Thursday, January 26, 2006

தி.மு.க அணியின் தொகுதி பங்கீடு.

ஜூனியர் விகடனில் வெளி வந்த பட்டியல் வெறும் ஊகமாக கூட இருக்கலாம். ஆனால் தி.மு.க குறைந்த பட்சம் 138 தொகுதிகளில் போட்டியிட முயலும் என்பது நம்பகமாகவே உள்ளது. தி.மு.க அணி தேர்தலை நோக்கி செல்ல செல்ல குழப்பம் அதிகரித்து கொண்டே செய்கிறது. தொகுதி பங்கீடு, தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்த தொகுதியில் போட்டியிடுவது போன்ற பிரச்சனைகள் நிறைய.எல்ல கட்சிகளிலும் அதிருப்தியாளர்கள் வரலாம். கட்சி அதிருப்தியாகி வெளியேறலாம். இது போன்ற பிரச்சனைகள் சென்ற முறை எழவில்லை. ஜெயலலிதா கூட்டணியை பொறுத்தவரையில் தெளிவாகவே இருக்கிறார். அ.தி.மு.க வுகு மட்டுமே தொகுதிகளை பொறுத்தவரையில் முன்னிரிமை. சென்ற முறை அவர் கூட்டணி தலைவர்கள் யாரையும் கேட்காமல் முதலாக அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியிட்டார். பாண்டிசேரியை பா.ம.க விற்கு கொடுத்தார்.(பின்னர் காங்கிரசு அங்கு மட்டும் தனித்து போட்டியிட்டது)
இந்த முறை கலைஞர் அந்த அளவுக்கு கடுமையாக இருக்க முடியுமா என்பது சந்தேகமே. எண்ணிக்கை திருப்தி அளிக்காத பட்சத்தில் ம.தி.மு.க வெளியேறும். கலைஞர் இதை சமாளிப்பதில் தான் இந்த தேர்தலின் வெற்றியை நிர்ணயிக்கும் அம்சமாக அமையும்.

No comments: