வரவர குமுதம், விகடன் இரண்டும் விஷயமே இல்லாத வெற்று பத்திரிக்கைகள் ஆகிவிட்டன. சரியாகசொல்ல போனால் குமுதம் குப்பையாகி வெகு நாளாகி விட்டது. விகடன் அந்த வரிசையில் இப்போது சேர்ந்து விட்டது. தமிழில் வேறு நல்ல பத்திரிக்கைகள் இல்லாத நிலையில் விகடனும் சோரம் போனது எனக்கு மிகுந்த வருத்தம்.
1. தொடர்கதைகள் காணமல் போனது ஏன்?. நல்ல கதைகள் வந்தால் மக்கள் கண்டிப்பாக படிப்பார்கள்.2. ஒரு சில பக்கங்களே இரண்டு பத்திரிக்கைகளிலும் தேறுகின்றன.
உண்மையில் சொல்ல போனால் இப்போது நான் தமிழ்மண ப்லொகுகள் படிப்பதை நிறையவே விரும்ப்புகிறேன். தமிழ் பத்திரிக்கைகள் சரக்கு காலியாகி விட்டதா?
2 comments:
தமிழில் படித்து மகிழ நல்ல வெப்சைட்டுகள் அப்டீன்னு நெனச்சு முடிக்கறதுக்குள்ள, இப்டி போட்டுத் தாக்கிட்டீங்களே!
:-)
இரண்டு பத்திரிக்கைகளையும் படிக்க யாரும் வாங்குவதில்லை. எல்லாம் நடுப்பக்கத்தில் நமீதா படம் பார்க்கத் தான். இரண்டு பத்திரிக்ககளும் வண்ணத்திரை அளவுக்குத் தரம் தாழ்ந்து விட்டன
Post a Comment