பொதுவாகவே மண்டை கனம் புடிச்சவங்களால, அடி வாங்கி கிட்டு அழுகிற கோஷ்டிகள் நிறைய. ஆனால் இந்த மாதிரி கோஷ்டிகளை மிக சாதரணமாக மட்டம் தட்டி விடலாம் நீங்கள் மட்டும் தயாராக இருந்தால்.
1. முதலில் நீங்கள் புண்படுவதை நிறுத்தங்கள். என்னடா இது நம்மள கேவலாம பேசறானே என்று புலம்புவதை நிறுத்துங்கள். இது தான் உங்களுடைய ரியாக்ஷன் என்றால், மண்டை கனம் புடிச்ச்வுங்களுக்கு நீங்க பலியாவதை தடுத்து நிறுத்த முடியாது. எதுக்கும் மிரள கூடாது.
2. என்ன நடந்தாலும் தலைய குனியாதிங்க.... எப்பவும் நான் தான் உயர்ந்தவன். நான் தான் சிறப்பானவன். நான் தான் முக்கியமானவன் என்ற எண்ணங்களின் அடிப்படையில் தான் நீங்கள் செயல் பட வேண்டும்.
3. எல்லாவற்றிக்கும் மேலாக திருப்பி அடிபதை போல ஒரு வலிமையான ஆயுதம் எதுவும் கிடையாது. மண்டை கனம் புடிச்சவுங்களை நீங்க போடுற பொடுல அவனுக உங்களை பார்த்து புலம்பணும் - என்னா திமிர் பிடிச்சவனா இருக்கான்னு.. இந்த மாதிரி நீங்கள் அந்த கோஷ்டியை உணர வைக்கலாம். இதை குறிக்கோளால வைத்து கொள்ளுங்கள் - நீங்கள் வெற்றி அடைவீர்கள்.
4. இதை மண்டை கனம் பிடிச்சவுங்க கிட்ட மட்டும் பயன்படுத்துங்க .. மத்தவுங்க கிட்ட வேணாம்.
5 comments:
:-) நல்லா இருக்கு. :-)
//எப்பவும் நான் தான் உயர்ந்தவன். நான் தான் சிறப்பானவன். நான் தான் முக்கியமானவன் என்ற எண்ணங்களின் அடிப்படையில் தான் நீங்கள் செயல் பட வேண்டும்.//
அதாவது டோண்டு மாதிரி, அப்டித்தானே?
//இதை மண்டை கனம் பிடிச்சவுங்க கிட்ட மட்டும் பயன்படுத்துங்க .. மத்தவுங்க கிட்ட வேணாம்.//
இது நச்!
வழக்கம் போல் எங்களை குழப்ப என்னமோ சொல்லியிருக்கீங்க.
ஆனா, நீங்க சொன்னதை எல்லாம் செய்தால் மண்டை கனம் பிடித்தவங்களுக்கும் நமக்கு என்ன வித்தியாசம் இருக்குது.
மண்டை கனம் பிடித்தவர்களை துஷ்டன் மாதிரி ஒதுக்கி வைப்பதே மேல்.
அவர் சொல்வதை காதில் போடாமல் இருப்பதே மேல்.
பரஞ்சோதி அவர்களே,
உங்களுடைய கருத்துக்கு நன்றி.
மண்டை கனம் பிடித்தவர்களை துஷ்டன் மாதிரி ஒதுக்கி வைப்பதே மேல்.
நீங்க சொன்ன மாதிரி செஞ்சுகிட்டு இருந்த மாற்றம் என்பது வராது.
ஆனா, நீங்க சொன்னதை எல்லாம் செய்தால் மண்டை கனம் பிடித்தவங்களுக்கும் நமக்கு என்ன வித்தியாசம் இருக்குது
இதை மண்டை கனம் பிடிச்சவுங்க கிட்ட மட்டும் பயன்படுத்துங்க .. மத்தவுங்க கிட்ட வேணாம்.
இது தான் வித்தியாசம். நமக்கு மண்டை கனம் கிடையாது. அனைவரையும் மதிக்க வேண்டும் என்பதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்கிற கட்சி நான்
மணிமேகலைப் பிரசுரக் காரர்களோடு உங்களுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?
Word Verification ஐ எடுத்துவிடலாமே?
Post a Comment