Sunday, January 29, 2006

திண்டிவனம் ராமமூர்த்தி.

வரும் தேர்தலில் தி.மு.க எங்களை அரவணைத்து சென்றால் தான் வெற்றி பெற முடியும். காங்கிரஸ் தயவு இல்லாமல் எந்த கொம்பனும் ஆட்சிக்கு வர இயலாது: இவ்வாறாக வீர முழக்கம் முழங்கியிருப்பவர் திண்டிவனம் ராமமூர்த்தி.
1.மற்றவர்கள் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் மட்டும் ஜெயித்து விடுமா?. இவ்வாறு வீரமுழக்கம் செய்யும் திண்டிவனம் தனியாக நின்று ஜெயிப்பாரா?. எதற்காக காங்கிரஸ் பிச்சை எடுக்க வேண்டும்?
2. காங்கிரஸ் கட்சிக்கு விழுகின்ற வோட்டுக்கள் காலம் காலமாக விழுபவை. அதனை வளர்க்க இந்த தலைவர்கள் என்ன செய்து வருகின்றார்கள்?.
இந்த வயதிலும் போராடும் கலைஞர்,தனியாளாக போராடும் ஜெயலலிதா, புதியதாக கட்சி துவங்கியுள்ள விஜயகாந்த் அனைவரும் உண்மையில் கட்சியை வளர்க்க ,புதுப்பிக்க , பாதுகாக்க போரடுகிறார்கள் கடுமையாக. காங்கிரஸ் தலைவர்கள் காலர் கசங்காமல், கூட்டணி முதுகில் ஏறி வெற்றி பெறுகிறார்கள். இதில் என்ன வேட்டி சவால்கள்?. இவ்வளவு முழக்கம் இடுகிற காங்கிரசு தனியாக நிற்க வேண்டியது தானே? அப்பொது தெரியுமே இவர்கள் செல்வாக்கு என்னவென்று...

No comments: