இந்த மாதிரியான ஆரம்பத்திற்கு அப்புறமும் பாகிஸ்தான் 245 அடிக்குறதுக்கு காரணம், உண்மையான ஆல்ரவுண்டர்கள் அங்கே நிறைய. இத்தனைக்கும் இன்சமாம் ஆடவில்லை. இந்தியா லக்ஷ்மணை கொண்டு ஆட்டத்தை துவக்கியது ஒரு விதமான ஏமாற்றமே. வழக்கம் போல சேவாக் துவங்கியிருக்கலாம். அல்லது புதுமை புகுத்த விரும்பினால் பதான் அல்லது தோனியை வைத்து அதிரடி ஆட்டம் ஆரம்பித்திருக்கலாம். ஆனால் சேவாக் பின்னால் தள்ள பட்டது தன்னம்பிக்கை இல்லாத முடிவே.
எனினும் கங்குலிக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பு. ஒரு நாள் போட்டிகளில் அவர் ஆட போவதில்லை என்ற அறிவிப்பு வந்த சூழ்நிலையில் அவருக்கு 5 நாள் போட்டிகளில் தன்னுடைய இடத்தை இருக்கமாக பற்றி கொள்ள ஒரு வாய்ப்பு. நாளை நன்கு ஆடினால் இன்னும் ஒரு தொடருக்கு கவலையில்லாமல் இருக்கலாம்.
கங்குலி உண்மையில் டெஸ்ட் போட்டிகளை விட ஒரு நாள் போட்டிகளில் தான் நன்கு ஆடியுள்ளார். எனவே அவரை கண்டிப்பாக ஒரு நாள் போட்டிகளுக்கு எடுத்திருக்க வேண்டும்.
நாளைய ஆட்டம் கங்குலிக்கு ஒரு பயங்கர திருப்பு முனை அல்லது ஒரு முற்றுப்புள்ளி.
No comments:
Post a Comment