Saturday, January 21, 2006

புதிய வடிவத்தில் ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு.

கொஞ்ச நேரம் போராடிய பின்பு புதிய வடிவத்தை கொண்டு புதிய பதிவுகளை சரியாக பதிவு செய்ய முடிந்தது. வருடத்திற்கு இரண்டு முறையாவது வடிவத்தை மாற்றி விட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.

மாற்றங்கள் மனதிற்கு உற்சாகத்தை தருகின்றன. அதனால் பிரச்சனைகள் வந்தாலும் ஒட்டுமொத்தமாக இலாபமே அடைகிறோம். சிறு குழந்தை பருவத்திலிருந்தே மாற்றங்களை நாம் விரும்புவதில்லை. ஒவ்வொரு முறையும் பள்ளி மாறும் போதும், புதிய ஊர் செல்லும் போதும் சிரமங்கள் இருந்த போதிலும், இறுதியில் அவை வலிமை ஊட்டுகின்றன.

எந்த ஒரு மாற்றத்தையும் தவிர்ப்பதை விட , தானாக முன்வந்து ஏற்று கொள்வது பெரும்பாலும் பயன் தருவதாகவே உள்ளது. மாற்றங்கள் பற்றிய மனிதன் பயங்கள் வெறும் பிரமைகள். ஏனெனில் உங்கள் வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது நீங்கள் பயந்த நிறைய விஷயங்கள் நடந்தே இருக்காது.

மாற்றங்களை நீங்கள் உருவாக்க ஆரம்பித்தால், அது உங்களை மற்றவர்களை விட பல அடி தூரம் முன்னே நகர்த்தும். எனவே ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுவில் நீங்கள் பல மாறுதல்களை காண்பீர்கள்.

2 comments:

Anonymous said...

good

dvetrivel said...

வாழ்த்துக்கள். நானும் உங்களை போலத் தான். என்ன ஒரே வித்யாசம், பதிவுகளை விட டெம்ப்ளேட் மாற்றங்கள் அதிகமாய் இருக்கும்....