பொதுவாகவே காங்கிரசு மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது, மாநில அரசுகளை கலைப்பது, மற்ற கட்சிகளை உடைப்பது, எதிர்கட்சி முதல்வர்களை படுத்தி எடுப்பது போன்ற காரியங்களை மீண்டும் மீண்டும் செய்து வந்துள்ளது. அது இப்போதும் தொடர்கிறது. பீகார், ஜார்கண்ட், கோவா போன்ற இடங்களில் முயற்சித்தார்கள். அது பூமராங்காக மாறி அவர்க்ளையே மீண்டும் தாக்கியது.
இப்போது தேவகவுடா கட்சியை உடைத்து தனி பெரும்பான்மை பெற முயன்றார்கள். எச்சரிக்கையான தேவகவுடா இப்போது மகனுடன் சேர்ந்து ஒரு நாடகம் ஆடுகிறார். காங்கிரசு அரசாங்கம் கர்நாடாகாவில் கவிழ்ந்து விடும் என்பதில் சந்தேகமில்லை. பொதுவாகவே தென் இந்தியாவில் அரசுகள் இவ்வாறு கவிழ்வது என்பது அரிதாகவே நடந்துள்ளது. பொதுவாகவே தென் இந்தியாவில் தேர்தல் முடிவுகள் தெளிவான ஆதரவாக அமையும். இந்த முறை அது நடக்கவில்லை. விளைவு தான் இந்த குழப்பங்கள். தரம்சிங் ஆட்சி மிக மட்டமாகவே இருந்தது என்பதால் , இந்த ஆட்சி கவிழ்வது பற்றி பொது மக்களிடம் ஒரு அதிருப்தியும் இருக்காது. கொஞ்சம் முயற்சி செய்தால் கூட குமாரசாமி இந்த அரசாங்கத்தை விட நல்ல பெயர் எடுத்து விடலாம்.
இதில் மிக பெரிய வேடிக்கை, காங்கிரஸ் தலைவர்கள் தேவகவுடாவை குடும்ப அரசியல் நடத்துகிறார் என்று குற்றம் சாட்டுவது. அது சரி எதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் என்பது தானே ஜனநாயகம்.
1 comment:
நீங்கள் சொல்வது உண்மைதான். நடப்பதெல்லாம் நாடகம் என்பதில் ஐயமில்லை.
குமாரசாமி சொல்கிறார் : நான் என் தந்தையின் வழியில் செல்கிறேன். இப்பொழுது அவர் கோவமாக இருக்கிறார். அவரை அசிங்கப்படுத்திய காங்கிரசுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கிறேன். விரைவில் என்னைப் புரிந்து கொள்வார்.
தேவேகவுடா : நிச்சயமாக என் மகன் என்னுடன் விரைவில் சேருவான்.
குமாரசாமி ஆட்கள் எல்லாரும் இப்போ கோவாவுல கொண்டாட்டம் போடுறாங்க. தேவேகவுடா பக்கம் இருந்த எம்.எல்.ஏக்களில் சிலர் கூட குமாரசாமி செஞ்சது சரீங்குற மாதிரி பேசத் தொடங்கீருக்காங்க.
தேவே கவுடா...யாருமே கவுக்க முடியாதா?
Post a Comment