Sunday, January 29, 2006

பின்னூட்டங்களை கண்காணிப்பது.

எழுதுவதற்கு இணையாக அதற்கும் தனியாக நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால் பின்னூட்டங்கள் பதிவில் இடம் பெற காலதாமதம் ஆகி விடும். எனவே உடனடியாக பின்னூட்டங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
முன்பு ஒவ்வோரு முறை பதிவுக்கு செல்லும் பொது ஒரு சின்ன சின்ன சஸ்பென்ஸ் காத்திருக்கும். ஆனால் இப்போது மெயிலில் பின்னூட்டம் வருவது அந்த மாதிரி உணர்வுகளை தூண்டுவதில்லை. அது மட்டும் இல்லாமல் பின்னூட்டம் இடுபவரும் காத்திருக்க வேண்டியுள்ளது.
அதற்காக கட்டுபாடுகளை நான் குறை கூற விரும்பவில்லை. ஏனெனில் அவை தவிர்க்க முடியாமல் போய் விட்டன. எல்லாம் இந்த் போலிகளினால் வந்த விளைவு. இவர்கள் செய்கின்ற கூத்துக்கள் சகிக்க முடியாமல் போனதால் இந்த மாதிரி கட்டுப்பாடுகள். அதனால் அனைவரும் இன்னும் சிறிது நேரம் செலவிட வேண்டியுள்ளது. காலம் பொன் போன்றது. இதனை போலிகள் வீணடிப்பது மட்டுமில்லாமல் எங்கள் நேரத்தையும் சேர்த்தே பாழடிக்கிறார்கள்.

5 comments:

குமரன் (Kumaran) said...

பாலசந்தர். ஒரே ஒரு சந்தேகம். நீங்கள் மற்றவர்கள் பதிவுகளையும் அங்கு வரும் பின்னூட்டங்களையும் படிக்கவே மாட்டீர்களோ? இந்த மாதிரி எல்லாருக்கும் தெரிந்த விஷயத்தைப் பற்றி பின்னூட்டம் அளவிற்குத் தனிப் பதிவாகப் போடுகிறீர்களே...அதான் கேட்டேன்.

அப்புறம், உங்களுக்கு வேண்டுமானால் பதிவு இடும் நேரத்துக்கு இணையாக பின்னூட்ட மட்டுறுத்தலுக்கும் நேரம் செலவாகலாம். எனக்கெல்லாம் அதற்கு மேலாகவே செலவாகிறது.

Ram.K said...

ஒரு பதிவிற்கும் அடுத்த பதிவிற்கும் உள்ள இடைப்பட்ட நேரத்தில்தான் பின்னூட்டம் இடப்படுவது கவனத்திற்கு வராமல் போகிறது. எனவே, பதிவிட வரும்போதே பின்னூட்டங்களுக்கு நடவடிக்கை எடுக்கலாம். அப்போதே பின்னூட்டம் இடுபவரின் வலைத்தளத்தையும் பார்க்கலாம். தனியாக நேரம் செலவிடவேண்டாம் என்பது என் கருத்து.

பாலசந்தர் கணேசன். said...

இந்த வார நட்சத்திரம் குமரன் அவர்களே...
பாலசந்தர். ஒரே ஒரு சந்தேகம். நீங்கள் மற்றவர்கள் பதிவுகளையும் அங்கு வரும் பின்னூட்டங்களையும் படிக்கவே மாட்டீர்களோ?
-பலருடைய எல்லா பதிவுகளையும் நான் படிப்பேன். பல பின்னோட்டங்களயும் நான் வசிப்பது உண்டு.
உங்கள் பதிவுகள் நான் படிப்பதில்லை
அப்புறம், உங்களுக்கு வேண்டுமானால் பதிவு இடும் நேரத்துக்கு இணையாக பின்னூட்ட மட்டுறுத்தலுக்கும் நேரம் செலவாகலாம். எனக்கெல்லாம் அதற்கு மேலாகவே செலவாகிறது

அது பதிவினை அடிப்படையாக கொண்டது மட்டுமல்ல. பதிவாளரின் திறமையை பொருத்தும் மாறலாம்.

குமரன் (Kumaran) said...

//உங்கள் பதிவுகள் நான் படிப்பதில்லை
//

ஏன். ரொம்ப நேரம் செலவழிக்க வேண்டி இருக்கிறதா? :-)

நான் உங்கள் பதிவுகளை எல்லாம் தவறாமல் படிக்கிறேன். படிப்பதற்கும் பின்னூட்டம் இடுவதற்கும் ரொம்ப நேரம் ஆவதில்லை.

பாலசந்தர் கணேசன். said...

குமரன் அவர்களே,
தவறாக கருத வேண்டாம். என்னுடைய செலக்ஷன்கள் வேறு. நான் விரும்புவது முகமூடி, குரங்கு(ஸ்ரிகாந்த்),மாயவரத்தான் போன்றவர்களுடைய பதிவுகள். ரசனை மாறுபாட்டை தவிர வேறு காரணம் எதுவுமில்லை.

என் பதிவுகள் படிக்க சிறிது நேரமே ஆகும். பின்னோட்டம் இடவும் அவ்வளவு நேரமே ஆகும்.