இலங்கை நிலைமை மீண்டும் மோசமான நிலைமைக்கு போய் கொண்டிருக்கிறது. இதை எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை. ஏனெனில் ஏற்கனவே அங்கு வருடக் கணக்கில் மோசமாகவே உள்ளது. இன கலவரம் ஒரு நாட்டை அழித்து நிர்முலமாக்கும் என்பதற்கு இலங்கை ஒரு நல்ல எடுத்துகாட்டு.
1984 -இல் இலங்கை தமிழர்களுக்கு இருந்த ஆதரவு மிக வலிமையானது. தமிழகம் முழுவதும் இலங்கை தமிழர்களுக்காக போரட்டமும் நிதி உதவி திரட்டுவதும் நடை பெற்றன.ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. அகதிகள் உயிர் மீது உள்ள பயத்தினால் இங்கே ஒடி வந்துள்ளனர். ராஜீவ் படுகொலைக்கு பின்னர் இங்கே ஆர்வம் குறைந்த நிலையில் இவர்களுக்கு என்ன உதவி கிடைக்கும் என்று தெரியவில்லை.
இரு இனங்களுக்கு இடையே வருகின்ற வெறுப்பு காலம் காலமாக இரு தரப்பு மக்களாலும் வளர்க்க பட்டு வருகிறது. இலங்கையில் இனிமேல் அமைதி என்பது வெறும் கனவாக இருந்து விடுமா?
மறுமுறை ஒரு முறை காண்போமா? என்று கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் ஒரு பாடலின் வரி நெஞ்சத்தில் தாங்க முடியாத ஒரு வலியை உண்டு பண்ணுகிறது. தாங்க முடியாத துயரம் என்பது பிரிவானால் வரும் வலி என்று ஒரு கவிஞன் சொன்னது நினைவுக்கு வருகிறது.
இங்கே நான் பார்க்கும் இலங்கை தமிழர்களிடம் அந்த வேதனை கண்களில் தெரிகிறது.
5 comments:
சும்மானாச்சும் பேசிக்கின்னு இருந்தால் சரியுங்களா....என்னா பண்ணப்போரீங்க உங்க சைடுல....
HiBala,
Great to read ur blogs ,looks like u have not changed much from Suraksha days,most of the themes remind me of the old discussions in suraksha.take care.
regards
Krishna(KK)
இது பற்றி சில வருடங்களுக்கு முன்னர் (போர் நிறுத்ததிற்கு முன்பு) நான் எழுதி வைத்திருந்த ஒரு கவிதையை தற்போது பதிவி செய்திருக்கிறேன்.
http://manamumninavum.blogspot.com/2005/11/blog-post_113338793400461627.html
கடவுளே, சண்டை சச்சரவுகள் நீங்கி எப்போதான் நிம்மதி பிறக்குமோ.
இது பற்றி சில வருடங்களுக்கு முன்னர் (போர் நிறுத்ததிற்கு முன்பு) நான் எழுதி வைத்திருந்த ஒரு கவிதையை தற்போது பதிவி செய்திருக்கிறேன்.
http://manamumninavum.blogspot.com/2005/11/blog-post_113338793400461627.html
கடவுளே, சண்டை சச்சரவுகள் நீங்கி எப்போதான் நிம்மதி பிறக்குமோ.
HI BALA
THANK YOU FOR POST
unnka maathree nalla tamil nadu tamilanal eennkaluikuu vethaaniyillum koncham santhosamm
Naanree
Post a Comment