நாட்டில் எல்லாரும் தான் ஜாதி மாநாடு நடத்துகிறார்கள். பிராமணர்கள் நடத்துவதை மற்றும் ஏன் தனியாக குறை கூறவேண்டும். உண்மையில் அனைவரும் செய்கின்ற தப்பை பிராமணர்களும் செய்திருக்கிறார்கள். மாநாடு போடுவது, ஜாதி பெருமை பேசுவது , வீண் வீரம் பேசுவது என்று எல்லா விதமான எல்லா ஜாதி மாநாட்டிலும் நடக்கின்ற அருவருக்க தக்க அசிங்கங்கள் இங்கும் நடந்தன.
யாரும் எதிர்பாராதது சுஜாதா மற்றும் பாலசந்தர் பேசியது. இன பெருமைகளை இவர்கள் பேசியது இவர்களின் எக்கச் சக்கமான இரசிகர்களின் மனதில் உண்மையான அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கும். சுஜாதா வெளிப்படையாக காட்டி கொள்ள விட்டாலும், தனது இனபாசம் அவருடைய எழுத்துக்களில் வெளிப் பற்றிறுகிறது. ஆனால் பாலசந்தரின் பேச்சு எனக்கு அதிர்ச்சியை உண்டு பண்ணியது. பாலசந்தரின் திரைப்பட வீச்சுகளினால் , எனக்கு அந்த பெயரை வைத்தார்கள். பாலசந்தர் மாநாட்டில் இதுவரை கலந்து கொள்ளாது பற்றி மிக்க வருத்தம் தெரிவித்தார்.
ஆனால் ஜாதியின் வேர்கள் மிக ஆழமானவை. சமுகமும் அரசியலும் அதற்கு காலம் காலமாக நீர் ஊற்றி வருகின்றன. இப்போது அதற்கு அசைக்க முடியாத பலம் வந்து விட்டது. கூடி வாழும் சமுகத்தில் மற்றவர்களால் ஒதுக்கி வைக்க படுவோமா என்ற பயத்திலேயே ஒவ்வொருவரும் ஜாதியின் பிடியிலிருந்து மீள முடியுமால் தவிக்கிறார்கள்.
ஜாதி படிச்சு வாங்கின பட்டமா என்று வேதம் புதிது படத்தில் ஒரு கேள்வி வரும்?. அதை எழுதியவற்கு தெரியவில்லை- ஜாதி படிக்காமேலேயே , பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் சமுகத்தால் வழங்கபடும் பட்டம் என்று.
No comments:
Post a Comment