ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும், பொதுவாகவே ஜெயலலிதா ஆட்சியின் மீது மக்கள் திருப்தி அடைந்துள்ளார்கள் என்றும், விஜயகாந்த் ஜெயலலிதா கூட்டணி அமைந்தால் அது தி.மு.க வை பெரிதும் பாதிக்கும் என்றும் லயோலா கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
இவர்கள் சென்ற தேர்தலின் போது தெரிவித்த கணிப்புகள் தவறாகவே அமைந்தன. போன சட்டமன்ற தேர்தலில் இவர்கள் மட்டுமல்ல , அனைத்து பிரபல பத்திரிக்கைகளும் தவறாகவே கணித்திருந்தன.
முதலில் கருத்து கணிப்பு மூலம் விஜயகாந்த் கட்சியின் செல்வாக்கினை கண்டறிவது மிக கடினமானது. பாரம்பரியமாக கட்சி அடிப்படையிலும், ஜாதி அடிப்படையிலும் வாக்களித்து வருகின்ற மக்களிடம் புதியதாக ஒரு கட்சி எடுபடும் என்பது நடைமுறையில் சாத்தியமாகாத ஒன்று என்பது என் கருத்து.
தி.மு.க கூட்டணி போன முறை எடுபட்டதற்கான காரணங்களில் ஒன்று தொகுதி பங்குபாடு எளிதாகவே முடிந்தது. இந்த முறை அதிலே நிறைய சிக்கல் வரும். பா.ம.க, காங்கிரசு போன்றவை நிறைய எதிர்பார்த்தாலும் கலைஞர் அதை சமாளித்து விடுவார்.ஆனால் ம.தி.மு.க மிகவே முரண்டு பிடிக்கும் என்றே தோன்றுகிறது.இத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்று தெரியாத நிலையிலேயே, ம.தி.மு.க பேச்சாளர்கள் மிக கடுமையாக கலைஞரை தாக்குகிறார்கள். கூட்டணியில் இருந்து வெளியேற இவர்கள் காரணங்கள் உருவாக்கிறார்கள் என தோன்றுகிறது.
ம.தி.மு.க வெளியேறினால் அது தி.மு.கவுக்கு உண்டாக்குகிற பிரச்சினைகளை விட அனுகூலமாகவே இருக்கும் என தோன்றுகிறது. ஏனெனில் போனமுறை போல அல்லாமல் இந்த முறை பா.ம.க, காங்கிரசு, கம்யூனிஸ்ட் தி.மு.க அணியில் உள்ளன.எனவே தி.மு.க , வைகோவை விட்டு விட்டால் சுமை குறையும், பலம் கூடும் என்றே தோன்றுகிறது.
1 comment:
இதெல்லாம் என் போன்ற பாப்பார நாய்களின் கருத்துக் கணிப்பு. தமிழ்நாட்டில் பாப்பான்களைவிட மற்றவர்கள்தான் அதிகமென்பதை தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.
Post a Comment