தனது 100 வது போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து தனது அணிக்கு வெற்றி தேடி தந்திருக்கிறார். ஆஷஸ் தோல்விக்கு பிறகு இருந்த கெட்ட பெயரை குறைக்க இது உதவும். இந்த அளவு ஆட்ட திறனை தொடர்வது மிக கடினம் என்ற பொழுதும், வயது, ரன் குவிக்கும் விதம், மற்ற அணிகளின் பந்து வீச்சாளர்களின் தரம் என்று அனைத்தையும் வைத்து பார்க்கும் போது, சச்சினின் சாதனை முறியடிக்க படும் என்பதில் சந்தேகம் இல்லை.
சச்சின் ரசிகர்கள் கோபப் பட்டாலும், அவர் தன்னுடைய ஆட்டகாலத்தின் இறுதி கட்டத்தில் இருக்கிறார். அவரால் லாராவின் அதிக ரன் சாதனையை நெருங்க முடியுமா என்பது சந்தேகமே.
2 comments:
சச்சின் நீண்டகாலமாக விளையாடிவருவதாலும், சிறுவயதிலேயே புகழ்பெற்றுவிட்டதாலும் அவர் வயதுபோனவராகத் தோன்றுகிறாரோ என்னவோ? பொண்டிங்குக்கும் சச்சினுக்கும் ஒருவயதுமட்டுமே வித்தியாசம்.
ஆனால் சச்சினின் சாதனையை பொண்டிங் நெருங்குவார் அல்லது முறியடிப்பார் என்பதில் எனக்கும் சந்தேகமில்லை. அதில் வயது சம்பந்தப்படுவதைவிட, நடைமுறைக்காலத்தில் பெறும் ஓட்டஎண்ணக்கைதான் அதிக செல்வாக்குச் செலுத்துகிறது. கடந்த ஏழு போட்டிகளில் ஐந்து சதங்கள் பெற்றுள்ளார் பொண்டிங். சச்சினின் நிலைமையோ அதற்கு எதிர்மாறு. இப்படியே இருவரும் தொடர்ந்தால் தொடர்ந்தால் பொண்டிங் சாதனையை முறியடிக்கப்போவது உறுதி. ஆனால் சச்சினுக்கு குறிப்பிட்ட வயதுவரை அணியில் இடம் உறுதி. ஆனால் பொண்டிங்குக்கு அப்படியில்லை. ஒவ்வொரு போட்டியிலும் தன் இடத்தைத் தக்கவைக்கப் போராடியே ஆகவேண்டும். பொண்டிங் இன்னும் 5 வருடம் விளையாடினால் நிலைமை வேறு.
வாழ்த்துகள். பாண்டிங் தன் வாழ்வில் மிக அற்புதமான நேரத்தில் இருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக அருமையாக விளையாடி வருகிறார், அவரால் பல சாதனைகள் படைக்க முடியும்.
வயதும் உதவியாக இருக்கும். அதே நேரம் சச்சின் தன் பழைய திறனை அடைவார், ஆக லாரா, பாண்டிங், சச்சின் மூவரும் ஓடுகிறார், யார் முதலில் வருகிறார்கள் என்பது இனிமேல் தான் தெரியும்.
மூவருக்கும் என் வாழ்த்துகள்.
Post a Comment