Tuesday, January 17, 2006

தமிழ்மணத்தின் வெற்றி.

இந்த பதிவு தமிழ்மணத்தையும் , காசி அவர்களையும் முழுமையாக பாராட்ட எழுதப்பட்டுள்ளது. தமிழ் மணத்தின் வெற்றிக்கான காரணங்கள் ஆராய்வது மிக எளிது.
1. தொடரபடுகிற எந்த ஒரு முயற்சியும் பயனை கொடுத்தே தீரும்.

2. மேலும் மேலும் சிறப்பான அம்சங்கள் ஒரு முயற்சியோடு இணையும் போது அது வளர்ச்சியை நோக்கி செல்கிறது.

பத்திரிக்கைகள், திரைபடம்,தொலைகாட்சி என்று அனைவராலும் அழிக்க படும் தமிழ் உண்மையில் தமிழ் ப்லொகுகளில் நல்ல ஆரோக்கியத்தோடுதான் இருக்கிறது. சின்ன சின்னதாக ஆங்காங்கே காணபடும் சிறு குறைபாடுகளை மறந்து விடலாம்.
காசி தன்னுடைய வாழ்நாள் சாதனியாக தமிழ்மணத்தை கருதலாம். புது வடிவம் பெற்று மேலும் சிறப்பாக இருக்கும் தமிழ்மணத்திற்கும் , காசியின் தமிழ் மனதிற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.


தமிழ்மணத்தின் வெற்றி - காசியின் தமிழ் மனதின் வெற்றி...


1 comment:

ஞானவெட்டியான் said...

அன்பு பாலசந்தர் கணேசன்,

மிக அருமையாய்ச் சொன்னீர்கள்.
கணினி அறைக்குள் போய் அமர்ந்தவுடனே,"ஏங்க! முதல் மனைவி வீட்டுக்குப் போயாச்சா? உங்களுக்கு உலகமே மறந்துடுமே! இங்கே என்ன நடக்குதுன்னாவது பாருங்களேன்!" என்று குரல் வரும்.

கால நேரம் பார்க்காமல், இத்தகைய திரட்டியை புதுப்பொலிவுடன் உருவாக்கி, அதைக் கொண்டுசெலுத்தும் நண்பர் காசிக்கும், அவர்தம் குழுவினருக்கும் என் இதயபூர்வமான நன்றிகள் உரித்தாகுக.

பாராட்டுக்களுடன்தான்.