Thursday, January 26, 2006

பாசக்கிளிகள்.

இன்னமும் பராசக்தி வெற்றி மயக்கத்தில் இருக்கின்ற கலைஞரின் வசனத்தில் இன்னும் ஒர் திரைப்படம். இதனை புகழ்ந்து விமர்சனம் வந்த்துள்ளது. கலைஞரின் குடும்பத்தாரால் நடத்த படுகிற தமிழ்முரசு பத்திரிக்கையில். விமர்சனம் என்பது அடுத்தவர்கள் பார்வை. தானே தன்னுடைய படைப்பை புகழ்வது கலைஞரின் ,அதிலும் சந்தோஷபட்டு கொள்வது கலைஞர் மற்றும் ஜெயலலிதா இரண்டு பேரிடமும் உள்ள மட்டமான குணம் . இப்போது தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளிலும் தொடர்கிறது.
தோழர் நல்லகண்ணு அவர்களே என்று கட்சியின் மூத்த தலைவரையும் சாதாரண உறுப்பினர் பெயர் சொல்லி கூப்பிடுவது கம்யூனிஸ்ட் கட்சியில் மற்றுமே சாத்தியம். தனி மனிதனை முன்னிறுத்துகிற எந்த ஒரு இயக்கமும் நல்ல பலன்களை தராது. ஒரு சமுதாயதத்திற்கு நன்மை விளைய வேண்டுமானால் ஒரு நபர் புகழ் பாடுகிற இயக்கம் தீர்வு அல்ல. இன்றைய நிலைமையில் அ.தி.மு.க, தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க போன்ற இயக்கங்கள் உண்மையில் தத்தம் தலைவருக்கு இரசிகர் மன்றங்கள். இந்த இயக்கங்கள் விஜய், அஜீத் ரசிகர் மன்றங்கள் போலவே செயல் படுகின்றன.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை மக்கள் புரிந்து கொள்ளாத வரையில் இந்த கூத்துக்கள் தொடரும்.

4 comments:

ஜோ/Joe said...

எல்லாம் சரி தான்..ஆனா "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை மக்கள் புரிந்து கொள்ளாத வரையில் இந்த கூத்துக்கள் தொடரும்." -க்கும் முன்னால சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்?

Karthik Jayanth said...

Bala sir ,

Dont take it as offending. It seems u seem to strictly following u r description
//ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு (1+1 =2) //
All u r blog posts never cross 2 paragraphs. when ppl are working hard to write pages in tamil(i find it very difficult to type even 2 lines in tamil)
By telling this i am not defining/ arguing that blogs should be this or that.I just felt like telling it.
Its upto u to allow or delete this comment.

பாலசந்தர் கணேசன். said...

கார்த்திக் ஜெயந்த் அவர்களே.

ஆபாசம் இல்லாத எல்லா பின்னூட்டங்களும் இங்கே இடம் பெறுகிறது. அவை விமர்சனம் செய்திருப்பினும் கூட. ஜோ ஏற்கனவே கூறியிருந்த கருத்து தான் எனினும் உங்கள் விமர்சனத்திற்கு நன்றி. பதிவுகள் ஒரு கருத்தை ஒட்டியே அமைகின்றது. அதன் அளவுகள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் இங்கே வாசிக்க வருபவர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

Karthik Jayanth said...

//பதிவுகள் ஒரு கருத்தை ஒட்டியே அமைகின்றது//
Agreed.Some times depending on topic u might want to write elaborate / extend to few more lines so that the message is carried out to all in simple.By this i am not telling ppl will not read u r blog if its like news.

1 suggestion.
u r current template setting doesn't seem to be 100 % fit with background color and font selection.