Sunday, January 22, 2006

மீடியாவுக்கு ஏன் செல்ல பிள்ளைகள் இருக்க்கிறார்கள்

தற்போது ஒரளவு சிறப்பாக ஆடுகிற அணிகள் :ஆஸ்திரேலியா,இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா. இந்த அணியின் கேப்டனகளை ஒப்பிட்டு பார்க்கும் போது மற்றவர்கள் அளவுக்கும் பாகிஸ்தான் அணி தலைவர் ஆன இன்சமாம்-உல்-ஹக் பாரட்ட படவில்லை. உலக அணி தேர்ந்தெடுக்க பட்ட போது கூட இன்சமாம் அந்த அணியில் இடம் பெறவில்லை. பின்னர் சச்சினுக்கு பதிலாக அவர் தேர்ந்தெடுக்க பட்டார்.

கேப்டனாக ஆன பின்பு இன்சமாம் மிக சிறப்பாக ஆடுகிறார். எந்த காரணத்திலோ, மீடியா சில ஆட்டக் காரர்களை ஒதுக்கியே வைத்திருக்கிறது. முன்பாவது இன்சமாம் அடிக்கடி ரன் அவுட் ஆகி காமெடி செய்வார். இப்போது அதையும் குறைத்து விட்டார். தனது அணி ஒரு முறை உலக கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார். இன்னோரு முறையும் பாகிஸ்தான் உலக கோப்பை இறுதி சுற்றில் ஆடியதற்கும் பக்கபலமாக இருந்தார்.

சில விஷயங்கள் நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் போகின்றது. அவற்றில் ஒன்று மீடியாவுக்கு ஏன் செல்ல பிள்ளைகள் இருக்க்கிறார்கள்?

1 comment:

dvetrivel said...

செல்ல பிள்ளை, குள்ள பிள்ளையெல்லாம் இல்லை. ஆட்டத்தை பற்றி மட்டும் எழுத அனுமதித்து விட்டு, "ஆட்டத்திற்கு முன்பும் பின்பும் நடப்பதை பற்றி எழுதக் கூடாது" என்று சொல்ல முடியாது. அதே போல் கேட்கிற கேள்விக்கெள்ளாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்சமாம்மை பொருத்த வரையில், அவர் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் திறமை இல்லாததால் தான் இந்நிலமை...