Saturday, January 28, 2006

மனதின் ஆற்றல்கள்.

ஒரு மனிதன் முதலில் கற்க வேண்டியது தனது மனதை ஒருமுகபடுத்துவது எப்படி என்பதை- இவ்வாறு கூறுபவர் சுவாமி விவேகானந்தர். மனது உண்மையில் ஒருமுக பட்டால் சாதரணமாக பல நாட்கள் எடுக்கும் வேலையை சில நாட்களில் செய்ய முடியும். தரம் உயரும். தன்னம்பிக்கை உயரும். இவ்வாறு பல பயன்கள் இருக்கும் போது மனதின் ஆற்றல்கள் பற்றி ஏன் பள்ளி கூடங்களில் எந்த பயிற்சியும் அளிக்க படுவது இல்லை. அதே போன்று பல தனியார் நிறுவனங்களிலும் மனதை ஒருமுகபடுத்துவது பற்றி விளக்க கூட்டங்கள் நடைபெறுவது குறைவாகவே உள்ளது.
மனதை ஒருமுகபடுத்துவது என்பது எளிதான காரியமாகவே உள்ளது அதை குறிக்கோளாக கொண்டு செயல்படுபவர்களுக்கு. நீ என்ன வேலை செய்தாலும் உன் உடல், மனம், ஆத்மா அனைத்தையும் அர்ப்பணித்து விடு என்று கூறும் விவேகானந்தர் அதற்கான வழிமுறைகளையும் கூறுகிறார்.
நிமிர்ந்து விரைப்பாக அமர்ந்து கொண்டு மூச்சை இழுத்து இழுத்து விடுங்கள். இழுக்கும் போதும் , விடும் போதும் ஓம் என்று மனதிற்குள்ளாக சொல்லுங்கள். இவ்வாறு தினமும் இரு வேளை அரை மணி நேரம் செய்யுங்கள்.

No comments: