Sunday, January 29, 2006

இது தான் ஜனநாயகமா?

ஏற்கனவே நான் எழுதிய 0+15 என்பது 25 க்கு குறைவு கணக்கு சரியா என்ற பதிவினை நிறைய பேர் தவறாக புரிந்து கொண்டு கிண்டல் அடித்தனர்
ஆனால் இப்போது குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவி ஏற்றுவிட்ட நிலைமையில் மீண்டும் நமது ஜனநாயக தேர்வு முறைகளில் உள்ள குறைபாடுகளை காண்பது அவசியமாகின்றது.

கர்நாடகாவில் தனி பெரிய கட்சியான பா.ஜ.க இன்னும் ஒரு முறை கூட முதல்வர் பதவியை எட்டவில்லை. இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரசு மூன்றாவது கட்சியான ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சி அமைத்தது. இப்போது அந்த அரசை கவிழ்த்து விட்டு மூன்றாவது பெரிய கட்சி , பா.ஜ.க உதவியோடு ஆட்சி அமைத்துள்ளது. இன்ன்மும் 20 மாதம் சென்று பா.ஜ.க ஆட்சி பீடத்தில் அமருமாம். அப்படி உண்மையில் நடந்து விட்டால் தனி பெரிய கட்சி, இரண்டாம் பெரிய கட்சி, மூன்றாம் பெரிய கட்சி என்று அனைவரும் ஆட்சி பீடத்தை தொட்டிருப்பார்கள். இது தான் ஜனநாயகமா? இது தான் பெரும்பான்மை மக்கள் கருத்தா?.
பெரும்பான்மை மக்க்கள் கருத்தினை நாம் சரியான முறையிலே அளவிடுகிறோமா? தொகுதி வாரியாக தேர்தல் நடை பெறுகிறது. ஆனால் எல்லா தொகுதியிலும் மக்கள் தொகை ஒரே அளவிலா உள்ளது?கூட்டணி அமைத்து கொண்டு இந்த கட்சிகள் ஜனநாயகத்தை எக்ஸ்ப்லாயிட் பண்ணுகின்றன.
சற்று எளிமையாக இல்லாவிட்டாலும் ஒட்டு விகிதத்திற்கு நேர் விகிதத்தில் கட்சிகளுக்கு சீட்கள் அளிக்க பட வேண்டும். இது கூட நூற்றுக்கு நூறு சரி என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போது இருக்கிற முறைக்கு இது எவ்வளவோ பெட்டர். இதன் மூலம் பா.ம.க மற்றும் ம.தி.மு.க போன்ற பொடியன்கள் அதிக முக்கிய துவம் பெறுவது தவிர்க்க படும். அது தான் உண்மையான ஜனநாயகம். தமிழகத்தில் அ.தி.மு.க ஒரு இடம் கூட இல்லாமல் இருக்க காஙிரசு , ம.தி.மு.க. , பா.ம.க மற்றும் கம்யூனிஸ்ட் போன்றவை 25 சீட்கள் பெறுகின்ற குளறுபடிகளை தவிர்க்க முடியும்.


No comments: