Wednesday, January 25, 2006

5 நாட்கள் போட்டியிலும் மாற்றங்கள் தேவை.

ஒரு நாள் போட்டிகளில் புதுமைகள் பயன்படுத்த படும்போது 5 நாட்கள் போட்டியிலும் மாற்றங்கள் கொண்டு வரலாம். இரண்டாவது இன்னிங்ஸ் துவங்குவதற்கு முன்னர், ஒரு ஆட்டகாரரை மாற்றும் அதிகாரம் அளிக்க பட்டால், 5 நாள் போட்டியில் இன்னமும் விறுவிறுப்பாக இருக்கும். முதல் இன்னிங்சில் ரன்களை குவித்து விட்டு இரண்டாவது இன்னிங்க்சில் கூடுதால ஒரு பந்து வீச்சாளரை வைத்து அதிக விக்கெட்கள் எடுக்க அணிகள் முயற்சிக்கும். பந்து வீச்சு முற்றிலும் எடுபடாத போது தற்போதைய இரண்டு மாட்சுகள் மாதிரி உப்பு சப்பில்லாமல் ஆட்டங்கள் அமைவதை இந்த மாதிரியான புதுமைகள் தடுத்து நிறுத்தும்.

அல்லது கேட்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் ஒர் இன்னிங்க்சிற்கு இத்தனை ஒவர் என்பது நிர்ணயிக்க படலாம். (125 ஒவர்கள் ஒரு அணிக்கு முதல் இன்னிங்சில் ,100 ஒவர்கள் இரண்டாவது இன்னிங்சில்).
இதனால் சில சாதனைகள் குறையலாம். தனி வீரர்கள் 300,350 என்று ரன்கள் குமிப்பது மறையலாம். ஆனால் டிராவில் போட்டி முடியாது என்கின்ற பட்சத்தில் அணிகள் 5 நாள்கள் போட்டி ஆடுகின்ற விதமே மாறி விடும்.அல்லது தொடர்ச்சியாக மூன்று ஒரு நாள் போட்டி நடைபெற்றது மாதிரியாக 5 நாள் போட்டி மாறி விடலாம். ஆனால் என்ன?. இந்த மாதிரி வெற்றி தோல்வி இன்றி ஆடுவதற்கு பதிலாக இந்த மாற்றங்கள் ஆட்டத்தை விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் ஆக்கும்.

2 comments:

dvetrivel said...

என்னை பொருத்த வரையில் இப்போதிருக்கும் ஆட்டமுறையில் மாற்றம் தேவையில்லை. உதாரணம்: ஏற்கனவே நடந்த இந்தியா-பாகிஸ்தான் தொடர், Ashes தொடர், (மற்றும் பல).

தற்போழுது இந்தியா-பாகிஸ்தான் தொடரில் உள்ளது போல் மட்டமான பிட்சு போடும் நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் போர்டை தண்டிக்கலாம். மேட்ச்சின் வருவாயில் குறிப்பிட்ட சதவிகிதத்தை அபராதமாக ICC விதிக்கலாம்.

Unknown said...

நீங்கள் சொல்லுவது, ஒரு நாள் ஆட்டங்களில் உள்ளது போல விறுவிறுப்பாக்க வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன தான்.

பிட்சுகளை பொருத்த வரை, எனது யோசனை. நடு நிலை அம்பயர்கள் இருப்பது போல நடு நிலை பிட்ச் அமைப்பாளர்களை ஐசிசி நியமிக்கலாமே?