வீரப்பன் கொல்ல பட்ட சமயத்தில் இருந்தே மனித உரிமைகள் கழங்கள் பல பிரச்சினைகளை கிளறி கொண்டு இருக்கின்றன. இவர்களுக்கு மீடியாவும் மிகுந்த உதவி செய்து கொண்டு வருகிறது.உண்மையிலே அதிரடி படையால் பாதிக்க பட்ட தமிழர்கள் பலர் மைசூரில் வாடி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை. பல காரணங்களுக்காக சாதாரண மனிதர்கள் அரசாங்கத்தால் பாதிக்க பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் அநாதையாக நிற்கிறார்கள்.
ஆனால் இன்று வீரப்பனுக்காக பல இயக்கங்கள் குரல் கொடுக்கின்றன. இவர்கள் சொல்லுகிற வாதம் வீரப்பன் குற்றவாளி ஆனதற்கு காரணம் சமுகம். எனவே வீரப்பனை கொன்றது அநீதி. என்கவுண்டர்கள் செய்வது தவறு. நீதி மன்றங்கள் மட்டுமே தண்டிக்கும் அதிகாரம் படைத்தவை.
எந்த வகையிலும் இரக்கம் காட்ட கூடாத கிரிமினல்கள், தீவிர வாதிகள் இவர்களுக்காகவே மனித உரிமை குரல்கள் எழுவது வேடிக்கை கலந்த வேதனையாக உள்ளது. ரோட்டில் போகிற நாய்க்காக குரல் கொடுக்க இயக்கங்கள் உள்ளன. அந்த நாய்களால் பாதிக்க படுபவர்களை பற்றி கவலை பட ஆளில்லை. அதிகாரம் இருப்பவர்கள் (மேனகா காந்தி)தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கொண்டு சட்ட திட்டம் தீட்டுவதினால் வருகின்ற கொடுமை இது. இது உண்மையில் ஜனநாயக நாடு தானா? நாய்கள் மக்களை காட்டிலும் முக்கியமாக காப்பற்ற பட வேண்டியவையா?