Thursday, January 26, 2006

சுஜாதாவின் கதைகள்.

ஒரு சின்ன ட்விஸ்ட் அதனை பெரும்பாலும் ஊகிக்க முடிகிறது.ஆனாலும் சுவாரசியமான எழுத்து நடையினாலும் வர்ணனையினாலும் வாசகர்களை இழுக்கிறார் சுஜாதா. சமீபத்தில் அவருடைய பல்வேறு கதை தொகுப்புகள் படித்தேன். அதனில் ஒன்று வானத்தில் ஒரு தாரகை. 9 கதைகள் , 88 பக்கங்கள்.
சுஜாதாவின் கதைகள் இவ்வாறே பெரும்பாலும் அமைகின்றன. காரக்டர்கள் அறிமுகம் என்விரான்மென்டோடு சேர்த்து. கூடவே ஒரு சின்ன சமூக அவலம். ஒரு சின்ன திருப்புமுனை . ஊகிக்க முடிந்தாலும் சுவாரசியமாக. கூடவே கதை சொல்லும் நீதி மாதிரி வெளிப்படையாக தெரியாத ஒரு நீதி கருத்து. மத்திய தர வர்க்க பலவினங்கள், தனி மனித சபலங்கள் போன்றவை இவருடைய கதைகள் சித்தரித்தது போல யாரும் சித்தரிக்கவில்லை.
வெற்றி பட கதாநாயகர்கள் ரஜினி விஜய் அந்த் வட்டத்தில் இருந்து மீள முடியாமல் தவிப்பது போல சுஜாதாவும் தன்னுடைய வெற்றி நடைக்கு பலியாகிவிட்டார் எனவே தோன்றுகிறது அவர் மீண்டும் மீண்டும் அதே பேட்டர்னில் கதைகள் எழுதுவதை பார்க்கும் போது.
அவருடைய சிறந்த தொகுப்பாக நான் கருதுவது ஸ்ரீரங்கத்து தேவதைகள். இதின் இரண்டாவது பாகம் ஆனந்த விகடனில் வந்தது. முதலில் இருந்த் வீரியத்தில் பாதி கூட இதில் இல்லை. சுஜாதாவிற்கு வயதாகி விட்டதா என்று நாம் கேட்டால், வயதானது உங்களுக்கு என்று பதில் கூறுகிறார் சுஜாதா...

No comments: