உங்களில் ஒருவன்.
உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் அப்பா மாதிரி கடிதம் எழுத ஆரம்பித்திருக்கிறார் ஸ்டாலின். அப்பா அளவுக்கு தலைமை பண்பு, உழைப்பு போன்று எதுவுமே இல்லாவிட்டாலும் , ஸ்டாலின் மேற்கொண்டு தி.மு.க.வில் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அவரால் கருணாநிதி இல்லாமல் செயல் பட முடியுமா என்பது சந்தேகமே....
தி.மு.க வின் தலைமை பொறுப்பை அவர் ஏற்றால் , வைகோவிற்கு அது சாதகமாக முடியும். தி.மு.க. , அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் வோட்டு வங்கிகளை கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வருகின்றன.இரண்டு கட்சிகளும் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியவில்லை.
2006 தேர்தலை பற்றி அனைவரும் ஆவலாக பேசும் போது, என்னுடைய முதற்கட்ட கணிப்பு 2006 திராவிட கட்சிகளின் தனிப்பட்ட ஆட்சிக்கு முற்றுப்புள்ளியாக அமையும்.
2 comments:
//அப்பா அளவுக்கு தலைமை பண்பு, உழைப்பு போன்று எதுவுமே இல்லாவிட்டாலும்//
இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி தெக்க வந்து ஒரே கலாசுதானாமில்ல.. நல்லா வந்துகிட்டு இருக்கராருகிறாங்க?.,
//2006 திராவிட கட்சிகளின் தனிப்பட்ட ஆட்சிக்கு முற்றுப்புள்ளியாக அமையும்//.
?????!!!!
//2006 திராவிட கட்சிகளின் தனிப்பட்ட ஆட்சிக்கு முற்றுப்புள்ளியாக அமையும்//
இல்லை இந்த தேர்தலில் அந்த நிலை வரும் என நான் எதிர்பார்க்கவில்லை...
ஆனால் கூட்டணியில்லாமல் ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு வெற்றிபெற எந்த திராவிட கட்சியாலும் முடியாது
மற்றபடி ஸ்டாலினை வைத்து திமுக உடைய வேண்டிய அளவிற்கு ஏற்கனவே உடைந்துவிட்டது எனவே ஸ்டாலின் திமுக தலைவரானால் திமுக வில் எந்த சலசலப்பும் எழாது...
இனி ஸ்டாலினை வைத்து திமுக வை தாக்குவது பலவீனமான ஆயுதமே...
நன்றி
Post a Comment