Monday, January 30, 2006

தெய்வம் தந்த வீடு

பாடல்களில் வார்த்தை மறைந்தற்கு காரணம் என்ன?
தமிழ் கவிஞர்கள் பாடல்களில் வார்த்தைகள் தெளிவாக வரவேண்டும் என்று வலியுறுத்துவது இல்லையா?. அல்லது அவ்வாறு வலியுறுத்தும் வலிமை அவர்களுக்கு இல்லையா?. அல்லது இவர்கள் உண்மையில் தமிழ் மீது வைத்திருக்கும் பாசம் இவ்வளவு தானா?

வாழ்க்கையில் எல்லாரும் காம்ப்ரமைஸ் செய்து கொண்டு தான் வாழ்கிறோம். சகித்து கொண்டு போவது எல்லா இடத்திலும் நடக்கின்ற ஒன்றாக தான் உள்ளது. அவ்வாறு வாழாதவர்களை அதிகாரம் சகித்து கொண்டு போவதில்லை.இதற்கு அஞ்சியே எல்லோரும் விலை போகிறோமா? உணர்வுகளை பூட்டி வைத்து கொண்டு புளுங்கும் சராசரி மனிதர்கள் போல இந்த சினிமா கவிஞர்களுக்கும் புளுக்கங்கள் இருக்குமா?

நல்ல கதையொட்டி பாடல் எழுத முடியாமல் வெறும் பிம்பங்களாகிய கதாநாயகர்களை பாராட்டும் போது அவர்களுக்கு எங்கிருந்து கற்பனை வருகிறது?. மனதில் உண்மையான வீரர்களை, கதாநாயகர்களை நினைத்து கொண்டு எழுதுவார்களோ?

பழங்காலத்திலும் புலவர்கள், அரசர்களை புகழ்ந்து பாடி பரிசு பெற்று வாழ்ந்தது வரலாறு. அது தான் இன்றும் வேறு உருவில் தொடர்கிறதா? அதிரடி இசையும், பொருத்தமில்லா சூழ்நிலைகளும், வரண்டு போன கதாநாயகர்களை வைத்து பாடல் எழுதுவதே பெரிய விஷயம் ஆக தோன்றுகிறது.கண்டிப்பாக கவிஞர்கள் எதற்காக வந்தார்களோ, அந்த நோக்கம் நிறைவேறியிருக்காது.

"அவர்களில்" ஜெய்கணெஷ் வீட்டை விட்டு துரத்த படுவார். நடுவீதியை "தெய்வம் தந்த வீடு " என்று வர்ணித்து அவர் பாடுகிற பாட்டு நல்ல கற்பனை. அந்த பாடல் நல்ல கற்பனையும் கூட. இன்றைய நிலையில் தமிழ் பாடல்கள் "தெய்வம் தந்த வீட்டுக்கு சென்று விட்டனவோ?

1 comment:

Anonymous said...

Deivam Thantha Veedu padal varum padam "Avargal" Illai.

"Aval Oru Thodar Kathai"

Mohan P Sivam
Riaydh.