Sunday, January 08, 2006

மூன்றாவது அணியும் கூத்தாடி பயல்களும்.

தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர் மரணத்த்லிருந்து விவாதிக்கப் பட்டு வருவது மூன்றாவது அணி, மற்றும் கூத்தாடி பயல்கள் வெற்றி பெற வாய்ப்பு உண்டா என்பதும்.
1. 1996-யில் ரஜினியின் பங்கு மிக பரபரப்பாக பேச பட்டது. ஆனால் ஜெயலலிதா எதிர்ப்பு அலையை உருவாக்கியது ரஜினியோ, கருணாநிதியோ மூப்பனாரோ இல்லை. அதை உருவாக்கியது ஜெயலலிதா மற்றும் சசிகலா.
2. ரஜினியே ஜெயலலிதாவை எதிர்த்து தனது இமேஜை உயர்த்தி கொண்டார். ஆனாலும் கூட 1996 இல் மூப்பனாரும் ரஜினியும் சேர்ந்து நின்றிருந்தால் கூட அது தனியாக ஆட்சியை பிடித்திருக்காது. மாறாக அது ஜெயலலிதாவுக்கு சாதகமாகவே அமைந்திருக்கும்.மேலும் அன்று நரசிம்மராவுக்கு பதில் ராஜீவோ,சோனியாவோ இருந்திருந்தால் மூப்பனார் தனி கட்சி ஆரம்ப்பித்து இருப்பாரா என்பது சந்தேகமே.
3. மாறி மாறி கருணாநிதியோடும் ஜெயலலிதாவோடும் கூட்டணி வைத்து பிழைப்பு நடத்தும் மற்ற கட்சிகள் உண்மையில் இரண்டையும் விட மோசமனவை. இவர்களுக்கு ஜெயலலிதாவும் கருணாநிதியும் எவ்வளவோ மேல்.
4. எம்.ஜி.ரை தவிர தனிப்பட்ட செல்வாக்கு (அரசியல் ரீதியான) யாருக்கும் இல்லை.
5. ஒரு தனி மனிதனை தெயவத்திற்கு இணையாக ஒப்பிடுகிற இரசிகர்கள் கூட்டம், அரசியல் கட்சியாக மாறினால் எப்படி இருக்கும். விஜயகாந்த் ஆரம்பித்திருக்கும் கட்சி( இதை கட்சி என்று கூற முடியுமா?)யின் சட்ட திட்டம் என்ன தெரியுமா?. அவர் வைத்ததே சட்டம்.இதனால் தான் கட்சிக்கு அங்கிகாரம் மறுத்திறுக்கிறது தேர்தல் கமிஷன். இப்படி தன் கட்சிக்காக உழைக்கிறவர்களுக்கு கூட கருத்து சொல்லும் உரிமை மறுக்கிற தலைவன் நாட்டு மக்களுக்காக குரல் கொடுப்பானா?. எதற்காக இப்படி ஒரு சிந்தனை ஒரு தலைவனுக்கு. தன்னுடைய சர்வாதிகாரம் காத்து கொள்ள விதி அமைக்கும் தலைவன் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் மாற்றா?
6. விஜயகாந்தின் நிர்வாக திறமை மற்றும் தைரியம் பற்றி பல பத்திரிக்கைகள் புகழுகின்றன.(புளுகின்றன). நடிகர் சஙகத்தினை திறமையாக நிர்வாகித்தார். ரஜினியை போல் குழப்பாமல் தைரியமாக கட்சி ஆரம்ப்பித்து இருக்கிறார் என்று கூறும் பத்திரிக்கைகள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். சு.சாமி, பாக்கியராஜ், ராஜேந்தர் போன்றவர்களும் இதை செய்திருக்கிறார்கள். எத்தனையோ சுயேச்சைகள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். உண்மையில் ஒரு அரசியல் தலைவரை பாரட்ட வேண்டுமான்றால் ராமதாசை பாரட்ட வேண்டும். ஜெயலலிதா அராஜக ஆட்சி நடத்திய போது அதை எதிர்த்து குரல் கொடுத்தவர் அவர். உண்மையில் சமுக அக்கறை இருந்தால் விஜயகாந்த் 1996இல் ஜெயலலிதாவிற்கு எதிராக குரல் கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த அளவுக்கு மிக மட்டமான, கொடுங்கோல் ஆட்சி அது. கருணாநிதியை விட மிக மோசமான தலைவராக இருக்க முடியும் என்று ஜெயலலிதா நிருபீத்த காலம் அது. அப்போது ஏன் விஜய காந்த் ஒன்றும் பேசவில்லை. இவர் எதிர்க்கிற ஊழல், லஞ்சம்,வன்முறை, சமுக அநீதி என்று எல்லாமே நிறைந்த ஆட்சி அது.
இறுதி கருத்து.மூன்றாவது அணிகள் தி.மு.க, அ.தி,மு.க இரண்டையும் விட மோசமானவை. எங்கே நிறைய சீட் கிடைக்கும் என்று நினைக்கிற இவர்கள் மக்கள் நலனில் ஒரு போதும் அவர்களை விட கூடுதல் அக்கறை காட்ட போவதில்லை.
கூத்தாடி பயல்கள் தன்னுடைய படங்கள் நன்கு ஒடும் போது அல்லது டாப் 5 ஹீரோவாக இருக்கும் போது மக்களை பற்றி கவலை படுவதில்லை. தான் சினிமா ஃபீல்டிலிருந்து ரிடையர் ஆகும் போது தான் மக்கள் பற்றிய அக்க்றை அவர்களுக்கு வருகிறது.
இவர்கள் இருவரையும் நிராகரிப்போம். மாற்றி மாற்றி இருவருக்கும் வாய்ப்பு கொடுத்து என்னதை கண்டீர்கள் என்று கேட்கும் விஜயகாந்தோ , முன்றாவது அணியோ இவர்களை காட்டிலும் மோசம் என்பது என்னுடைய கருத்து.

3 comments:

Anonymous said...

Good. But don't blame all 3rd front parties. they also have a vote bank and nothing wrong to bargain.

We have good examples. after 2001 election JJ was not ready to see ramdoss and communist party leaders. and she hesitate/ isult them.(Karunanidhi is OK in some extand in this regard . still he is insulting Vaiko).

So all political parties should satisfy their people.

One more important fact election allaince is type of bussiness. so negotiation/bargianing are mandatory. those who having good brand name/value their power is more.

Small political parites are not 'sanniyasis'. so nothing wrong.

What you told about 'actor's is right. there is no impact at all. only all are meida 'hype'.

How MGR won? he was a part of DMK in long time and he was in various posts. when he started ADMK no other oppostion parites, Kamarajar passed, always had allaince with Congress(congress was strong that time). MGR lost almost all local body(panchayat & muncipality) in 1986. So don't tell he was never defeted.

Sivaji himself never suceeded in politics. he was defeted.

So no actor can make any impacat in TN politics. only media satisfy themselves and thier fans.

Anonymous said...

Competition should be there in every field. If we have only two parties, they know that even if they loose the election this time, it will be their turn next time. If we have multiple strong parties, no party can be complacent.

I am not saying that some "Kanth" will be a good alternate. But we should get used to vote for some candidate that does not belong to one of the major parties.

Muthu said...

good post..although i donot support all the views expressed