Sunday, January 15, 2006

அடுத்த ரஜினி யார்?.


கண்டிப்பாக விஜய் அதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்னும் சொல்ல போனால், விஜய் ரஜினியை விட ஒரு படி மேலே(கீழே) செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. விஜயின் படங்கள் வரவர ரஜினியின் படங்களை விட படு மட்டமாக இருக்கின்றன. ஆனாலும் படு ஒட்டம் ஒடுகின்றன. ஏன் என்றே புரியவில்லை.

சமீபமாக, மன்மோகன் சிங் தபால்தலை வெளியிட , விஜய அதை பெற்று கொண்டார். இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க படும் அளவுக்கு விஜய் என்ன செய்திறுக்கிறார். தமிழில் எவ்வளவோ எழுத்தாளர்கள், கவிஞர்கள், தேசிய விருது பெற்றவர்கள் , சாதனையாளர்கள், அறிவாளிகள் இருக்கிறார்கள். சினிமாதுறையிலும், பலர் உலக சாதனை புரிந்தவர்கள் இருக்கிறார்கள்.இவர்களுக்கெல்லாம் கிடைக்காத பெருமை இவருக்கு ஏன்?
தயாநிதி மாறனும், விஜயின் தந்தையும் நெருங்கி வருவதை பார்க்கும் போது, இன்னும் 10 வருஷத்தில் விஜய், ஒரு மைக் பிடித்து கொண்டு, யாருக்கு ஒட்டு போடவேண்டும் என்று பேட்டியளிப்பார். அதை கேட்டு கொண்டு இரசிகர்களும் வேலைசெய்வார்கள்.
எல்லாம் தமிழனின் தலையெழுத்து... ரஜினி மாதிரி ஒரு குப்பை போவதற்குள் அடுத்த குப்பை வருவது...

9 comments:

இளந்திரையன் said...

குபைகள் வரும் .... போகும் .... கூட்டி அள்ளுறதா விட்டிட்டு .... சும்மா குய்யோ முறையோ என்று சத்தம் போட்டு யாருக்கு லாபம் ..... தலையெழுத்துன்னு சொன்னீங்கென்னா.... சும்மா போங்க சார் ... அரசியலுக்கெல்லாம் நா வரேல்லை...

Anonymous said...

நீங்க சொன்ன பழைய குப்பையை குப்பை ஆக்கிவிட்டார்கள். ஜானி, நெற்றிக்கண், 6ல் இருந்து 60 வரை எல்லாம் பண்ணியவரை தான், இப்போது தங்க முட்டை போடும் வாத்து மாதிரி உட்காரவச்சி குப்பையாக்கிக் கொண்டிருக்குறார்கள். அதற்கு அவர் என்ன செய்வார். அந்த குப்பைக்கு குடை பிடிக்க இங்கே கோடி இளைஞர்கள் இருக்கிறார்களாமே. :-)). நல்ல வேளை அரசியலில் ஆப்பு வாங்கி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.அந்த வகையில் சந்தோசப் பட்டுக்கொள்ளுங்கள். அப்புறம் படம் பார்க்க டிக்கெட்டுக்கு அடித்துக்கொள்ளும் அறிவாளிகள் எல்லாம் நம்ம ஊரு எம்.எல்.ஏ வாக போய்விடுவார்கள் :-))

Anonymous said...

Well said on Vijay.

BTW, I worked in IMR between 96 and 99. Would like to know how CGI is doing now?

Regards,
Vetri

Santhosh said...

கணேஷன் நல்லா எழுதி இருக்கிங்க. ஆனா இந்த நிலைமை ரொம்ப நாளைக்கு இருக்காது படிச்சவங்க எண்ணிக்கை கூட கூட இது குறையும் ஆனா website வைத்து ரசிகர் மன்றம் நடத்தரவங்களை என்னானனு செல்றது.

தருமி said...

அட போங்க சார்...
106. (8.M.G.R.–>ரஜினி–>விஜய்–>..???) - பின் குறிப்பு அப்டின்னு நான் கூட எழுதினேன். நாமெல்லாம் கரடியா கத்துனாலும்,ம்..ம்ம்..ம் ஒரு பிரயோஜனமும் இருக்கிறது மாதிரியா இருக்கு?

இலவசக்கொத்தனார் said...

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாய் விசையும் மாறனும் கலந்துரையாடியதை பார்த்தீர்கள்தானே. ஒரு உறவுப்பாலம் அமைக்கப்படுகிறது. காரண காரியங்கள் யாமறியோம்.

Anonymous said...

திரிந்திவிடலாம்னு பார்கிறொம். இனிமெல் உன்கலை பொன்றவர்கலுக்கு ரசிகர் மன்றம் வைக்கலாம் என்று இருக்கிஉரோம். புட்தி சொன்னதக்கு னன்றி.

kirukan said...

Now they have started making money by writing books about these great genius es..

What a service for the future generation..

Viraivil ethir Paarkalam..... a book on Vijay..

நாமக்கல் சிபி said...

கண்ணா கணக்கை க்ரெக்டா போட்டா 1+1=2 ன்னு சரியா வரும். தப்பா போட்டா 1=2 ன்னு தப்பாதான் வரும்.

பார்க்கலாமா?

a=b என்க.

a2-b2 = (a+b)(a-b)
a=b எனவே

a2-ab = (a+b)(a-b)
a(a-b)= (a+b)(a-b)

(a+b)(a-b)
a = __________
(a-b)

a = (a+b)

a=1 b=1 எனப் பிரதியிடுக.

1 = (1+1)
1 = 2

புரிஞ்சிதா மாப்பூ....