சிவாஜி என்ன கதை?
ரஜினியின் பெரும்பாலான படங்களின் கதை இந்த மாதிரியாக தான் அமைந்திருக்கிறது.
1. ரஜினி ஒரு சூப்பர் ஹீரோ. அவர் கெட்டவர்களை தண்டிப்பார்.
2. ஒரு ரஜினி ஆன்மிகவாதி.அவர் வாழ்க்கையை விட்டு ஒதுங்குவார். இன்னோரு ரஜினி ஒரு சூப்பர் ஹீரோ. அவர் கெட்டவர்களை தண்டிப்பார்.
ஷங்கரின் பெரும்பாலான கதைகள் இந்த மாதிரியாக அமைந்திருக்கின்றன.
1.ஹிரோ சாதாரணமானவர். அவர் கெட்டவர்களை தண்டிப்பார் (ஜென்டில் மேன், இந்தியன்,முதல்வன்)
2.ஹிரோ சாதாரணமானவர். அவர் கெட்டவர்களை தண்டிப்பார். அது அவருக்கே தெரியாது(அன்னியன்)
இப்போது, காமன் மினிமம் ப்ரொகிராம் படி இரண்டு கதை அமைப்புகளுக்கும் பொதுவான கதையை உருவாக்க வேண்டும்.( ரஜினி ,ஷங்கர் ரெண்டு பேரும் கதையை மினிமம் ஆக ஒரு ஃபார்மாலிட்டிக்காக வைத்து படம் எடுப்பவர்கள். இருவரும் இணைவதால் எவ்வளவு கஷ்டம் பாருங்கள்).
ரஜினி ஒரு சூப்பர் ஹீரோ அவர் கெட்டவர்களை தண்டிக்கிறார். ( இது ரஜினி ரசிகர்களுக்காக).இத்தோடு கதையை முடிக்க முடியாது. ஷங்கர் சுஜாதா போன்றவர்கள் புத்திசாலிகளாக காட்டப் பட வேண்டும். எனவே கதையை விரிவு படுத்த வேண்டும்.
சுதந்திர போராட்ட தியாகியான ரஜினி தன்னுடைய உறவினர்களால் பாதிக்க பட்டு, ஆன்மிக பாதையில் செல்கிறார். அவருடைய பையன் ரஜினி அப்பளம் போட்டு விற்பவர். வில்லன் மக்ள் ஷ்ரேயாவை காதலிக்கும் ரஜினி அவருக்கு பொடுகு இருப்பதை கண்டு பிடித்து அதை குணப் படுத்த அப்பா ரஜினியை அழைக்கிறார். அப்பா ரஜினி ஷ்ரேயாவின் பொடுகுகளை மந்திரம் சொல்லி நீக்கி விட , பையன் ரஜினி , 500 கோடி திருடிய 5 மத்திய மந்திரிகள் ,5 பைசா திருடிய 5 வயசு பையன்கள் 5 பேர் அனைவரையும் ரோட்டில் வைத்து கட்டி போடுகிறார்.
5 வயசுல 5 பைசா திருடறவன் தான் 50 வயசுல 500 கோடி திருடுவான். இவங்க எல்லாத்தையும் சுட்டாதான் நாடு உருப்படும் என்று கூறி அனைவரையும் சுட்டுதள்ளி விடுகிறார்,
இவ்வாறாக ரஜினியை ஒரு சூப்பர் ஹீரோ, ஆன்மிக வாதி, அனைவரையும் தண்டிப்பவராக காட்டி விடலாம். 5 பைசா திருடுபவனை தண்டிப்பதால் படத்திற்கு சங்கர் டச் வந்து விடுகிறது. எல்லாவகை பொடுகளை பற்றி 5 நிமிட டயலாக் போட்டு சுஜாதா தன்னுடைய அறிவியல் மேதாவி தனத்தை காட்டி கொள்ளலாம்.
இன்னும் டெவலப் பண்ணுவேன் கதையை...
3 comments:
மிக அருமையான கற்பனை. பேசாமல் நீங்கள் தமிழ் திரைப்பட கதாசிரியர் ஆக முயற்சிக்கலாம்.
karpanai romba nallairrukku..naan nalla sirichen. nandri
karpanai romba nalla irrunthuchu...padichavudan vaai vittu sirichen..good one
Post a Comment