Monday, January 16, 2006

0+15 < 25 கணக்கு சரியா?

1.கடந்த பாராளுமன்ற தேர்தலில் வைத்து பார்க்கும் போது அ.தி.மு.கவுக்கு ஒரு சீட் கிடைக்கவில்லை.ஆனால் அது உண்மையான ஆதரவை பிரதிபலிக்கிறதா?.2. அ.தி.மு.க வை விட சிறிய கட்சிகளான பா.ம.க, ம.தி.மு.க, காங்கிரசு, கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றுள்ளன்.
3. ஆக மொத்தமாக தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் இணைந்து பெற்ற தொகுதிகள் 15. மற்ற கட்சிகள் வசம் உள்ள் தொகுதிகள் 25. இது தான் இந்த கட்சிகளின் பலமா?.கண்டிப்பாக இல்லை.
4. பெரும்பான்மையானவர்கள் நினைப்பே ஜனநாயகம் என்றால் இந்த நிலை உண்மையான ஜனநாயகமா?. இங்கே சிறு கட்சிகள் அல்லவா கூடுதல் பலம் பெற்றுள்ளனவே?
அடிப்படையிலேயே எங்கோ தவறு நடந்து விட்டது. அதை கண்டுபிடிக்கும் வழி சொல்லுங்கள். இந்த குளறுபாடுகளின் காரணமாகத்தான் இராமதாசு போன்றவர்களை, வைகோ போன்றவர்களை எல்லாம் நாம் சகித்து கொள்ள வேண்டியிருக்கிறது. அரசியல் வோட்டு வேட்டையிலுருந்து மாறி உண்மையான ஆதரவை பிரதிபலிக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.
(ஒரு சிறு குறிப்பு).உண்மையில் தி.மு.க , அ.தி.மு.க இரு கட்சிகளும் தொகுதி உடன்பாடு(20+20) செய்து கொண்டால் , 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம். அது இரண்டு கட்சிகளுக்கும் இப்போது இருக்கிற பாராளுமன்ற தொகுதிகளை விட அதிகமே...
இந்த இரண்டு கட்சிகளும் உடன்பட்டால், எளிதாகவே தமிழக அரசியல் அசிங்கங்களான ம.தி.மு.க,பா.ம.க, காங்கிரசு அனைத்தையும் காலி பண்ணிவிடும்.

8 comments:

ஜோ/Joe said...

// ஆக மொத்தமாக தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் இணைந்து பெற்ற தொகுதிகள் 15. மற்ற கட்சிகள் வசம் உள்ள் தொகுதிகள் 25. இது தான் இந்த கட்சிகளின் பலமா?.கண்டிப்பாக இல்லை.//

என்னே ஒரு கண்டுபிடிப்பு

//(ஒரு சிறு குறிப்பு).உண்மையில் தி.மு.க , அ.தி.மு.க இரு கட்சிகளும் தொகுதி உடன்பாடு(20+20) செய்து கொண்டால் , 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம்.//

இது சிறு குறிப்பா? மிகப்பெரிய ஆராய்ச்சி!

//எளிதாகவே தமிழக அரசியல் அசிங்கங்களான ம.தி.மு.க,பா.ம.க, காங்கிரசு அனைத்தையும் காலி பண்ணிவிடும்.//

அடேங்கப்பா! அ.தி.மு.க ,தி.மு.க எல்லாம் அரசியல் புனிதர்களோ?
------------------------------------------------------

ஒரே வாரத்துல 100 பதிவு போட்டு காட்டுறேந்னு யார்கிட்டயாவது சபதம் போட்டுருகீங்களா சார்? பின்னூட்டம் ரேஞ்சுக்கு பதிவா போட்டு தள்ளுறீங்க!

பாலசந்தர் கணேசன். said...

அன்புள்ள் கடற்புரத்தான் ஜோ அவர்களே,
1.என்னுடைய ப்லாகிறு வருகை தந்தமைக்கு நன்றி. இதை கண்டு பிடிப்பு என்று நான் சொல்லவில்லை.
இது தான் உண்மையான நிலமையா என்றால் இல்லை. இது ஒரு முரண்பாடாக படவில்லையா?

2.அ.தி.மு.க வும் தி.மு.கவும் இரண்டு பக்கமும் மாறி மாறி ஒடுகின்ற அனைவரையும் விட மேல்.

3. என்னுடைய பதிவுகள் மிக அளவில் சிறியவையே. எண்ணிக்கையை மற்றும் பார்க்காதிர்கள்.

மீண்டும் நன்றி.

ஜோ/Joe said...

//அ.தி.மு.க வும் தி.மு.கவும் இரண்டு பக்கமும் மாறி மாறி ஒடுகின்ற அனைவரையும் விட மேல்.//

அந்த அனைவரையும் விட மாறி மாறி ஓடுகின்ற தேவை தி.மு.க ,அ.தி.மு.க -க்கு தான் அதிகம் .நேற்று 3 பா.ம.க M.L.A -க்கள் அ.தி.மு.க -வுக்கு இழுக்கப்பட்டது தெரியாதோ?

அ.திமு.க வும் தி.மு.க வும் ஓடாத ஓட்டமா?தனியா நின்னா நாறிப் போயிடும்னு அவங்களுக்கு நல்லா தெரியும் .அதுக்காக அவங்க ரெண்டு பேரும் கூட்டணி வைக்காலாம்னு உங்க மேற்படி ஜோக்கை சொல்லாதீங்க.

ஜோ/Joe said...

// என்னுடைய பதிவுகள் மிக அளவில் சிறியவையே. எண்ணிக்கையை மற்றும் பார்க்காதிர்கள்.//

இதோ உங்கள் பதிவு ஒன்றின் முழுப்பகுதி கீழே
--------------------------------
ரஜினி ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி அப்படின்னா, ஒரு விஷயத்தை ரஜினி 108 தடவை சொல்லணும்னா என்ன பண்ணுவார்?
----------------------------------

என்னங்க இது? ஒரு பின்னூட்டத்துக்கு கூட லாயக்கு இல்லாத இதை ஒரு பதிவா போட்டு ...எரிச்சல் தாங்க வந்துச்சு .உங்க நல்லதுக்குத் தான் சொல்லுறேன்..நல்லா இருங்க!

பாலசந்தர் கணேசன். said...

அன்புள்ள கடற்புரத்தான் அவர்களே,
1. அடிபடையான கேள்வியை மீண்டும் நினைத்து பாருங்கள். பெரிய கட்சிகளான இந்த இரண்டையும் விட மற்ற கட்சிகள் அதிக இடங்கள் பெற்றிறுப்பது ஜனநாயகத்தை கேலிகூத்தாக ஆக்கவில்லையா?

2. தனியாக நின்றாக் நாறி போவது தி.மு.க, அ.தி.மு.க . ஆனால் கூட்டணியில் நாறுவது ஜனநாயகம்.30 சதவிகிதம் ஒட்டு வாங்கிய கட்சிக்கு பிரதிநிதிகள் இல்லாமல் இருக்கிறது. ஆனால் மற்ற சிறிய கட்சிகள் 25 உறுப்பினர்கள் பெற்றுள்ளன் . இதுவா ஜனநாயகம்.

ஜனநாயகம் நாறுவதைதான் நான் தடுக்க விரும்புகிறேன். பா.ம.க, ம.தி.மு.க அழிவது தமிழகத்திற்கு நல்லது.

உங்கள் அறிவுரைக்கு நன்றி. இனிமேல் இந்த மாதிரி குட்டி ஆர்டிகிளை நான் அவாய்ட் செய்கிறென்.

ஜோ/Joe said...

//ம.தி.மு.க அழிவது தமிழகத்திற்கு நல்லது//
ஏங்க! வை.கோ ஜெயில்ல இருந்த போது பஸ்ஸை கொளுத்த தெரியாததாலா?

//உங்கள் அறிவுரைக்கு நன்றி. இனிமேல் இந்த மாதிரி குட்டி ஆர்டிகிளை நான் அவாய்ட் செய்கிறென்.//
நல்ல முறையில் புரிந்து கொண்டதற்கு நன்றி!

பாலசந்தர் கணேசன். said...

இல்லை அவர் ஜெயிலுக்கு போனதுக்கான காரணத்துக்காக

ஜோ/Joe said...

//இல்லை அவர் ஜெயிலுக்கு போனதுக்கான காரணத்துக்காக//
ஓ..புரிஞ்சு போச்சு..வாழ்க ஜனநாயகம்!