்கையுடன் இந்த பதிலை கூறினேன். நீங்கள் வேலை செய்வது போல நான் வேலை செய்தால் என் ப்ரொஜக்ட் குப்பை தொட்டிக்கு போயிருக்கும். நீங்கள் வேலை செய்வது போல இங்கு உள்ள எல்லாரும் வேலை செய்தால் எல்லா ப்ராஜக்ட்டும் குப்பை தொட்டிக்கு போயிருக்கும். அதன் பின்னர் அவர் ஒழுங்காக நடத்துகிறார்.
எனவே மன வருத்தம் இல்லாமல் தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் வலிமையாக முன்னே செல்லுங்கள். எப்பொதும் தலை நிமிர்த்தி , நெஞ்சை உயர்த்தி நடை போடுங்கள். ஒரு நொடி மட்டுமில்லை, ஒரு நிமிடம் மட்டுமில்லை எபோதும் வலிமையாக உங்கள் உள்ளத்தை வைத்திருங்கள்.
2. ஊக்கம்.
இதற்கு நிகரானது எதுவுமில்லை. நான் வென்றே தீருவேன் என்று திரிபவனை யாராலும் தடுக்க முடியாது. இது என்றும் குறையாத வண்ணம் இருக்க வேண்டும். உங்கள் ஒவ்வொரு நாளையும் கனவு நாளாக வெற்றிகரமான நாளாக நினையுங்கள். அது அவ்வாறகவே முடியும்.
என்னுடைய வலைபதிவையே நான் அதற்கு எடுத்து காட்டாக கூறுவேன். பலர் விமர்சித்த போதிலும் தளராமல் எழுதுகிறேன். டெம்ப்ளெட்டில் பல மாற்றங்கள் செய்தேன். இன்னமும் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.இப்போது கூட சென்ற பதிவின் லின்க் ஒவ்வொரு பதிவிலும் தெரியும் வண்ணம் மாற்றி அமைத்துள்ளேன்.
என்னுடைய வலைபதிவை பார்க்கவும் படிக்கவும் சிறந்த பதிவாக ஆக்கியே விடுவேன். இந்த மாதிரி ஒவ்வொரு செயலையும் நான் செய்வேன். அதுவே எனது வெற்றியின் இரகசியம்.ஊக்கத்தை பற்றி பேசும் போது இந்த சில வரிகள் முக்கியமாக படுகின்றன.
When every thing seems to be lost ; Future Remains
இந்த வைர வரிகள் அனைவருக்கும் ஊக்கத்தை தரும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. இப்போது ஆராயுங்கள் உங்கள் தோல்வியின் காரணம் என்னவென்று :1 .வலிமை இன்மை , 2. ஊக்க குறைவு. அதனை சரி செய்யுங்கள். எல்லா பிரச்சினயும் தீர்ந்து விடும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment